தமிழினக் காவலர் – Dr Kalaignar Karunanidhi தமிழ் வெல்லும் Wed, 14 Aug 2019 07:25:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.15 தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு /2019/08/03/firstday-of-thai-month-is-tamil-new-year/ /2019/08/03/firstday-of-thai-month-is-tamil-new-year/#respond Sat, 03 Aug 2019 11:05:51 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=761 The post தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

பெரும் புலவரும் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவருமான மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியம் பிள்ளை, சைவ பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட கூட்டத்தில்,

“திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும், அதுமுதல் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாக பின்பற்றுவது என்றும், வழக்கத்திலுள்ள ஆங்கில ஆண்டுடன் 31 ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டுவரும் என்றும், அதனையே தமிழாண்டு என கொண்டாடுவது என்றும்” முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதற்குப் பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், சுரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.போ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி.ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக்கவிஞர் அகில இந்திய தமிழர் மாநாட்டில்,

“தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும்,

பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும்”அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தமிழ் அறிஞர் பெருமக்கள் எடுத்த முடிவுகளை முதலமைச்சர் பொறுப்பிலிருந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்கட்டமாக 1971-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நாட்குறிப்பிலும், 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசு அரசிதழிலும் வெளியிட்டு நடைமுறைப்படுத்தினார்கள்.

அடுத்த கட்டமாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள், “தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் “ என்பதற்கான மசோதா ஒன்றினை 1-2-2008 அன்று சட்டசபையில் தாக்கல் செய்து அனைத்து கட்சியினரும் ஏற்கும் வண்ணம் சட்டமாக்கி சரித்திர சாதனை ஒன்றை நிகழ்த்தினார். இதனை அனைத்து தமிழ் அறிஞர்களும், தமிழக மக்களும் வரவேற்று மகிழ்ந்தனர்.

The post தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/03/firstday-of-thai-month-is-tamil-new-year/feed/ 0
தமிழ்த்தாய் வாழ்த்து /2019/08/02/tamizhthai-vazhthu/ /2019/08/02/tamizhthai-vazhthu/#respond Fri, 02 Aug 2019 11:41:35 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=773 The post தமிழ்த்தாய் வாழ்த்து appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தமிழ்த்தாய் வாழ்த்து

அண்ணா மறைவுக்குப் பிறகு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தலைவர் கலைஞர், 1970-ம் ஆண்டு தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் புதிய ஆணை ஒன்றை பிறப்பித்தார். அதன்படி அரசு விழாக்கள், கல்வி நிலையங்களின் விழாக்கள் ஆகியவற்றின் தொடக்கத்தில் பாடப்படும் இறை வணக்கத்துக்குப் பதிலாக, மனோன்மணீயம் காப்பியத்தில் பெ.சுந்தரம்(பிள்ளை) எழுதிய “நீராருங் கடலுடுத்த” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படவேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, இன்றுவரையிலும் ‘நீராருங் கடலுடுத்த’ பாடல் அரசு விழாக்களிலும், கல்வி நிலைய விழாக்களிலும் பாடப்பட்டு வருகின்றது.

தமிழ் மொழியை வாழ்த்தும் இப்பாடலில், ‘ஆரிய போல் உலக வழக்கழிந் தொழிந்து’ என்று வரும் வரியை, வாழ்த்துப் பாடலில் ஒப்புமையும் வேண்டாம் பிறிதொரு மொழி அழிந்ததை குறிக்கவும் வேண்டாம் என சில வரிகளை நீக்கி அந்தப் பாடலை ‘தமிழ்த்தாய் வாழ்த்தாக’ பாடச் செய்தார் செய்தார் முதலமைச்சர் கலைஞர்.

The post தமிழ்த்தாய் வாழ்த்து appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/tamizhthai-vazhthu/feed/ 0
அய்யன் திருவள்ளுவருக்கு கலைஞரின் நன்றிக் கடன் /2019/08/01/thanks-to-ayyan-thiruvalluvar/ /2019/08/01/thanks-to-ayyan-thiruvalluvar/#respond Thu, 01 Aug 2019 11:46:50 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=793 The post அய்யன் திருவள்ளுவருக்கு கலைஞரின் நன்றிக் கடன் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

அய்யன் திருவள்ளுவருக்கு கலைஞரின் நன்றிக் கடன்

மனித சமுதாயத்திற்கு வாழும் வழியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துச் சொன்ன அறிவுப் பெட்டகம் திருவள்ளுவர். தமிழ்ச் சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் அவர். அவருக்கு இந்த மண்ணில் இதுவரை தோன்றியவர்களில் மிகப்பெரிய நன்றிக் கடன் செலுத்தியவர் கலைஞர் ஒருவர் மட்டுமே என்று சொன்னால் அது மிககையில்லை.

 

வள்ளுவர் கோட்டம்

1976-ம் ஆண்டு கழக ஆட்சியில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அய்யன் திருவள்ளுவருக்கு திராவிட கோவில்கள் பாணியில் வள்ளுவர் கோட்டம் என்னும் பெயரில் நினைவாலயம் ஒன்றை எழுப்பி தலைவர் கலைஞர் ஒரு அற்புத சாதனையை  நிகழ்த்தியுள்ளார். இங்கு 4000 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய கலையரங்கம் ஒன்று உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப் பெரியது எனலாம். மேலும் வள்ளுவர் கோட்டத்திற்குள் அழகிய புல்தரைகள் குளிர்ச்சியான சூழல் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் முகப்பிலும் அய்யன் திருவள்ளுவருக்கு ஒரு சிலையும் அதைச் சுற்றி அழகிய பூங்காவும் அழகூட்டுகிறது.

