தன்னிகரற்ற தலைவர் – Dr Kalaignar Karunanidhi தமிழ் வெல்லும் Sun, 18 Aug 2019 13:21:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.15 கை ரிக்சா ஒழிப்பு /2019/08/03/abolition-of-hand-rickshaws/ /2019/08/03/abolition-of-hand-rickshaws/#respond Sat, 03 Aug 2019 10:33:23 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=748 The post கை ரிக்சா ஒழிப்பு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

கை ரிக்சா ஒழிப்பு

ஒரு காலத்தில் சென்னையிலும், கடலூரிலும் 2000க்கும் மேற்பட்ட கைரிக் ஷாக்கள் ஓடிக்கொண்டு இருந்தன. சென்னை நகர தார்ச்சாலைகளில் உச்சி வெயிலில் கொழுத்த உருவம் கொண்ட ஒரு மனிதனை உட்கார வைத்து ஒட்டிய உடல் கொண்ட இன்னொரு வலுவிழந்த மனிதன் அந்த ரிக்சாவை இழுத்துச் செல்லும் கொடிய கட்சி நெஞ்சை உலுக்கக் கூடியதாக இருந்தது. இப்படி தினம் தினம் இந்த தொழிலில் அல்லல்படும் அந்த தொழிலாளி தமக்கு சைக்கிள் ரிக் ஷாவோ ஆட்டோ ரிக்சாவோ வழங்கிட வேண்டுமென கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.

இந்நிலையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 3.6.1973 முதல் அந்த கைரிக் ஷாக்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டி கைரிக் ஷா உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கியதுடன் அவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக் ஷாக்களையும் வழங்கினார்கள்.
சமூகத்தின் அடித்தளத்தில் கிடந்து உழலும் சாதாரண சாமான்ய நடுத்தர மக்களின் நல்வாழ்வைக் குறித்தே எந்நேரமும் சிந்தித்து செயலாற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனையில் பூத்த புரட்சிகரமான திட்டம் இது. மனிதாபிமானத்துடன் கலைஞர் எடுத்த நடவடிக்கை இது. மனிதனை அமர்த்தி மனிதனே இழுக்கும் அவலத்துக்கு கலைஞர் முற்றுப்புள்ளி வைத்த நாள் இது.

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் அப்போதைய ராஜாஜி மண்டபத்தின் முன்பாக நடைபெற்ற அந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் சைக்கிள் கைரிக் ஷாக்களை தலைவர் கலைஞர் கரங்களிலிருந்து இலவசமாக பெறுவதற்கு வந்த பாட்டாளி தோழர்கள் அதற்கு முன்பாக தாங்கள் இழுத்து வந்த கைரிக் ஷாக்களை அரசிடம் ஒப்படைத்தது கண்கொள்ளாக் காட்சியாகும்.

சைக்கிள் ரிக் ஷாக்களை கழக அரசு ஒழித்ததின் நினைவாக அந்த கைரிக் ஷாவினை கலைஞர் அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைத்ததையும் இவ்வேளையில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
தொழிலாளர்களின் உரிமைக்காக எந்நாளும் முழக்கமிடும் பொதுவுடமை இயக்கங்கள் ஆண்ட மேற்குவங்கத்தின் கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் கூட பல்லாயிரக்கணக்கானோர் இன்னமும் கைரிக் ஷாக்கள் இழுத்து பிழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

The post கை ரிக்சா ஒழிப்பு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/03/abolition-of-hand-rickshaws/feed/ 0
ஏழை எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா /2019/08/02/free-land-allotment-for-poor/ /2019/08/02/free-land-allotment-for-poor/#respond Fri, 02 Aug 2019 11:12:19 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=764 The post ஏழை எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

ஏழை எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

குடியிருப்போர் மனையை குடியிருப்போருக்கே சொந்தமாக்கி சட்டம் செய்தவர் கலைஞர்.தமிழகம் முழுவதும் இப்படி திமுக ஆட்சியில் 8 லட்சத்து 30 ஆயிரத்து 495 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.

