வாழும் காலத்திய வாழ்த்து மாலைகள் – Dr Kalaignar Karunanidhi தமிழ் வெல்லும் Wed, 07 Aug 2019 10:45:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.15 தந்தை பெரியார் /2019/08/02/thanthai-periyar/ /2019/08/02/thanthai-periyar/#respond Fri, 02 Aug 2019 12:04:06 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1108 The post தந்தை பெரியார் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தந்தை பெரியார்

கலைஞர் அவர்கள் நமக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம் என்று சொல்ல வேண்டும். நமது கலைஞர் அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதி. பகுத்தறிவாளராகவும், ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும், முன்யோசனையுடனும் அவர் நடந்து வருவதின் மூலம் தமிழர்கட்குப் புதுவாழ்வு தருபவராகிறார் நமது கலைஞர். தி.மு.கழகத்திற்குப் பெருவெற்றி என்றால் அது கலைஞர் அவர்கள் தனது சாதுர்யத் திறமையால் பெற்றதாகும்.

கலைஞர் அவர்கள் தனது பள்ளி மாணவப் பருவத்திலிருந்து பொதுத் தொண்டு செய்து வருகிறார். தியாகிகள் அடையாளமாகிய சிறை செல்லும் தன்மையில் பல முறை சிறை சென்றிருக்கிறார். ஒரு கட்சியை தொடங்கி , ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஒருவராய் இருந்து அந்தக் கட்சிக்கு உண்டான எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து, அந்தக் கட்சியை நல்ல வண்ணம் உருவாக்கி,அந்தக்கட்சியை நாடாளும் ஸ்தாபனம் ஆக்கிய முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

கலைஞர் அறிவில் சிறந்தவர்; நிர்வாகத்தில் சிறந்தவர்; பொதுத் தொண்டுக்காகத் தியாகம் செய்ததில் சிறந்தவர். இப்படி கலைஞர் கருணாநிதி விஷயத்தில் பாராட்டத்தக்க பல தன்மைகள்இருக்கின்றன.

The post தந்தை பெரியார் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/thanthai-periyar/feed/ 0
பேரறிஞர் அண்ணா /2019/08/02/perarignar-anna/ /2019/08/02/perarignar-anna/#respond Fri, 02 Aug 2019 12:02:28 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1106 The post பேரறிஞர் அண்ணா appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

பேரறிஞர் அண்ணா

தம்பி கருணாநிதியினுடைய ஆற்றல் பற்றியும், ஆற்றல் காரணமாகப் பெற்ற வெற்றிகள்பற்றியும், பெற்ற வெற்றிகளெல்லாம் நாட்டு முன்னேற்றத்துக்குப் பயன்பட்டன என்பது பற்றியும் அந்த ஆற்றலும் வெற்றியும் நாட்டுக்கு இனியும் நல்ல முறையில் பயன்படும் என்பது பற்றியும், நண்பர்கள்பலர் எடுத்துச் சொல்லக் கேட்பதில் எனக்கு மிகப்பெருமிதம் உண்டாகும் என்பதில் யாருக்கும் ஐயப்பாடில்லை!

கருணாநிதியின் எழுத்து வல்லமை – பேச்சு வல்லமை – நாடக நூல்களை எழுதிய வல்லமை- நாடகங்களில் நடித்த திறமை இவைகள் ஒவ்வொன்றையும் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

கருணாநிதி இத்தகைய திறமைகளைப் பெற்றிருப்பது எவ்விதம் என்பதை உணர்ந்தால்தான்இந்தப் பாராட்டு விழாவின் உட்கருத்து புரியும். கருணாநியைப் போல இந்தத் திறமைகளைப் பெறவேண்டும் என்பது மட்டுமல்ல; அந்தத்திறமைகளை அவர் எப்படிப் பெற்றார் என்பதைப் பற்றியும் நாம் ஆராய வேண்டும்.

ஒரு நாளைக்குக் கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதே அவருக்குத் தெரியாமல் அவர் உழைக்கிறார். அதை கருத்தில் கொண்டால், இந்தத் திறமை பெற்றதன் அடிப்படை உழைப்பு என்பதை உணர்வீர்கள். உழைக்காமல் இந்தத் திறமை வந்துவிடவில்லை!