 

கன்னியாகுமரி முக்கடல்கள் சங்கமிக்குமிடத்தில் திருவள்ளுவருக்கு சிலை

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ரூசெல் செதுக்கத்தில் உள்ள ஓரியண்டல் மற்றும் ஆப்ரிகன் ஸ்டடிஸ் என்கிற பள்ளிக்கு வெளியே திருவள்ளுவருக்கு ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது. 

இதை நினைவில் கொணர்ந்து அதைவிட பிரம்மாண்டமாக கழக ஆட்சியில் 2000-ம் ஆண்டில் 133 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்துமாக்கடல் என முக்கடல் சந்திக்குமிடத்தில் கடற்கரையை யொட்டியுள்ள ஒரு தீவு பகுதியில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை ஒன்றை வானளாவிய உயரத்தில் நிறுத்தி உலகோர் பார்த்து பிரமிக்கும் வகையில் தலைவர் தலைஞர் அவர்கள் நிர்மாணித்துள்ளார்.

 

திருக்குறள் உரை

பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், மு.வ., காலிங்கர், பரிப்பெருமாள் ஆகியோர் குறளுக்கு உரை எழுதியது போல் தலைவர் கலைஞர் அவர்களும் 1330 குறட்பாக்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். என்பது கலைஞரின் தணியாத ஆசை.

 

குறளோவியம்

ஒவ்வொரு குறளுக்கேற்ப சிறு சிறு கதைகளை சிறப்பாக சித்தரித்து அதற்கேற்ற ஓவியம் வரையச் செய்து அந்த குறளின் பொருளை படித்தவுடன் எளிதில் புரிந்து கொள்ள 1956-ம் ஆண்டில் தொடங்கி சற்றொப்ப 30 ஆண்டுகால உழைப்பில் இதுவரை 354 குறட்பாக்களுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் குறளோவியம் தீட்டியுள்ளார்.

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில்,  திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.

 

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பு

பெங்களூர் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் சிலையை அங்குள்ள அல்சூர் ஏரி பூங்கா ஒன்றில் நிறுவி கன்னடர்களின் எதிர்ப்பால் கடந்த 18 வருடங்களாக திறக்கப்படாமல் மூடிக்கிடந்தது. இந்த சர்ச்சையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது குறித்து தமிழக முதல்வர் கலைஞரும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் தீவிரமாக கலந்து ஆலோசித்தார்கள்.

இறுதியில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கீடாக சென்னை அயன்புரம் ஜீவா பூங்காவில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை நிறுவலாம் என ஒருமித்த கருத்துக்கு வந்தனர். அதன்படி 9.8.2009 அன்று பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் கலைஞரும், 13,8.2009 அன்று சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை கர்னாடக முதல்வர் எடியூரப்பாவும் திறந்து சாதனை நிகழ்த்தினார்கள்.

 

அரசு அறிவிப்புப் பலகைகளில் திருக்குறள்

அரசின் தலைமைச் செயலகத் துறைகளிலும், துறைத் தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களிலும், நாள்தோறும் ஓர் ஆங்கிலச் சொல்லையும், அதற்குரிய தமிழ்ச் சொல்லையும், ஒரு திருக்குறளைப் பொருளுடனும், கரும்பலகையில் எழுதி வைக்க ஆணையிட்டவர் முதலமைச்சர் கலைஞர்.

 

அய்யன் திருவள்ளுவருக்கு அழகிய சிலை

தென்கடல் ஆடும் குமரியில், அய்யன் திருவள்ளுவருக்கு, அகிலமே கண்டு வியக்கும் அளவுக்கு, 133 அடி உயரத்தில், 7,000 டன் எடையில், மாபெரும் சிலை அமைத்து மரியாதை செய்தவர் தலைவர் கலைஞர்.

The post அய்யன் திருவள்ளுவருக்கு கலைஞரின் நன்றிக் கடன் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/01/thanks-to-ayyan-thiruvalluvar/feed/ 0
தமிழ் செம்மொழி அந்தஸ்து /2019/07/30/semmozhi-tamil/ /2019/07/30/semmozhi-tamil/#respond Tue, 30 Jul 2019 11:58:16 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=796 The post தமிழ் செம்மொழி அந்தஸ்து appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தமிழ் செம்மொழி அந்தஸ்து

செம்மொழி தமிழ்

1999 ஜனவரி 16-ம் நாள், சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர், “தமிழ் செம்மொழியா, இல்லையா? என்ற விவாதம், இனிமேலும் தேவை இல்லை. தமிழ்ச் செம்மொழிதான். நடுவண் அரசு அதை உடனடியாக அறிவிக்கவேண்டும்என்று வலியுறுத்தினார். 

கலைஞர் வலியுறுத்தலுக்கு இணங்க, 2004-ம் ஆண்டுச் செப்டம்பர் 17-ம் நாள் நடைபெற்ற நடுவண் அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணை, 2004 அக்டோபர் 12-ம் நாள் வெளியிடப்பட்டது.

தொன்மை, தனித்தியங்கும் தன்மை; பொதுமைப் பண்பு; நடுவு நிலைமை; பல மொழிகட்குத் தாய்; பட்டறிவு வெளிப்பாடு; பிறமொழித் தாக்கமின்மை; இலக்கிய வளம், உயர் சிந்தனை; மொழியியல் கோட்பாடு போன்ற சிறப்புமிகு தகுதிகளைக் கொண்டது நம் தமிழ்மொழி.