கலைஞர் வீடு வழக்கும் திட்டம்

21 லட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றக்கூடிய கலைஞர் வீடு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ரூ.75 ஆயிரம் மானியம் வீதம் 2250 கோடி ரூபாய் செலவில் 3 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு 15.8.2010 முதல் பயனாளிக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் முதல் வீடு கடலூர் மாவட்டம் சிதம்பரம். அருகே வல்லம்படுகை கிராமத்தில் 9.10.2010 அன்று பயனாளிக்கு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 77 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 60 ஆயிரத்து 486 வீடுகளில், பயனாளிகள் குடிபுகுந்தார்கள்.

இத்திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்டமாக 2,98,162 வீடுகள் கட்டுவதற்கு பணி ஆணைகளும் வழங்கப்பட்டன. மேலும் 12 லட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டைகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நகர்ப்பகுதிகளில் நடுத்தர மக்களுக்கு சொந்த வீடுகள்

1972க்கு முன்பு நடுத்தர மக்கள் சொந்த வீட்டில் குடியிருப்பது என்பது பெரும் கனவாகவே இருந்தது.

நடுத்தர மக்களின் அந்த கனவை நிறைவேற்றிட தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் சென்னை மதுரை திருச்சி ஆகிய பெருநகரங்களுக்கு அருகில் அண்ணாநகர், கலைஞர் கருணாநிதி நகர், காமராஜர் நகர் முதலி புதிய புதிய குடியிருப்பு நகரப் பகுதிகள் உருவாக்கப்பட்டன.

குடிசை மாற்றுவாரியம்

சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் சேரிகள் நிறைந்திருந்தன. துப்புரவு வசதிகள் இன்றி நோய்கள் தாக்கப்பட்டு சேரி மக்கள் துன்புற்றனர்.

எனினும் சேரி மக்கள் எவரும் “எங்களுக்கு மாடி வீடு கட்டித் தர வேண்டும்” என கோரிக்கை வைத்திடவில்லை. ஆனால் அவர்கள் கேளாமலேயே குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முதலாக திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

The post ஏழை எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/free-land-allotment-for-poor/feed/ 0
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் எரிவாயு அடுப்பும் இணைப்பும் /2019/08/01/1kilorice1rs-freetv-freelpg/ /2019/08/01/1kilorice1rs-freetv-freelpg/#respond Thu, 01 Aug 2019 11:25:26 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=777 The post ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் எரிவாயு அடுப்பும் இணைப்பும் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் எரிவாயு அடுப்பும் இணைப்பும்

பகுதி நேர நடமாடும் கடைகள் உள்பட 33,236 நியாய விலைக்கு கடைகள் மூலம் 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்கு 2006-ல் முதலமைச்சராக பதவியேற்ற அதே விழா மேடையிலேயே தலைவர் கலைஞர் முதல் கையெழுத்திட்டார். பின்னர் கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்பது ஒரு ரூபாயாக குறைத்தும் ஆணையிட்டார்.

661 கோடி ரூபாய் செலவில் 29 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சமுதாயத்தில் ஏழை எளிய பிரிவினருக்கு இலவச எரிவாயு அடுப்பு இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை தலைவர் கலைஞர் 14.1.2007 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
3742 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 15.9.2006 அன்று அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் எனும் ஊரில் உள்ள சமத்துவபுரத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார்.

The post ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் எரிவாயு அடுப்பும் இணைப்பும் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/01/1kilorice1rs-freetv-freelpg/feed/ 0
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் /2019/07/30/kalaignar-medical-insurance/ /2019/07/30/kalaignar-medical-insurance/#respond Tue, 30 Jul 2019 11:29:07 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=780 The post கலைஞர் காப்பீட்டுத் திட்டம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 72 லட்சத்து 5 ஆயிரம் ஏழை எளியோர் பயனடைந்தனர்.

தமிழகத்திலுள்ள 1421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புதியதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்கள் டாக்டர்களை பணியமர்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிப்பதால் 2005-2006ல் நடைபெற்ற மகப்பேறுகள் 82,532 என்பது 2009-2010-ல் 2,98,853 ஆக மூன்று மடங்கு உயர்ந்தது.