The post பேரறிஞர் அண்ணா appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/perarignar-anna/feed/ 0
பேராசிரியர் க.அன்பழகன் /2019/08/02/prof-k-anabhagan/ /2019/08/02/prof-k-anabhagan/#respond Fri, 02 Aug 2019 12:00:54 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1104 The post பேராசிரியர் க.அன்பழகன் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

பேராசிரியர் க.அன்பழகன்

நான் முதன் முதலில் கலைஞரைப் பார்த்தபோது ஆயிரக்கணக்கான தோழர்களில் ஒருவராகத்தான் பார்த்தேன். சட்டமன்ற உறுப்பினராகப் பார்த்தபோது பதினைந்து பேரிலே ஒருவராகப்பார்த்தேன். அண்ணா விருகம்பாக்கம் மாநாடு நடத்தியபோதுதான் மூவரிலே ஒருவராக அவரைநான் பார்த்தேன். நாவலர் நம்மை விட்டுப் பிரிந்தபோதுதான் என்னிலே ஒருவராக அவரை நான்பார்த்தேன். இந்த உணர்வு ஏற்பட்டதற்குப் பின்னர், அவர் கோப்பெருஞ்சோழனாக வீற்றிருந்தாலும், நான்பிசிராந்தையாராக அவரைச் சார்ந்து நிற்பேன். கலைஞர் தமிழக மக்களுக்கு வழிகாட்டுகிற வள்ளுவராகத் திகழ்ந்தால், நான் அவருக்கு உரை எழுதுகிற ஒரு தமிழ் அறிஞனாகத்தான் விளங்குவேன்.

“வாழ்விலோர் திருநாள்” என்ற ஒரு பாடலைப் பல ஆண்டுகளுக்கு முன் கேட்டிருப்பீர்கள்.அப்படித்தான் இன்றைக்குக் கலைஞர் அவர்களுக்கு நிகழ்கின்ற பாராட்டு அவருடைய வாழ்விலே ஒருநாள் திருநாள் என்றுகூட அல்ல; தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்விலே ஒரு திருநாளாக இந்த நாள்அமைந்திருக்கின்றது. இன்று ஒன்றை நான் நினைவூட்ட விரும்புகிறேன். கலைஞர் எந்த இடத்தைநிறைவு செய்கிறார் என்று பார்த்தால் ஒரு புலவருடைய இடத்தை அல்ல; ஒரு எழுத்தாளருடையஇடத்தை அல்ல; ஒரு சட்டமன்ற உறுப்பினருடைய இடத்தைக் கூட அல்ல; ஒரு அரசியல்வாதியின்இடத்தைக்கூட அல்ல; தந்தை பெரியாரின் இடத்தையும், அறிஞர் அண்ணாவின் இடத்தையும் அவர்நிறைவு செய்கிறார்.

The post பேராசிரியர் க.அன்பழகன் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/prof-k-anabhagan/feed/ 0
மாபெரும் சமூகநீதிப் போராளி, திருமதி. சோனியா காந்தி /2019/08/02/sonia-gandhi-senior-leader-of-the-all-india-congress/ /2019/08/02/sonia-gandhi-senior-leader-of-the-all-india-congress/#respond Fri, 02 Aug 2019 11:58:27 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1102 The post மாபெரும் சமூகநீதிப் போராளி, திருமதி. சோனியா காந்தி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

திருமதி. சோனியா காந்தி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்

மாபெரும் சமூகநீதிப் போராளி, முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து ஆற்றிய உரை

நவீன  இந்தியாவினுடைய  வரலாற்றிலே மிகப் பெரிய ஜாம்பவனாக இருக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையினைத் திறந்து வைக்கின்ற பாக்கியத்தை நான் பெற்றிருக்கின்றேன். இந்த அருமையான வேளையில் அந்த மாபெரும் மனிதரை –  அவருடைய வாழ்க்கையை, அவருடைய வரலாற்றுச் சாதனைகளை நினைவு கூர்ந்து பாராட்டி மகிழ்கின்றேன்.