பரிதிமாற் கலைஞர், பரிதி என்றால் சூரியன்; மால் என்றால் நாராயணன்; கலைஞர் என்றால் சாஸ்திரி,

அவர்தான் சூரிய நாராயண சாஸ்திரி. இவர் தன்னுடைய பெயரை பரிதிமாற் கலைஞர் என்று தமிழில் மாற்றிக் கொண்டார். உலகத்தில் 6 செம்மொழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் தமிழ். அந்த 6 மொழிகளில் உயர்த்தன்மை உடையது தமிழ்மொழி மட்டுமே என்பதை கண்டுபிடித்து முதன்முதலில் சொன்னவர்தான் இந்த பரிதிமாற் கலைஞர்.

தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. திமுகவின் மூதாதையார் தம் அமைப்பான நீதிக்கட்சி 1918 மார்ச் 30, 31 தேதிகளில் நடத்திய தஞ்சை, திருச்சி பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டிலேயே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

1918 மார்ச் 18-ம் நாள் சென்னை பச்சையப்பன்  கல்லூரியில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டிற்காக கூடிய புலவர்கள் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி இருந்தனர்.

“உலகில் பிற நாட்டாரின் தாய்மொழியாய்த் தமிழ் இருந்திருக்குமே யானால் அது இந்நேரம் உலகப் பொது மொழியாய் அமைந்திருக்கும்” என்றார் நமது தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த அற்புதமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.

தலைவர் கலைஞரது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 12.10.2004 அன்று தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஆணை பிறப்பித்தது. இந்திய மொழிகளிலேயே அதிகாரப்பூர்வமாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்மொழி தான். 30.6.2008 அன்று முதலமைச்சர் கலைஞர் சென்னை திருவல்லிகேணியில் செம்மொழி தமிழ் ஆய்வு மைய நிறுவனத்தினை திறந்து வைத்தார்கள்.

சேரனும் சோழனும் பாண்டியனும் புலவர் பெருமக்கள் பலரும் தமிழ்ச் சான்றோர்களும் தமிழை வளர்த்தார்கள். ஆனால் தலைவர் கலைஞர் அவர்களோ பரிதிமாற் கலைஞரின் குரலை புதுடெல்லி வரை ஒலிக்கச் செய்து தமிழுக்கு செம்மொழி என்ற மகுடத்தை சூட்டினார் என்றால் அது மிகையல்ல.

மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மையத்தில் செம்மொழி தமிழ் மையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மத்திய செம்மொழி ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவியதுடன் அதற்கென சென்னை பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கி தலைவர் கலைஞர் உத்தரவிட்டார். இந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட மத்திய அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கியது. 250 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அலுவலகம் கட்டவும் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தவும் அறிஞர்களுக்கென குடியிறுப்பு வசதிகள் ஏற்படுத்தவும் திட்டமிட்டு அதற்கான மதிப்பீட்டினையும் தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து இப்போது முடங்கி கிடக்கிறது.

இந்நிறுவனத்தில் பட்டறிவுமிக்க சிறந்த அறிஞர்களைக் கொண்டு உரிய ஆய்வுகள் நடைபெற்று வந்தன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலெல்லாம்  கருத்தரங்குகள் பல நடைபெற்று சங்க இலக்கியங்கள் புத்தெழுச்சிப் பெற்று மலர்ந்தன.

இதுவரை எட்டு உலகத் தமிழ் மாநாடுகளையும் ஒருசேர நடத்தியது போல் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உவக்க கோவை மாநகரில் 2010 ஜூன் திங்களில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்திய பெருமை கலைஞருக்குண்டு. அத்துடன் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான செம்மொழிப் பூங்கா 14.11.2010-ல் திறந்து வைக்கப்பட்டது.

 கட்டாயப் பாடம்

இன்றைக்குத் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதற்குக் கலைஞர் அவர்களே காரணம். அண்ணா வழியில் கலைஞர் அவர்களும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையில் உறுதியானவர். 1967-68-ம் ஆண்டு, இளங்கலை வகுப்பில் தமிழைப் பயிற்றுமொழியாக்கி ஆணை பிறப்பித்தார் அறிஞர் அண்ணா. அவரைத் தொடர்ந்து,  1969-70-ம் ஆண்டில் இளம் அறிவியல் வகுப்பில் தமிழை பயிற்றுமொழியாக்கி ஆணை பிறப்பித்த முதலமைச்சர் கலைஞர், தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கினார். 

 

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ்

1996-ம் ஆண்டு, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழைப் பாடமொழியாக்கி ஆணை பிறப்பித்தார் முதலமைச்சர் கலைஞர். 

2006-ம் ஆண்டு, அனைத்துப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை, தமிழை ஒரு பாடமாகக் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றினார். 

தமிழில் பொறியியல் கல்வி

இந்தியாவிலேயே முதன்முறையாக, அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகங்களில், கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தமிழ் வழியாகக் கல்வி கற்க வகைச் செய்து ஆணையிட்டவர் தலைவர் கலைஞர். 

அனைத்துக் கல்லூரிகளும் choice based credit System எனப்படும், விருப்பம் சார்ந்த தகுதிப் புள்ளி முறையை, 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் முதலமைச்சர் கலைஞர். இதன்படி, பட்டப்படிப்பில் தமிழை முதல் பிரிவில் எடுத்துப் படிக்காத மாணவர்கள், நான்காம் பிரிவில் தமிழை ஒரு பாடமாகக் கட்டாயம் படித்தாக வேண்டும். தமிழ்நாட்டில், தமிழைப் படிக்காமல் பட்டம் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையைக் கொண்டுவந்தவர் தலைவர் கலைஞர்.