குழந்தைகள் உயிர் காத்திடக்கூடிய அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாயும், சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாயும், கடினமான திறந்த அறுவை கிசிச்சைக்கு லட்ச ரூபாயும் என அரசு நிதி உதவி வழங்கப்பட்டது. 2.11.2007-ல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம், 3.6.2008-ல் தொடங்கப்பட்ட பள்ளி சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின் கீழ் 3,264 சிறார்க்கு 17 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவ மனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்துடன் இணைந்து 445 ஊர்திகளுடன் கூடிய “ அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்” தமிழகம் முழுவதும் 15.9.2008-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் 8 லட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயனடைந்து உள்ளனர்.

உயிர் காக்கும் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஜூலை 2009 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அதனால் ஒரு கோடியே 34 லட்சத்து 3 ஆயிரத்து 328 ஏழை மக்களுக்கு 781 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிசிக்சைகள் செய்யப்பட்டுள்ளன.

இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உடற்பரிசோதனை செய்யும் “நலமான தமிழக திட்டம் “அறிமுகப்படுத்தப்பட்டது.

மருத்துவமனையில் சிசிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தவர்களின் உடல்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல இலவசமாக அமரர் ஊர்தி சேவைத் திட்டம் கலைஞர் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.

The post கலைஞர் காப்பீட்டுத் திட்டம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/30/kalaignar-medical-insurance/feed/ 0
சென்னை விமான நிலையங்களுக்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் பெயர்கள் /2019/07/29/kalaignars-homage-to-anna-and-kamarajar/ /2019/07/29/kalaignars-homage-to-anna-and-kamarajar/#respond Mon, 29 Jul 2019 10:40:34 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1028 The post சென்னை விமான நிலையங்களுக்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் பெயர்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

சென்னை விமான நிலையங்களுக்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் பெயர்கள்

வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் தமிழக முதல்வர் கலைஞர் சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரையும் உள்நாட்டு விமான முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும் சூட்டச் செய்தார்.

The post சென்னை விமான நிலையங்களுக்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் பெயர்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/29/kalaignars-homage-to-anna-and-kamarajar/feed/ 0
பெரியார் சமத்துவ புரங்கள் /2019/07/28/periyar-egalitarian-villages/ /2019/07/28/periyar-egalitarian-villages/#respond Sun, 28 Jul 2019 10:47:31 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1037 The post பெரியார் சமத்துவ புரங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

பெரியார் சமத்துவ புரங்கள்

சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தலைவர் கலைஞரின் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தலைவர்  கலைஞரின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சட்டங்களும் திட்டங்களும் அவர்களை சமுதாயத்தில் சமநிலைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது. என்பதை யாராலும் மறுக்க இயலாது. சாதி சமய பொருளாதார வேறுபாடுகளற்ற சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின்  லட்சிய கனவாகும் அந்த கனவை நனவாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இந்த சமத்துவபுர குடியிருப்புகள். தமிழகம் முழுவதும் 2006-11 கலைஞர் ஆட்சியில் மொத்தம் 240 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன.

இந்த திட்டத்தை தொடங்கியபோது தலைவர் கலைஞர் அவர்கள் அதற்கு ஒரு விளக்கம் தந்தார்கள். அதாவது அத்திமரம் அதன் கிளைகளிலும் காய்கள் காய்க்கும். அடிமரம், நுனி மரத்திலும் காய்கள் காய்க்கும். வேறு வேறு இடத்தில் காய்கள் காய்த்து உள்ளது என்பதற்காக நுனியில் காய்த்தது வெண்டைக்காய், அடுத்தது கத்தரிக்காய் என்று கூறமுடியாது அதுபோல் அனைவரும் மனிதர்களே, அவர்களில் ஏற்றத்தாழ்பு இல்லை என்று குறிப்பிட்டார்.

