இளஞ்சூரியன் – Dr Kalaignar Karunanidhi தமிழ் வெல்லும் Sat, 10 Aug 2019 09:31:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.15 பிறப்பு /2019/08/02/early-childhood/ /2019/08/02/early-childhood/#respond Fri, 02 Aug 2019 13:11:44 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1144 The post பிறப்பு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

பிறப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலிஎன்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில், 1924-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி, நாட்டுவைத்தியர் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் அவரது இல்லறத்துணைவியார் திருமதி அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார் கலைஞர் என்று உலகம் போற்றும் கருணாநிதி. அவருக்கு முன் பிறந்த தமக்கையர் இருவர், பெரிய நாயகம் மற்றும் சண்முகவடிவு.

 

பெற்றோரும் தமக்கையரும் சீராட்டி சீர்மிகு அன்பில் பாராட்டி வளர்த்ததில் போராட்ட குணமும், எதையும் ஆராய்ந்து கேள்வியெழுப்பும் பகுத்தறிவும், ஏற்றத்தாழ்வுகளை விரும்பாத சுயமரியாதை மிக்கவராகவும் வளர்ந்தார். சிறுவயது முதலே மான உணர்ச்சியும், கொண்ட கொள்கையில் பிடிவாதம் மிக்கவருமான கலைஞர், தந்தையார் ஏற்பாடு செய்த இசைப்பயிற்சி வகுப்பில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வை கண்டு இனி இசை வகுப்புக்கு செல்வதில்லை என்று தீர்மானமாக தன் தந்தையாரிடம் தெரிவித்ததை தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

The post பிறப்பு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/early-childhood/feed/ 0
கல்வி /2019/08/01/education/ /2019/08/01/education/#respond Thu, 01 Aug 2019 13:28:31 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1149 The post கல்வி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

இளமைப் பருவம் – கல்வி

திருக்குவளை கிராமத்தில் ஆரம்பக்கல்வியும், பின்னர் திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற கலைஞர், பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை மற்றும் சொற்பொழிவு ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் மாணவராக கலைஞர் சேர்ந்ததே வியப்பான நிகழ்வு. வயதின் காரணமாக அனுமதி மறுக்கப்பட, பள்ளியில் இடமளிக்கவில்லை என்றால் எதிரே இருக்கும் குளத்தில் வீழ்வேன் என்று தலைமை ஆசிரியரிடம் போராடி பள்ளியில் சேர்ந்தார். அந்தப் போராட்ட குணமே கலைஞரின் அடையாளமாக இறுதிவரை நிலைத்தது. 1939-ம் ஆண்டு, கலைஞர் எட்டாம் வகுப்பு படித்தபோது, பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், ‘நட்புஎன்ற தலைப்பில் பேசினார். இதுவே, கலைஞரின் முதல் மேடைப் பேச்சு.

விளையாட்டிலும் கலைஞருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஹாக்கி விளையாட்டு அவருக்கு மிகவும் பிடிக்கும். திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளி ஹாக்கி அணியில் கலைஞர் பங்கு பெற்றிருந்தார். கிரிக்கெட்டும் கலைஞருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. பிற்காலத்தில் அரசியல் பணிகளின் பரபரப்புக்கு இடையிலும் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் தொடர்ந்து கவனித்து வந்தார். 

The post கல்வி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/01/education/feed/ 0
14 வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் /2019/07/30/hindi-agitation-at-the-age-of-14/ /2019/07/30/hindi-agitation-at-the-age-of-14/#respond Tue, 30 Jul 2019 13:35:21 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=838 The post 14 வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

14 வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டம்

சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி, 1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள், பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கி ஆணை வெளியிட்டார். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடிக்க இதுவே காரணமாக அமைந்தது. இந்தித் திணிப்பை எதிர்த்து நீதிக்கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

 அப்போது திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்துகொண்டிருந்த கலைஞருக்கு, 14 வயது. தன்னுடைய கையில் தமிழ்க் கொடியை பிடித்துக்கொண்டு, இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவேஎன்று முழக்கமிட்டபடி சென்ற கலைஞர், மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது, இந்தி ஆசிரியரிடம் அடி வாங்கும் நிலை ஏற்பட்டது. அடி வாங்கினாலும் தமிழ் ஆர்வம் குறையாத கலைஞர், தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். 