அரசுப் பணியில் தமிழுக்கு ஒதுக்கீடு

2010-ம் ஆண்டுச் செப்டம்பர் 30-ம் நாள், குறிப்பிட்ட அரசுப் பணிகளுக்குத் தேவையான அடிப்படைக் கல்வித் தகுதியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கி ஆணை பிறப்பித்தார் முதலமைச்சர் கலைஞர். 

 

அகரமுதலி

1974-ம் ஆண்டு அன்றைய கழக அரசால்செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்நிறுவப்பட்டு, மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1974 முதல் 1980 வரை முழுமையாக உழைத்தும் பாவாணர் அவர்களால்ஆசைமொழிவரைதான் எழுத முடிந்தது. 1981-ம் ஆண்டு, பாவாணர் மறைந்தார்

அதன்பின் 1985 ஜனவரியில், அவர் உருவாக்கிய முதல் தொகுதி நூல் வெளியிடப்பட்டது. 1989-ம் ஆண்டு, அகரமுதலித் திட்டத்துக்கு கலைஞர் அளித்த ஊக்கம் காரணமாக, இரண்டாம் தொகுதி உருவாக்கப்பட்டது. 1991 ஜனவரியில் தி.மு.க அரசு கலைக்கப்பட்டதன் காரணமாக, இப்பணியில் தொய்வு ஏற்பட்டு, பின்னர் 8.5.1992-ம் ஆண்டு வெளியிடப்பட்டது

13.5.1996-ல் கழக அரசு அமைந்த பிறகு, அகரமுதலி உருவாக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மூன்றாம் பாகம் உருவாக்கப்பட்டு, 25.2.1997-ல் வெளியிடப்பட்டது. “முதல்ஒளவரையிலான சொற்கள் தொகுக்கப்பட்டு நூல்களாகிவிட்டன.

இணையத்தில் தமிழ்

1999 ஃபிப்ரவரி மாதம், முதலமைச்சர் கலைஞரால், உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டு, கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டது. 

இணையத்தில் தலைவர் கலைஞர் அனுப்பிய தமிழ் வாழ்த்துச் செய்தியே, முதல் வாழ்த்துச் செய்தியாகும்

ஊர்திகளில் தமிழ்

ஊர்திகளில் காணப்படும் பதிவெண் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே

பயன்படுத்தப்பட்டு வந்தன. அவற்றைத் தமிழில் எழுதிக் கொள்ள அனுமதி வழங்கி ஆணையிட்டவர் முதலமைச்சர் கலைஞர். 

சென்னை பெயர் மாற்றம்

30.9.1996-ம் ஆண்டு, செப்டம்பர் 30-ம் நாள்,மெட்ராஸ்என்னும் பெயரைசென்னைஎன  மாற்றி ஆணையிட்டவர் முதலமைச்சர் கலைஞர். 

தமிழில் மருத்துவம்

ஏழை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், மருந்துச் சீட்டுகள் அனைத்தும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்று அரசு ஆணை

பிறப்பித்தவர் முதலமைச்சர் கலைஞர். இதன் காரணமாக, அரசு வெளியிடும் மாத்திரைகளுக்கான உறைகளில் தமிழ் இடம் பெறத் தொடங்கியது. 

தொடர்வண்டிகளில் தமிழ்

முதலமைச்சர் கலைஞர் எடுத்த முயற்சிகளின் விளைவாகவே தொடர்வண்டிகளில் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டன

தேர்வாணையம்

வினாத்தாள்கள் அனைத்தும், முதலில் தமிழும், அடுத்து ஆங்கிலத்திலும் அமைய ஏற்பாடு செய்தவர் தலைவர் கலைஞர்.

The post தமிழ் செம்மொழி அந்தஸ்து appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/30/semmozhi-tamil/feed/ 0
ஈழத் தமிழரும் கலைஞரும் /2019/07/29/kalaignar-and-eezham/ /2019/07/29/kalaignar-and-eezham/#respond Mon, 29 Jul 2019 12:25:56 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=801 The post ஈழத் தமிழரும் கலைஞரும் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

ஈழத் தமிழரும் கலைஞரும்

இலங்கையில், வாழையடி வாழையென வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் அனைத்து அரசியல் உரிமைகளையும் பாதுகாப்பையும் பெற்று, தன்மானத்துடனும் நிம்ம்மதியுடனும் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலைகள் அங்கே உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக, திராவிட முன்னேற்ற கழகம் பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து போராடி வருகிறது.

1956-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 29-ம் நாள், சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழகப் பொதுக்குழுவில் அறிஞர் அண்ணா அவர்களின் ஆணையை ஏற்று, இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை தலைவர் கலைஞர் அவர்கள் முன்மொழிந்தார். பொன்னம்பலனார் வழிமொழிந்தார்.

‘திமுக’வுக்குப் பெருமை

1976-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 31-ம் நாள், திராவிட முன்னேற்ற கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, ஃபிப்ரவரி 15-ம் நாள் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, “இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி காரணமாக இருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

அதற்குத் தலைவர் கலைஞர் அவர்கள், “ஆட்சிக் கலைப்புக்கு அதுதான் காரணம் என்றால், அதைவிடப் பெருமையான ஒன்று திமுகவுக்கு இருக்க முடியாது என பதிலளித்தார்.