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் முதல் பிராமணர்கள் வரை அனைவரும் சமத்துவமாக சமூக நல்லிணக்கத்துடன் இந்த சமத்துவபுரங்களில் வசிக்க வேண்டும் என்பது சமுதாய புரட்சியினுடைய ஒரு மைல் கல். அந்த மகத்தான புரட்சியை தொடங்கி வைத்த சமுதாய சிற்பிதான் தலைவர் கலைஞர் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

The post பெரியார் சமத்துவ புரங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/28/periyar-egalitarian-villages/feed/ 0
மாநில திட்டக்குழு /2019/07/26/state-planning-committee/ /2019/07/26/state-planning-committee/#respond Fri, 26 Jul 2019 10:57:02 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1047 The post மாநில திட்டக்குழு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

மாநில திட்டக்குழு

இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டக்குழு ஒன்று இருந்தது. அதைப் போன்று மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக மாநில அளவிலும் திட்டக்குழு ஒன்று அமைக்க வேண்டும் என்று கருதப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் கலைஞர் 1971 ஏப்ரலில் மாநில திட்டக்குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன் முதலில் மாநிலத்திற்கென்று திட்டக்குழு அமைக்கப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாநில திட்டக்குழு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/26/state-planning-committee/feed/ 0
மாநில சுயாட்சி /2019/07/25/state-autonomy/ /2019/07/25/state-autonomy/#respond Thu, 25 Jul 2019 11:19:11 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1055 The post மாநில சுயாட்சி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

மாநில சுயாட்சி

1969 ஆகஸ்ட் 19-ம் நாள் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் கலைஞர் மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்குத் தேவையான திருத்தங்களை அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வருவது பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக குழு ஒன்று நியமிக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி செப்டம்பர் 22-ம் நாள் தமிழக அரசு டாக்டர் பி.வி. இராசமன்னாரைத் தலைவராகவும் டாக்டர் ஆ.இலட்சுமணசாமி முதலியார், பி.சந்திரா ரெட்டி ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
அந்த குழு தங்களுடைய ஆய்வறிக்கையை 1971 மார்ச்
10-ம் நாள் தமிழக அரசிடம் அளித்தது.அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்மானத்தை 1974 ஏப்ரல் 16-ம் நாள் கலைஞர் சட்டப் பேரவையில் முன்மொழிந்தார். 161 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று இந்த மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேறியது.

The post மாநில சுயாட்சி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/25/state-autonomy/feed/ 0
ஆதி திராவிடர் பழங்குடியினர் இட ஒதுக்கீடு /2019/07/22/1202/ /2019/07/22/1202/#respond Mon, 22 Jul 2019 14:56:51 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1202 The post ஆதி திராவிடர் பழங்குடியினர் இட ஒதுக்கீடு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

ஆதி திராவிடர் பழங்குடியினர்.இட ஒதுக்கீடு

திராவிடர்கள் என்றால் இந்த நாட்டை ஆண்டவர்கள். ஆதி திராவிடர்கள் என்றால் அவர்களுக்கு முன்பே இந்த நாட்டில் செல்வாக்கு மிக்கவர்கள். மரியாதைக்குரியவர்கள். ஆகவே அவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை.

ஆனால் காலப்போக்கில் வைதீகர்கள் ஆக்ரமிப்பால் ஆதி திராவிடர்கள் முகத்தை தொலைத்து விட்டு முகவரியை தேடினர் கேள்விக்குறியாய் முதுகு வளைந்து காரணம் தெரியாமல் அடிமைகளாய் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உயர்சாதி பிரிவினரிடையே கூனிக் குறுகி உடல் முழுவதுமாக துணியை மூடிடவும் இயலாமல், காலில் செருப்பு அணிவதையே எண்ணிப் பார்க்காத நிலையில் மனதில் தைரியமின்றி வாழ்ந்திருக்கிறார்கள்.

பிறப்பால் உயர்வு தாழ்வு; தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பெண்கள் மாராப்பு போட்டுக்கொள்ளக்கூட போராட வேண்டியிருந்தது; தெருக்களிலும் கோயில்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்று தீண்டாமை மக்களைச் சீரழித்து வந்தது.