The post 14 வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/30/hindi-agitation-at-the-age-of-14/feed/ 0
தமிழ்நாடு மாணவர் மன்றம் /2019/07/29/tamilnadu-students-association/ /2019/07/29/tamilnadu-students-association/#respond Mon, 29 Jul 2019 13:40:31 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=848 The post தமிழ்நாடு மாணவர் மன்றம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தமிழ்நாடு மாணவர் மன்றம்

தன்னுடன் பயின்ற பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, ‘இளைஞர் மறுமலர்ச்சி அமைப்புஎன்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் இந்த அமைப்பின் மூலம் நடத்தினார். போராட்டத்துக்கு மாணவர்களைத் திரட்டுவதற்காக, 1941-ம் ஆண்டு, தனது 16-வது வயதில், ‘மாணவ நேசன்என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். இதுவே பிற்காலத்தில் முரசொலி உருவாக வித்தாக அமைந்தது.
17 வயதில், ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு மாணவர் மன்றம், திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்ற சிறப்பைப் பெற்றது. க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகள் இந்த அணியில் இணைந்து செயல்பட்டனர்.

The post தமிழ்நாடு மாணவர் மன்றம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/29/tamilnadu-students-association/feed/ 0
மன உறுதி கொண்டவர் கலைஞர் /2019/07/28/kalainar-with-the-willpower/ /2019/07/28/kalainar-with-the-willpower/#respond Sun, 28 Jul 2019 13:16:33 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=822 The post மன உறுதி கொண்டவர் கலைஞர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

மன உறுதி கொண்டவர் கலைஞர்

சிறு வயதிலேயே தன்னம்பிக்கை மிக்கவராகவும், மன உறுதி
கொண்டவராகவும் விளங்கினார் கலைஞர்.

“பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் கிடையாது. நான்
சிறுவனாக இருந்தபோது, எனது நண்பன் தென்னனுடன் திருவாரூர்
குளத்தில் நீந்திக்கொண்டிருந்தேன். குளத்தில் நீந்தி மைய மண்டபத்தை
அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. பாதி தூரம்
கடந்துவிட்டோம். ‘என்னால் முடியவில்லை. திரும்பி விடலாம்’ என்றார்
தென்னன். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய
மண்டபம் என்றால் கால் பகுதிதான் நீந்த வேண்டும்’ என்று கூறினேன்.
இருவரும் நீந்தி மைய மண்டபத்தை அடைந்தோம். எதையும் பாதியில்
விட்டுச் செல்வது என் பழக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல்,
அரசியல் நான் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை” என்று தன்னுடைய
இளம்பருவ வாழ்க்கை குறித்து தனது நேர்காணல் ஒன்றில்
விவரித்திருக்கிறார் கலைஞர்.

The post மன உறுதி கொண்டவர் கலைஞர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/28/kalainar-with-the-willpower/feed/ 0
அரசியல் வாழ்க்கை /2019/07/27/political-journey/ /2019/07/27/political-journey/#respond Sat, 27 Jul 2019 14:17:06 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1153 The post அரசியல் வாழ்க்கை appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

அரசியல் வாழ்க்கை

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நீதிக்கட்சியின் தலைவராக இருந்து செயல்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் பேச்சு, கலைஞரைப் பெரிதும் ஈர்த்தது. இதன் விளைவாக, தனது மகன்களில் ஒருவருக்குஅழகிரிஎனப் பெயர் சூட்டினார்.

திருவாரூர் அரசியல் கூட்ட மேடை ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோதே அழகிரிசாமி அவர்கள் மயங்கி விழுந்தார், காசநோயால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தார். அதைக் கண்ட மக்கள் கூட்டம் அவரைத் தாங்கிப் பிடித்தது. அந்த கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன் “காசநோய் பீடித்த நீங்கள் இவ்வளவு ஆவேசமாக பேசலாமா? எனக்கேட்க, ‘என்னைவிட நாடு நோயில் இருக்கிறது, முதலில் அதை சரிப்படுத்த வேண்டும் ஆகவே தான் அப்படி பேசினேன்’ என்று பதில் கூறி இதை கண்டு நடுங்கிப் போனான் அந்த சிறுவன் வேறு யாருமில்லை கலைஞர் தான்!

இதேபோல், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஸ்டாலின் ஜோசப் மீதிருந்த பற்று காரணமாக, இன்னொரு மகனுக்குஸ்டாலின்என்று பெயர் சூட்டினார். தான், திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்திருந்தால், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்றும் கலைஞர் கூறியிருக்கிறார்.

The post அரசியல் வாழ்க்கை appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/27/political-journey/feed/ 0