1981-ம் ஆண்டு, இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த ஆகஸ்ட் 13-ம் நாள், “கொழும்புவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று தெரிவிக்கின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாகத் தோன்றுகிறது. வடகொழும்புவில் தமிழர் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. யாழ்ப்பானம் ரயில்கள் தாக்கப்படுகின்றன. அவற்றிலிருந்த தமிழ்ப் பயணிகளின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு, வண்டியை விட்டுத் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டுகிறேன்” என்று இந்தியப் பிரதமருக்கு தலைவர் கலைஞர் அவர்கள் தந்தி வழியே வேண்டுகோள் விடுத்தார்.

கலைஞர் கைது – தீக்குளிப்பு மரணங்கள்

1981-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள், இலங்கைத் தமிழர்களுக்கான பிரச்னையில் தலைவர் கலைஞர் அவர்கள் அன்றியிருந்த அ.தி.மு.க அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். கலைஞர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செப்டம்பர் 16-ம் நாள் கோவிலடி பிருந்தாவன், செப்டம்பர் 20-ம் நாள் திருச்சி மனோகரன், 22-ம் நாள் திருவாரூர் கிட்டு, பெருந்துறை முத்துப்பாண்டியன், 26-ம் நாள் கல்லாவி ராஜேந்திரன், மேல்மாயில் ஜெகநாதன், சென்னையில் மேரி உள்ளிட்ட பலர் தீயிட்டுக்கொண்டு உயிர் இழந்தனர். மேலும் பலர் கடுமையான தீக்காயங்களோடு உயிர் மீண்டனர்.

1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் நாள், வெளிக்கடைச் சிறைச்சாலைக்குள் நுழைந்த சிங்களவர், சிறையில் இருந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட 35 தமிழர்களை படுகொலை செய்தனர். அப்போது, தலைநகர் சென்னையில் 7 மணி நேரத்துக்குள் 8 லட்சம் பேரைத் திரட்டி தி.மு.க நடத்திய பேரணி, உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிக் பார்க்கச் செய்தது.

ஈழத்துக்காக பதவி விலகல்

1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் நாள், மத்திய – மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி, தலைவர் கலைஞர் அவர்களும் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களும் தங்களது சட்டப் பேரவை உறுப்பினர் பொறுப்புகளை விட்டு விலகினர். 

டெசோ

1985-ம் ஆண்டு மே மாதம் 13-ம் நாள், இலங்கையில் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக தமிழகத்தில் ‘தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்க வேண்டுமென்று முடிவெடுத்து, அந்த அமைப்பு உருவாகி அதன் தலைவராக கலைஞர் அவர்களும், உறுப்பினர்களாக பேராசியர், தமிழர் தலைவர் கி.வீரமணி, பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோர் இடம்பெற்றனர்.

1985 மே 16-ம் நாள், காஞ்சியில் நடைபெற்ற மறியல் போரில் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு கைதாகி, சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் தீர்ப்பைக் கேட்டுப் பொறுக்க முடியாத கழகக் காளை வேணு, பாலசுப்பிரமணியன் என்கிற பிராமண இளைஞர், தருமபுரி அப்புலு, வலங்கைமான் ரங்கன் போன்றோர் தீக்குளித்து உயிர் துறந்தனர்.

 

நாடு கடத்தல் ஆணை

 1985 ஆகஸ்ட் 23-ம் நாள், சந்திரகாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த அன்றைய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னையில் பேரணி நடத்தி, நாடு கடத்தும் செயல் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடருமென்று தி.மு.கழகம் மூலம் அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக நாடு கடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

1985-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 3-ம் நாள் கோவையிலும், 4-ம் நாள் திண்டுக்கல்லிலும், 5-ம் நாள் தூத்துக்குடியிலும், 6-ம் நாள் திருச்சியிலும், 7-ம் நாள் சேலத்திலும், 13-ம் நாள் வேலூரிலும் டெசோ அமைப்பின் சார்பில் மிகப்பெரிய பேரணிகளும் பொதுக்கூட்டங்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்டன.

1986-ம் ஆண்டு மே மாதம் 4-ம் நாள், டெசோ அமைப்பின் சார்பில் ‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாடு’ ஒன்றை மதுரையில் தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தினார். அதில், அகில இந்தியத் தலைவர்களான வாய்பாய், என்.டி.ராமாராவ், ஹெச்.என்.பகுகுணா, ராமுவாலியா, உபேந்திரா, அப்துல் ரஷீத் காபூர், ஜஸ்வந்த் சிங், ராச்சய்யா, சுப்பிரமணியம் சுவாமி, உன்னிகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அந்த மாநாட்டில் டி.யு.எல்.எஃப் சார்பாக அமிர்தலிங்கம், எல்.டி.டி.ஈ சார்பாக திலகர், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.இ.எல்.எஃப் சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக வரதராச பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அந்த மாநாட்டிலேயே பல்வேறு போராளி இயக்கப் பிரதிநிதிகளையும் தலைவர் கலைஞர் அழைத்து சகோதர யுத்தம் வேண்டாம் என்றும், அது நமது குறிக்கோளைக் குலைத்துவிடும் என்றும் உருக்கத்தோடு கேட்டுக்கொண்டார்.

பிறந்தநாள் நிதியுதவி

1986 ஜூன் 3-ம் நாள், தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் ரத்து செய்யப்பட்டு, அன்று உண்டியல் வழியே வசூலான 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதியை, ஈழத் தமிழ்ப் போராளி இயக்கங்களுக்குத் தலைவர் கலைஞர் பகிர்ந்தளித்தார்.