இப்படி மதி இழந்து மானமும் இழந்து நாம் ஆதியில் இந்த நாட்டை ஆண்டவர்கள் என்னும் நினைவும் மறந்து மறைவில் இருந்தொருவன் கயிற்றால் ஆட்டுவித்திட ஆடும் மரப்பாவை போன்று ஏன் என்றும் எதற்கென்றும் எப்படியென்றும் கேட்கவும் திறனின்றி நாயினும் கீழாக “அடிமைப்பட்டிருந்த தமிழனுக்கு சூடேற்றி சுரணை ஏற்படுத்தி சுயமரியாதை உணர்வூட்டி நீயும் ஒரு மனிதன்; ஆறறிவு படைத்தவன்; புழுவன்று; பூச்சியன்று; எழு, எழு, விழி, உலகைப் பார், உரிமை கொள்” என்று எழுச்சியூட்டினார் உலகம் கண்டிராத அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியாரைப் பின்பற்றி பேரறிஞர் அண்ணாவும் கலைஞரும் இந்த சமுதாயத்திற்காக தங்களால் முடிந்ததை செய்திருக்கிறார்கள்.

அந்த வகையில் கல்வி வேலைவாய்ப்பில் ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மேலும் சலுகைகள் பெற்று தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை 16 சதவிகிதம் என்றிருந்ததை 18 சதவிகிதம் என்று உயர்த்தியதோடு, பின்னர் பழங்குடியினருக்கென்று தனியாக 1 சதவீதத்தை ஏற்படுத்தி அந்த 18 சதவீதத்தையும் ஆதி திராவிடர்களே அனுபவிக்கச் செய்த பெருமை கலைஞருக்குண்டு.

ஆதி திராவிடர்களுக்கு 18 சதவிகிதம் என்றும் பழங்குடியினருக்கு 1 சதவிகிதம் என்றும் மொத்தம் 19 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுப் பலன்களை இப்போது அனுபவித்து வருகிறார்கள். இது ஏற்கனவே இருந்ததைவிட 3 சதவிகிதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

1974-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மதம் மாறிய சீக்கியர்களை 1956லும், புத்தமதம் சார்ந்த தமிழ் மக்களை 1990லிலும் பட்டியலில் சேர்த்து உரிமை வழங்கியது போல், கிறிஸ்துவ தலித் மக்களையும் பட்டியலில் சேர்த்து உரிமை வழங்கவேண்டும் என்றும், இதுசம்பந்தமாக நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று இந்த உரிமைகளைப் பெறுவதற்கு தடையாக உள்ள 1950-ம்ஆம் வருடத்திய குடியரசு தலைவரின் ஆணையை நீக்க வேண்டும். என்றும் கலைஞர் வழங்கிய அறிவுரைகளின்படி நாடாளுமன்றத்தில் டி.ஆர.பாலு அவர்கள் நடுவண் அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்.

The post ஆதி திராவிடர் பழங்குடியினர் இட ஒதுக்கீடு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/22/1202/feed/ 0
அருந்ததியினருக்கு சதவிகித உள் இடஒதுக்கீடு /2019/07/21/arundhathiyinar-reservation/ /2019/07/21/arundhathiyinar-reservation/#respond Sun, 21 Jul 2019 15:15:52 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1219 The post அருந்ததியினருக்கு சதவிகித உள் இடஒதுக்கீடு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

அருந்ததியினருக்கு சதவிகித உள் இடஒதுக்கீடு

அருந்ததியினர் மக்கள் தனி இட ஒதுக்கீட்டுக்காக பல போராட்டங்கள், உண்ணாவிரதம், பேரணிகள் நடத்தி முதல்வராக இருந்த கலைஞரிடமும் துணை முதல்வராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலினிடமும் கோரிக்கைகள் வைத்தனர்.

இந்த அருந்ததி சமுதாய மக்கள் எப்படி வாழ்கிறார்கள்- என்ன தொழில் செய்கிறார்கள்? இவர்கள் வாழ்வாதாரம் என்ன? இவர்கள் மக்கள்தொகை எவ்வளவு? என்பதையெல்லாம் ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஜெனார்த்தனம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து கலைஞர் ஆணையிட்டார்கள்.