தம்முடைய 60 ஆண்டுகால வரலாற்றிலே தலைவர் கலைஞர் அவர்கள் இந்தத் தமிழகத்தினுடைய வரலாற்றையும் எதிர் காலத்தையும் உருவாக்கியவர். தமிழகத்தினுடைய முதலமைச்சராக 5 முறை இருந்து, ஏறக்குறைய 20 ஆண்டுகள் தமிழகத்தினுடைய நிர்வாகத்தை நடத்தியவர். தமிழகச் சட்டப்பேரவைக்கு 13 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவருடைய அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு;  தேர்தலிலே ஒருநாளும் அவர்  தோற்கவில்லை என்கிற சரித்திரத்தை வாழ்க்கையிலே படைப்பதற்கான காரணமாக இருந்தது. அந்த அற்புதமான சாதனைகளை யாரும் – இப்பொழுதும் சரி, எதிர்காலத்திலும் சரி செய்யமுடியும் என்று நான் நம்பவில்லை.

டாக்டர் கலைஞர் அவர்களுக்குத் தமிழக மக்களுக்குப் பணியாற்றுவதிலும், அரசியல் நடத்துவதிலும்தான் மிகப் பெரிய ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது. ஆனால், அவருக்கு இன்னும் ஒரு பெரும் ஆசை இருந்தது. அதுதான் தமிழ் மொழியின் மீது அவருக்கிருந்த தணியாத தாகமும் அன்பும். தமிழகத்தை நடத்துவதிலும் ஆட்சி செய்வதிலும் தம்முடைய முழு நேரத்தையும் சக்தியையும் அவர் செலவிட்டாலும் கூட, இலக்கியத்திலும் தமிழ் மொழியை வளர்ப்பதிலும் அதற்கான தனி நேரத்தை அமைத்துக் கொண்டார்.

அற்புதமான பேச்சாளர்.   ஆனால்,  அவருடைய  சக்தி வாய்ந்த பேனாவிற்கு நிகர் எதுவுமில்லை. அவர் எப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர்! அவர் கையில் தமிழ் எப்படி  விளையாடியது! அவருடைய அற்புதமான படைப்புகள் எப்படிப் பிரம்மாண்டமான படைப்புகளாக இருந்தன என்றெல்லாம் நான் வியந்து கொண்டிருக்கிறேன்.

தமிழின் மீது தணியாத தாகம்  கொண்டிருந்த கலைஞர் அவர்கள், பல்லாயிரக்கணக்கான சிறுகதைகளையும், பெருங்கதைகளையும்,  நாடகங்களையும், 210  கவிதைகளையும், தம்முடைய உடன் பிறப்புகளுக்கு 7,000 கடிதங்களையும் எழுதினார். தம்முடைய வாழ்க்கையிலே 75 திரைப்படங்களுக்குக் கதை – வசனம் அமைத்த பெருமையும் அவருக்கு உண்டு.

தலைவர் கலைஞர் அவர்களுடைய தமிழ் மொழிப் பற்றானது நாளும் பொழுதும் தமிழ்மொழியை வளப்படுத்துவதிலும், அதற்குப் பல்வேறு படைப்புகளை ஆக்கித் தருவதிலும் அவர் செலவழித்த நேரம் ஏராளம்!

தமிழினுடைய ஒப்புயவர்விலா இலக்கியங்களான திருக்குறளுக்கும் தொல்காப்பியத்திற்கும் உரை எழுதக் கூடிய மிகப் பெரிய இலக்கியப் படைப்பை அவர் ஆக்கித் தந்தார்.

அவருடைய வாழ்க்கையிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரத்தை வழங்கியது தான் அவருடைய வாழ்க்கையிலே அவருக்கு மிகப்  பெரிய  மகிழ்ச்சியையும் நிறைவையும் தரக்கூடிய ஒரு செய்தி.  தமிழைச் செம்மொழியாக ஆக்கியபோது, தமிழ்ச் செம்மொழிக்காக அவர் கைப்பட எழுதிய ஒரு கவிதை;  இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