மீண்டும் 5 லட்சம் மக்கள் பேரணி

1987-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள், வடசென்னை அறிவகத்தில் தொடங்கி தந்தை பெரியார் சிலையருகில் நிறைவுற்ற ஐந்து லட்சம் மக்கள் கலந்துகொண்ட பேரணியில் தலைவர் கலைஞர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

1987 அக்டோபர் 16-ம் நாள், வீட்டுக் காவலில் இருந்த தளபதி கிட்டுவை காணச் சென்ற வைகோ, வீராசாமி, என்.வி.என்.சோமு ஆகியோர் கைது செய்யப்பட்டதற்காகத் தலைவர் கலைஞர் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக எட்டு மாநிலங்களின் முதல் அமைச்சர்களிடமும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் ஆதரவு கேட்டு கலைஞர் அவர்கள் தந்தி அனுப்பினார்.

 

மனித சங்கிலி

1987 நவம்பர் 6-ம் நாள், சென்னையில் ‘ஈழத் தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு’ சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்துகொண்ட மனித சங்கிலியை தி.மு.க நடத்தியது.

 

ராஜீவ்காந்தியுடன் பேச்சுவார்த்தை

1989-ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லியில் இரண்டு முறை சந்தித்து, ஈழத் தமிழர் பிரச்னை குறித்து முதலமைச்சர் என்ற முறையில் கலைஞர் அவர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

 1989 ஜூன் 15-ம் நாள், சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களை சந்தித்து இலங்கைப் பிரச்னை தொடர்பாக தலைவர் கலைஞர் அவர்களும் முரசொலி மாறனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 1989 நவம்பர் 5 மற்றும் 6-ம் நாட்களில் தமிழகத்தில் பேசிய ராஜீவ்காந்தி, “இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் கழக அரசுக்கும் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.

 

ராணுவத்துக்கு வரவேற்பு இல்லை

 1990-ம் ஆண்டு மார்ச் 30-ம் நாள், தமிழகச் சட்டப் பேரவையில் “இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படை தமிழகம் வந்தபோது, முதலமைச்சராக இருந்த கலைஞர் ஏன் வரவேற்கச் செல்லவில்லை?” என்று கேள்வியெழுப்பப்பட்டது.

 அதற்கு, இந்திய ராணுவம் இலங்கையில் எப்படி நடந்துகொண்டது என்பதைப் பற்றி 1988-ம் ஆண்டு பிரபாகரன் எழுதிய கடிதத்தைப் படித்துக் காட்டி, “இந்திய ராணுவத்தின் மீது கழகத்துக்கு அனைத்துவிதமான மரியாதையும் உண்டு. ஆனால்,இலங்கையில் அந்த ராணுவம் இலங்கைத் தமிழர்களை தாக்கி நசுக்கிட முயற்சித்தது என்பதால்தான் வரவேற்கச் செல்லவில்லை” என்று கூறினார். மேலும், “ராணுவம் மதிக்கத்தக்கது, மரியாதைக்குரியது. ஆனால், தவறு செய்யும்போது ராணுவத்தை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை” என்றும் விளக்கமளித்தார்.

 

ஈழ ஆதரவு – தி.மு.க அரசு கலைப்பு

1991-ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க அரசு நடந்துகொண்டது என்ற காரணம் கூறப்பட்டு, தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு கலைக்கப்பட்டது.

 

சட்டப் பேரவை தீர்மானம்

2008-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் நாள், தமிழக சட்டப் பேரவையில், “இலங்கையில் அமைதி ஏற்படுத்தப்படுவதற்காக அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை தலைவர் கலைஞர் முன்மொழிந்து நிறைவேற்றி வைத்தார்.

 

அறிவாலய தீர்மானம்

 2008-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் நாள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தலைவர் கலைஞர் அவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிப் பிரதமருக்கும் திருமதி சோனியாகாந்தி அம்மையாருக்கும் அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில், அன்றைய தி.மு.க அமைச்சர் டி.ஆர்.பாலுவை அழைத்துப் பேசிய பிரதமர், இலங்கைப் பிரச்னை குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

 

பிரதமருக்கு வேண்டுகோள்

 2008 அக்டோபர் 6-ம் நாள் காலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, புதுடெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கைத் தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் மன வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டுமென்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டார்.

 

அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டம்

 2008 அக்டோபர் 6-ம் நாள், சென்னை மயிலை மாங்கொல்லையில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து அனைத்துக் கட்சிகளின் சார்பில் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், “இலங்கைத் தமிழர் பிரச்னையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தமிழர்களுக்காக இயக்கம் நடத்துகிறவர்களும், தமிழ் மக்களும் ஒரே வடிவில் ஒரே உணர்வில் நின்று இந்த ஆபத்துக்கு விடை காண்போம்” என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்தார்.

 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் நாள், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி இலங்கைத் தமிழர் பிரச்னைக்குறித்து தலைவர் கலைஞர் அவர்கள் விவாதித்து அவர்களின் கருத்தறிந்தார்.

 

பிரம்மாண்ட மனித சங்கிலி

 2008 அக்டோபர் 24-ம் நாள், தலைநகர் சென்னையில் அதுவரை நடைபெறாத அளவுக்கு பிரம்மாண்டமான மனிதச் சங்கிலி ஒன்று இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்று நடைபெற்றது.

 2008-ம் ஆண்டு நவம்பர் 12-ம் நாள், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றினை தலைவர் கலைஞர் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றினார்.

 

பிரதமருடன் சந்திப்பு

 2008 டிசம்பர் 4-ம் நாள், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து வேண்டுகோள் விடுத்ததுடன், மத்திய அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 2008 டிசம்பர் 27-ம் நாள், தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெறற கழகப் பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ரூ.50 கோடி நிதியுதவி

 தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக நிதி ஒன்று திரட்டப்பட்டு, அதில் 50 கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்து, அந்தத் தொகையில் இருந்து உணவுப் பண்டங்கள், துணிகள், மருந்துப் பொருட்கள் மத்திய அரசின் உதவியோடு செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக வழங்கப்பட்டது.