மேற்கண்ட குழுவின் சிபாரிசினை ஏற்று இடையில் இதற்காக எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், அனைத்து சமுதாய மக்கள் போல கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், அரசியலிலும், வாழ்வாதாரத்திலும் அருந்ததியினர் முன்னேற வேண்டும் என்று விரும்பிய தலைவர் கலைஞர் அவர்கள் அருந்ததியினர் மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் சதவிகித ஒதுக்கீடு வழங்கி 27.2.2009 அன்று ஆணையிட்டார்கள்.

இந்த ஒதுக்கீட்டின் பலனாக அருந்ததியினர் இப்பொழுது டாக்டர்களாகவும் பொறியாளர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் வருடத்திற்கு மொத்தம் 2150 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் கல்லூரி கட்டணமாக 64 லட்ச ரூபாயினை அரசே செலுத்தி படிக்க வைத்த பெருமை கலைஞரையே சாரும். செருப்பு தைக்கும் அருந்ததியர் மகள் டாக்டரானதும் துப்புரவு செய்யும் தொழிலாளி மகன் பொறியாளர் ஆனதும் கலைஞர் ஆட்சியில்தான் சாத்தியமாயிற்று.

பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதமாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதமாகவும் இட ஒதுக்கீடு பகிர்ந்தளித்து கலைஞர் சாதனை

இட ஒதுக்கீடு 25லிருந்து 31 சதவிகிதமாக உயர்வு 1970-ம் ஆண்டில் கழக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இந்தியாவிலேயே முதன் முறையாக திரு.ஏ.என். சட்டநாதன் தலைமையில் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிசனின் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 25 சதவிகிதம் என்றிருந்த இடஒதுக்கீட்டினை 31 சதவிகிதமாக உயர்த்தி கலைஞர் ஆணையிட்டார்.

திமுகவின் கடுமையான எதிர்ப்பினால்தான் இடஒதுக்கீடும் தப்பியது; அது 50 சதவிகிதமாகவும் உயர்ந்தது.

1979-ல் அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட்டோரில் 9 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும். என்று ஒருபுதிய சட்டத்தை இயற்றினார். திமுக அந்த அரசாணையை ஏற்கவில்லை; கடுமையாக எதிர்த்தது.

இந்நிலையில் அப்போது 1980-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எம்.ஜி-ஆர். அவர்கள் படுதோல்வி அடைந்தார். 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. வேறுவழியின்றி பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான வருமான உச்சவரம்பு சட்டத்தை எம்.ஜி-ஆர். அவர்கள் திரும்பப் பெற்றதோடு அவர்களுக்கான இடஒதுக்கீட்டினை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தியும் உத்திரவு பிறப்பித்தார். என்பது வரலாறு. திமுகவின் கடுமையான எதிர்பினால்தான் இடஒதுக்கீடும் தப்பியது; அது 50 சதவிகிதமாகவும் உயர்ந்த்து

பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதமாகவும் உள் ஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆணை.

பிற்படுத்தப்பட்டோருக்கென்று மொத்தமாக அனுமதிக்கப்பட்டிருந்த 50 சதவிகித இடஒதுக்கீடு என்பது இனி பிற்படுத்தப்டோருக்கு 30 சதவிகிதமாகவும் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு 20 சதவிகிதமாகவும் புதுவடிவம் பெற்றது.

தமிழக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், பா.ம.க.உறுப்பினர் கோ.சு.மணி, தமிழக ஆயர் பேரவையின் தலைவர் ஏ.எம்.சின்னப்பா ஆகியோரது கோரிக்கையினை ஏற்று கிறிஸ்தவ வன்னியர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து கலைஞர் உத்திரவு பிறப்பித்தார்கள்.

கொங்கு வேளாளர் இனம் முற்பட்ட வகுப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோவை செழியன் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று 1975-ல் முதல்வர் கலைஞர் அவர்கள் அதற்கான உத்திரவை பிறப்பித்தார். அதனால் அந்த இனம் இன்றைக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் கூடுதல் பலன் பெற்று வருகிறது.

The post அருந்ததியினருக்கு சதவிகித உள் இடஒதுக்கீடு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/07/21/arundhathiyinar-reservation/feed/ 0