தம்முடைய வழிகாட்டிகளாகவும் தலைவர் களாகவும் கொண்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் வழியிலே தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு மாபெரும் சமூக நீதிப் போராளி ஆவார். அவர் முதலமைச்சராக இருந்த போது, அவர் ஆற்றிய சீர்திருத்தங்கள், திருமணச் சட்டங்களிலே அவர் கொண்டுவந்த சீர்திருத்தம், மகளிருக்கான சொத்துரிமையிலே அவர் கொண்டு வந்த சட்டத் திருத்தங்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் ஏற்படுத்திக் கொடுத்த இடஒதுக்கீடு, நிலச் சீர்திருத்தச் சட்டத்திலே அவர் கொண்டுவந்த மிகப் பெரிய புரட்சி, அரசு வேலை வாய்ப்புகளிலே 30 விழுக்காடு பெண்களுக்கான இடஒதுக்கீடு, பிராமணரல்லாத வகுப்பினர் கூட எல்லா ஆலயங்களிலும் அர்ச்சகராக இருக்கலாம் என்று கொண்டு வந்த வரலாற்றுப் புகழ் மிக்க சட்டம், இவையெல்லாவற்றிற்கும் மேலாகக் கூட்டாட்சித் தத்துவத்திலே மாநிலங்களின் உரிமைக்காக இறுதிவரை போராடிய ஒரு மிகப் பெரிய போராளி, தலைவர் கலைஞர் அவர்கள்.

பாராளுமன்ற நிறுவனங்களிலும், மரபுகளிலும் தலைவர் கலைஞர் அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். எந்த நேரத்திலும் சமரசமே செய்துகொள்ளாத மதச்சார்ப்பற்ற அரசியல்வாதி. வாழ்க்கை முழுவதும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட,  தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு அசைக்க முடியாத அரணாக இருந்து பாதுகாத்தவர். அதே நேரத்திலே அவர் எல்லா மதங்களையும் மதிக்கக் கூடிய பண்பாளர். அவருடைய கருணை உள்ளம் ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை உருவாக்கித் தருவதிலே மிகவும் முனைப்பாக இருந்தது.

1971-லும், 1980-லும் அன்னை இந்திரா காந்தி அவர்களுக்கு வங்கிகளைக் தேசிய மயமாக்குகின்றபோது, மன்னர் மானிய ஒழிப்பின்போது, நிலச் சீர்திருத்தச் சட்டங்களை அமல்படுத்தியபோது தலைவர் கலைஞர் தந்த மகத்தான ஆதரவினைக் காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் மறக்க மாட்டோம். 2004லிருந்து

2014 வரை 10 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கலைஞர் அவர்கள் தந்த மகத்தான ஆதரவினை நாங்கள், காங்கிரஸ்காரர்கள் மறக்கமாட்டோம்.

எனக்குத் தனிப்பட்ட பல நேரங்களிலே பல அனுபவங்கள் உண்டு. எப்பொழுதெல்லாம் பிரச்சினைகள், சிக்கல்கள் தேசிய அரசியலில் வந்ததோ, அப்பொழுதெல்லாம் நீண்ட அறிவும், மிகுந்த அனுபவமும் கொண்ட தலைவர் கலைஞர் அவர்களிடம் நாங்கள் ஆலோசனை கேட்டபோது, அவர்கள் வழங்கிய மகத்தான ஆலோசனைகளையெல்லாம் நான் இன்னும் தனிப்பட்ட முறையிலே, என் இதயத்திலே தாங்கி நிற்கின்றேன்.

தேசிய அரசியலில் அரசியல் சாசனச் சட்டத்தையும், அரசியல் சட்ட சாசனமுள்ள நிறுவனங்களிலும் சீரமைப்பதற்கான அரசியல் போராட்டத்தை வலுவாக நாம் நடத்துகின்றபோது, தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்கின்றபோது எப்படி நமது இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருந்ததோ, அதைப்போல இந்த அரசியல் போராட்டத்திலும் நம் இரண்டு கட்சிகளும் உறுதியாக இணக்கமாக இருந்து போராட வேண்டு மென்பது என்னுடைய தணியாத ஆசை.

கலைஞர் அவர்களுடைய திருவுருவச்  சிலையைத் திறந்து அவருடைய கனிவான பார்வையின் கீழே நிற்கின்ற நான் இந்த நேரத்திலே அகில இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் ஒரு  செய்தியை உரக்கச் சொல்லவேண்டும்.

70 ஆண்டுகளாக நாம் உருவாக்கி வைத்திருக்கின்ற இந்தியா என்கிற நம்முடைய கனவையும், ஜனநாயக நிறுவனங்களையும், அரசியல் சாசனச் சட்டத்தையும் நாம் இரண்டு பேரும் உறுதியாக இணக்கமாக இருந்து பாதுகாத்துப் போராடுவோம் என்பதுதான், கலைஞர் அவர்களுடைய காலடியிலே நாம் எடுக்கின்ற உறுதிமொழியாக இருக்க முடியும்.