 

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை

 2009-ம் ஆண்டு ஃபிப்ரவரி 3-ம் நாள், தலைவர் கலைஞர் உடல் நலம் குன்றியிருந்த நிலையில்கூட இலங்கைப் பிரச்னை குறித்து கழகத்தின் செயற்குழுவில் நீண்ட நேரம் உரையாற்றினார். கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோதே ‘இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளைக் கொண்டு அமைத்தார்.

 2009 ஃபிப்ரவரி 21-ம் நாள், சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தி.மு.க இளைஞர் அணியின் சார்பில் இலங்கைப் பிரச்னைக்காக ‘இளைஞர் சங்கிலி’ நடத்தப்பட்டது.

 2009 ஏப்ரல் 9-ம் நாள், சென்னையில் மகத்தான பேரணி நடைபெற்று, அதன் முடிவில் சேப்பாக்கத்தில் தலைவர் கலைஞர் உரையாற்றினார்.

 

வேலை நிறுத்தம்

 2009 ஏப்ரல் 24-ம் நாள், தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

 

உண்ணா நோன்பு

 2009 ஏப்ரல் 28-ம் நாள், அதிகாலை 5.45 மணியளவில் இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து, தலைவர் கலைஞர் அவர்கள் தனது உடல்நிலையைக்கூட கருத்தில் கொள்ளாமல் அண்ணா நினைவிடத்தில் உண்ணா நோன்பு மேற்கொண்டார்.

  

தொடர்ந்து போராடும் தி.மு.க

 இலங்கையில் போர் முடிந்த பின்னரும் கழகம் வாளாவிருந்து விடவில்லை. இலங்கைப் போரில் ராஜபட்சே அரசு நடத்திய  படுகொலைகள், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பான போர்க் குற்றங்கள், தமிழ்ப் பெண்களின் மீது பாலியல் வன்முறை நடத்திக் கொன்றொழித்த மாபாதகங்கள், குழந்தைகள் – முதியோர் ஆகியோரை இரக்கம் சிறிதுமின்றி கொன்று குவித்தக் கொடுமைகள் ஆகியவற்றைக் கடுமையாகக் கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு இப்போதாவது நியாயம் கிடைத்திட வேண்டும், அமைதியான வாழ்வுக்கு உத்தரவாதம் வேண்டும் என்பதற்காகவும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஜனநாயக ரீதியாகப் போராடிக் கொண்டிருக்கிறது.

 

போர்க் குற்றங்களுக்கு தண்டனை தேவை

 2011-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் நாள் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முதல் தீர்மானமாக, “இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, இலங்கைப்படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்திய அரசுக்கு கோரிக்கை

 2012-ம் ஆண்டு மார்ச் 1-ம் நாள், தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “கழகத்தின் நிலைப்பாடினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்தி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிக்கக்கூடாது” என்று வலியுறுத்தியிருந்தார்.

‘அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற கழகக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வர்கள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து கழகத்தின் நிலைப்பாட்டினையும் உலகளாவிய தமிழ் மக்களின் உணர்வுகளையும் எடுத்துரைத்தார்.

இதையடுத்து, தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 12.03.2012 அன்று எழுதிய கடிதத்தில், “இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் குறித்து அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பு கொண்டுள்ளோம்” என்று உத்தரவாதமில்லாத ஒரு நிலையைக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பதிலில் திருப்தியடையாத கழக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது குறித்துக் கூறும்போது, “பண்டித நேரு அவர்கள் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிப் பிரச்னையில் மேற்கொண்ட அணுகுமுறை, இந்திராகாந்தி அவர்கள் வங்கதேசப் பிரச்னையில் மேற்கொண்ட அணுகுமுறை ஆகியவற்றுக்கு மாறாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலில், ‘இலங்கை நமது அண்டை நாடு. அண்டை நாட்டின் பிரச்னைகளை நாம் புறக்கணித்துவிட முடியாது என்ற அளவுக்குத் தெரிவித்தது, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி நிலைகுலையச் செய்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 

தி.மு.க.வின் நிலைப்பாடு

 அந்த வகையில் 2012 மார்ச் 20-ம் நாள் நடைபெற்ற தி.மு.க உயர்நிலை செயற்திட்டக் குழு கூட்டத்தில் இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில், கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

 தி.மு.க முன்வைத்த வேண்டுகோளை மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் உணர்வுபூர்வமான ஒட்டுமொத்த வேண்டுகோளை ஏற்று ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென்று இந்த உயர்நிலை செயற்திட்டக் குழு மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

 

ஈழம் – தலைவர் கலைஞரின் உரை

2012-ம் ஆண்டு, தலைமைக் கழக அறிவிப்பின்படி ‘சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில், மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று சென்னைப் பெரவள்ளூரின் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞர் அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் ஒரு பகுதி.

 “நான், ஐந்தாண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, ‘உங்களுடைய நிறைவேறாத கனவு என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு நான, ‘இதுவரையில் நிறைவேறாமல் இருக்கின்ற கனவு, தமிழ் ஈழம்தான்’ என்று சொன்னேன். அது நிறைவேறாமல் போனதற்குப் பல காரணங்கள் உண்டு.உயிரையே துச்சமாக மதித்த விடுதலைப் போர் வீரர்கள், ஆயிரம் ஆயிரம் வீரர்கள் வீழ்ந்தும்கூட அது நிறைவேறாமல் போய்விட்டது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து புதிய குழப்பங்களை உருவாக்க விரும்பவில்லை. அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கட்டும். ஆனால், தமிழன் தலை நிமிர்ந்து வாழவேண்டும். அதற்கு, பழைய நிலைமைகளை எல்லாம் மறந்து புதிய நிலைமைகளை உருவாக்குவோம். அந்த நம்பிக்கையிலேதான் தமிழ் ஈழம் வேண்டும் என்ற அந்தக் கனவு நிறைவேற வேண்டும் என்று நான் முரசொலியில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். சிலர் இதை எதிர்த்துப் பேசினாலும்கூட, அவர்களையும் நம் பக்கம் இழுப்பதற்கேற்ற வகையில் ஆதாரங்களை எடுத்து எழுதிக் கொண்டிருக்கிறேன், வழங்கிக் கொண்டிருக்கிறேன். தமிழ் ஈழத்துக்கு இன்றைய நாள் புதிய எழுச்சி, புதிய உருவகம் ஏற்படுத்துகின்ற ஒரு கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று கருதுகிறேன்.

 நான் முதன்முதலில் சொன்னதைப்போல, இன்னும் எத்தனை ஆண்டுகளோ எனக்குத் தெரியாது. அதற்குள் மிச்சமிருக்கிற ஆண்டுகளில் தமிழ் ஈழத்துக்கான உரத்தை, அதற்கான பலத்தை, அதற்கான எழுச்சியை உருவாக்கிவிட்டுத்தான் உங்களிடமிருந்து அல்ல, இந்த உலகத்தைவிட்டே நான் விடைபெற விரும்புகிறேன். அத்தகைய எழுச்சி உருவாக, தமிழ் ஈழம் உருவாக, அமைதியான முறையில், அறவழியில், அண்ணா வழியில், அண்ணல் காந்தியடிகள் வழியில் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். அந்த அறப்போராட்டம், தமிழ் ஈழத்தை நமக்குத் தருகின்ற போராட்டமாக, அமைதிப் போராட்டமாக அமையும்.

 தமிழ் ஈழம் என்பது, ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தந்தை செல்வா அவர்கள் தலைமையில் உருவான கீதம். அந்தக் காலத்திலிருந்து அவரோடு இணைந்து திராவிட முன்னேற்ற கழகமும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், நானும், நம்முடைய நண்பர்களும் தந்தை செல்வா அந்தக் குறிக்கோளுக்காக அன்றைக்குக் கொடியேற்றினாரோ, அந்தக் கொடி நிழலில் நின்று தமிழ் ஈழம் பெற, தமித் தமிழ் ஈழம் பெற நாம் பாடுபட வேண்டும். இது, இலங்கையில் உள்ள அதிபர்களின் காதுகளில் விழுந்து அவர்கள் இதற்கு மறுப்புரைக்கலாம். ஆதிக்கக்காரர்கள், ஆதிக்கத்தை அவ்வளவு சுலபமாக விட்டுவிடமாட்டார்கள். ஆனால், நாம் அந்த ஆதிக்கவாதிகளிடம் இருந்து விடுபட்டு நம்முடைய தமிழன் தமிழனாக, தமிழ் மொழிக்கு உரியவனாக வாழ்கின்ற அந்த விடுதலை அவனுக்குக் கிடைக்கிற வரையில் போராடுவோம்.

 உங்களுக்கு நினைவிருக்கும். ஏற்கெனவே ‘டெசோ’ என்ற இயக்கத்தை நாம் நடத்தினோம். அந்த டெசோவை நாம் மீண்டும் தொடங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்கு நீங்களெல்லாம் உங்களுடைய ஆதரவைத் தரவேண்டும். தி.மு.க.வின் துணை அமைப்பாக டெசோ இருந்து, அந்த டெசோவிலே நானும் நம்முடைய பேராசிரியரும் வீரமணி போன்றவர்களும் அங்கம் வகித்து, இன்னும் யார் யாரையெல்லாம் இணைத்துக்கொள்ள வேண்டுமோ அவர்களையெல்லாம் இணைத்துக்கொண்டு அந்த டெசோ பணியாற்றும், பாடுபடும், போராடும். அறவழியில் ஆக்கப்பூர்வமாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கும். அதற்கு உங்கள் அன்பான ஆதரவு தேவை.

 இன்றைய கூட்டத்தில் எனக்கு இரண்டு லட்சியங்கள். ஒன்று, தமிழக சட்டப் பேரவையில் ஜனநாயகம் ஓங்க வேண்டும் என்பது. அது எப்போது என்று கேட்டால், இப்போதோ அல்லது மறுபடி நாம் ஆட்சிக்கு வரும்போதோ அதற்கு விடை காண வேண்டியவர்கள் நீங்கள். இரண்டாவது லட்சியம், தமிழ் ஈழம் பெறுவதற்கு இலங்கையில் உள்ளவர்கள் தங்களுடைய ஒப்புதலைத் தருவதற்கேற்ற வகையில் நாம் நம்முடைய சக்தியைத் திரட்ட வேண்டும். அதற்கு நம்முடைய மத்தியப் பேரரசும் ஆதரவை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை இந்த மாபெரும் மக்கள் சமுத்திரத்தில் நான் எடுத்துச் சொல்லி, உங்களுடைய அன்பான ஆதரவு தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ் ஈழத்துக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்”

The post ஈழத் தமிழரும் கலைஞரும் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/29/kalaignar-and-eezham/feed/ 0