கலைஞர் அவர்களுடைய நினைவுகள் என்றென்றும் வாழ வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

The post மாபெரும் சமூகநீதிப் போராளி, திருமதி. சோனியா காந்தி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/sonia-gandhi-senior-leader-of-the-all-india-congress/feed/ 0
தமிழ் மக்களின் குரல் திரு. ராகுல் காந்தி தலைவர் – அகில இந்திய காங்கிரஸ் கட்சி /2019/08/02/rahul-gandhi-chairman-all-india-congress/ /2019/08/02/rahul-gandhi-chairman-all-india-congress/#respond Fri, 02 Aug 2019 11:54:30 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1096 The post தமிழ் மக்களின் குரல் திரு. ராகுல் காந்தி தலைவர் – அகில இந்திய காங்கிரஸ் கட்சி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

திரு. ராகுல் காந்தி

தலைவர் – அகில இந்திய காங்கிரஸ் கட்சி

தமிழ் மக்களின் குரல்

ஒரு மிகப் பெரும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுடைய நினைவைப் போற்றுவதற்காக இங்கே நாம் அனைவரும் கூடியிருக்கிறோம்.

கலைஞர் அவர்கள் ஒரு சாதாரணமான அரசியல்வாதி அல்ல; அவர் தமிழ் மக்களின்

குரலாக இருந்தார். தமிழ் மக்களின் விழியாக இருந்தார்.  ஒவ்வொரு அரசியல் தலைவர்களிலேயும், ஒவ்வொரு அரசியல்வாதிகளிலேயும் இரு பக்கங்கள் இருக்கும். ஒன்று மக்களின் குரலைப் பிரதிபலிப்பதாக இருக்கும். மற்றொன்று, அவர்களின் குரல் மக்களுக்காகப் பிரதிபலிப்பதாக இருக்கும். கலைஞர் அவர்களை நாம் இன்று பெருமைப்படுத்தியிருக்கிறோம். ஏனென்றால், கலைஞர் பரிபூரணமாக ஒட்டு மொத்தமாகத் தமிழ் மக்களின் குரலாகவே ஒலித்தவர்.

மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களின்  குரலாகவே ஒலித்தவர். மக்களின் வலியை,  கஷ்டத்தை தம் கஷ்டமாக நினைத்தவர், மக்களின் மகிழ்ச்சியை தம் மகிழ்ச்சியாக எண்ணி உழைத்த தலைவர் கலைஞர் அவர்கள்! தலைவர் கலைஞர் அவர்களின் – முழு வாழ்நாளையும் எடுத்துப் பார்த்தால், தமது வாழ்நாள் முழுவதையுமே தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட  தலைவராக இருந்தவர் கலைஞர் அவர்கள்.

நீங்கள் எல்லோரும் கலைஞரை  நினைவிலே கொண்டிருக்கிறீர்கள். சில பேர் கலைஞரை நேரிலே பார்த்திருப்பீர்கள். நான் கலைஞர் அவர்களை இரண்டாவது  முறையாகச் சந்தித்ததை இப்பொழுதும் எனது நினைவில் வைத்திருக்கிறேன்.

நான் கலைஞர் அவர்களின் இல்லத்துக்கு, அதற்கு முன்பு சென்றதில்லை. நான் முதன்முறையாக கலைஞர் அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது, ஒரு பெரிய வீட்டில் கலைஞர் இருப்பார். ஏராளமான பெரிய பெரிய பொருட்கள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குள்ளே முதன் முறையாகச் சென்றேன். பலப் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்ற ஒரு பெரிய  தலைவருடைய வீடு,  சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதைப் போல நான் நினைத்திருந்தேன்; பெரிய வீடாக இருக்கும் என்று கற்பனையில் இருந்தேன். நான் வீட்டிற்குள் சென்றவுடன் ஆச்சரியப்பட்டேன். அவருடைய எளிமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றை, அவருடைய இல்லத்தில் அவரைச்  சந்தித்தபோது பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.

நான் ஒரு இளைஞனாக அவரைப் பார்த்தபோது பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஒரு மிகப் பெரிய தலைவருடைய எளிமை,  அவருடைய நாணயம், அவருடைய அகங்காரம் இல்லாத அந்த நிலையை நான் பார்த்தபோது உள்ளபடியே மிகவும் ஆச்சரியப்பட்டேன்.   இளைஞனான நான் பெருமைப்பட்டேன்.  ஓர் இளம் அரசியல் தலைவராகச் சென்றபோது  எனக்கு அது மிகப் பெரும் உந்துதலாக வழிகாட்டுதலாக அந்தச் சந்திப்பு எனக்கு அமைந்திருந்தது.  நான் கலைஞர் அவர்களைச் சந்தித்ததை மட்டும்   நினைவிலே கொள்ளவில்லை. எனக்கு அவர் மிகப் பெரிய வழிகாட்டுதலை பின்பற்றக் கூடிய ஒரு  தலைமையை அவர் எனக்குக் காட்டிச் சென்றதை நான் நினைத்துப் பார்க்கிறேன்; ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.

மக்களின் குரலைப் பாதுகாப்பவராக, இங்கு இருக்கின்ற அரசியல் அமைப்புச் சட்டங்களைப்  பாதுகாப்பவராக கலைஞர் அவர்களை நான் பார்க்கிறேன்.  இப்போது தமிழ்நாட்டில் ஓர் அரசாங்கம் இருக்கிறது. தமிழ்க் கலாச்சாரத்தை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நாட்டில் இருக்கின்ற அனைத்து அமைப்பு களையும் நிர்வாகத்தையும் அழிக்கக் கூடிய ஓர் அரசாங்கமாக இப்போது இருக்கின்ற அரசாங்கத்தை நான்  பார்க்கிறேன்.

மத்தியில் இப்போது ஓர் அரசாங்கம் இருக்கிறது. தாங்கள் நினைக்கின்ற காரியங்களை எல்லாம் நிறைவேற்றக் கூடிய மனோநிலையில் இருக்கிற அரசாங்கமாக இருக்கிறது.  கோடானு கோடி மக்களுடைய குரல்களை மதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிற அரசாங்கமாக,  இந்த அரசாங்கம் இருக்கிறது. இந்த நாட்டில் இருக்கின்ற பல்வேறு விதமான மொழிகளை, பண்பாடு, கலாச்சாரத்தை மதிக்க வேண்டியதில்லை என்று  நினைக்கின்ற ஓர் அரசாங்கமாக இருக்கிறது, இந்த அரசாங்கம்.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற சுய அதிகாரங்கள் கொண்ட  பல்வேறு அமைப்புகளை அழித்து ஒழிப்பதை ஒருகாலத்திலேயும் நாம் ஏற்கப் போவதில்லை.நாம் ஒன்றுபடப் போகிறோம், ஒன்றுபட்டு இந்த நாட்டுக்கான காரியத்தைச் செய்ய இருக்கிறோம், செய்வோம்.

இங்கே நான் வந்தது எனக்கு மிகப் பெரிய பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது. அதிலும் மிகப் பெரிய தலைவரான கலைஞர் அவர்களுடைய சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவரைப் பற்றிப் பேசியதைக் கவுரவமாக, பெருமையாக நான் கருதுகிறேன். ஏனென்றால், நான் கலைஞர் அவர்களைப் பற்றிப் பேசுகிறபோது, தமிழ் மக்களுடைய பெருமையை, தமிழ் மக்களுடைய கலாச்சாரத்தை, தமிழ் மக்களுடைய வரலாற்றை, தமிழ் மக்களின் பண்பாட்டைப் பேசுவதாகக் கருதுகிறேன். நான் கலைஞர் அவர்களைப் பற்றி நினைக்கிறபோது கலைஞர், தமிழக மக்களுடைய குரலாக, ஒலியாக இருந்ததை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரைப் பற்றிப் பெருமையடைகிறேன்.

The post தமிழ் மக்களின் குரல் திரு. ராகுல் காந்தி தலைவர் – அகில இந்திய காங்கிரஸ் கட்சி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/rahul-gandhi-chairman-all-india-congress/feed/ 0
தாய் – தாய் நாடு – தாய் மொழி – கலைஞர் திரு. பினராயி விஜயன் முதலமைச்சர் – கேரளா /2019/08/02/pinarayi-vijayan-cm-kerala/ /2019/08/02/pinarayi-vijayan-cm-kerala/#respond Fri, 02 Aug 2019 11:52:48 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1090 The post தாய் – தாய் நாடு – தாய் மொழி – கலைஞர் திரு. பினராயி விஜயன் முதலமைச்சர் – கேரளா appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

திரு. பினராயி விஜயன்

முதலமைச்சர் – கேரளா

தாய் – தாய் நாடு – தாய் மொழி – கலைஞர்

இந்திய அரசியலில் முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடிய அளவிற்கு முக்கியப் பங்காற்றிய கலைஞரின் மறைவால் நாம் ஒரு வலுவான தலைவரை இழந்து நிற்கிறோம்.மற்ற தலைவர்களைப் போல் அவரைப் பற்றிப் பேசிவிட முடியாது. கலைஞரைப் பற்றி பேசுவது என்பதே ஒரு சவால் நிறைந்த பணியாகும். காரணம், பல்வேறு துறைகளில் கலைஞர் ஆற்றியுள்ள பங்களிப்புகளை ஒற்றை உரையில் அடக்கிவிடமுடியாது.

அவர் ஈடுபடாத  துறைகளே இல்லை எனலாம். இலக்கியமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும், திரைப்படத்  துறையாக இருந்தாலும், திராவிடக் கொள்கை களைப் பரப்புவதாக இருந்தாலும், மொழி குறித்ததாக இருந்தாலும் அவர் குறிப்பிடத்தக்க பல சாதனைகளைப் படைத்துச் சென்றுள்ளார்.

தமிழ்மொழியை அவர் மிகவும் விரும்பினார். சாமானிய மக்களுக்கு அவர் ஆற்றியுள்ள பணிகள் என்றென்றும் நினைவு கூரப்படும். மொழிக்காக அவர் நடத்திய போராட்டங்களால் ஒரு தலைமுறையே அந்த மொழியைப் படிக்கவும் பேசவும்  எழுதவும் ஏன் அதில் சிந்திக்கவும் கற்றுக் கொண்டது.

கலைஞர் ஒரு கலை வித்தகர். எனவேதான், அவரது ஒவ்வொரு எழுத்தும் ஓவியம் போல் இருக்கும். கட்டுரையானாலும், நாடகமானாலும் திரைப்பட வசனமாக இருந்தாலும் அதில் அவர்  ஏற்றுக் கொண்ட  திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா  ஆகியோரது சிந்தனைகளையும் கருத்துகளையும் இணைத்திருப்பார். அந்தத் தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் அந்தக் கொள்கைகளை மேலும் மக்களிடம் பரவச்செய்யும் பணியில் அவர்  ஈடுபட்டார்.

பொதுவாக அரசியல்வாதிகளை மக்கள் சில ஆண்டுகள் வரைதான் நினைவில் வைத்திருப்பர்.ஆனால், கலைஞர் போன்றவர்கள் தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பிற்காக அந்த மொழியைப் பற்றிப் பேசும் போதெல்லாம் இவரைப் பற்றி நினைக்க வேண்டி யிருக்கும். தமிழ் மொழி உள்ளவரை கலைஞரும் இருப்பார். அவர் தமது தாயார், தமது தாய்நாடு, தமது தாய்மொழி எனும் மூன்று தாய்மார்களையும் எப்போதும் விரும்பினார்.

அதே போல, அவர் பத்திரிகைத் துறையில் ஆசிரியராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். தமது மாணவப் பருவ காலத்தில் கையெழுத்துப் பிரதியை  நடத்தியதால் –  கிடைத்த அனுபவத்தால்தான்  பிற்காலத்தில் அவர் ‘முரசொலி’ என்ற நாளிதழைச் சிறப்பாக நடத்த முடிந்தது. அவர் ‘முரசொலி’யைத் தமது முதலாவது குழந்தைபோல் வளர்த்தார். அவர் எந்தப்பணியை எடுத்தாலும் அக்கறையுடனும் மிகுந்த ஆர்வத்துடனும் கடமையுணர்வுடனும் செய்து முடித்தார்.

கலைஞர் எப்போதும் தனியாக பொருளாதார வளர்ச்சி பற்றி மட்டும் பேசியது இல்லை. சமூகப் பொருளாதார முன்னேற்றம் குறித்தே பேசினார். அவரது சிந்தனையில் உதித்த உழவர் சந்தை, குடிசை மாற்று வாரியம், தொழில் வளர்ச்சியைப் பரவலாக்கியது ஆகியவற்றின் மூலமாகச்  சமமான சமூகத்தை உருவாக்க அரசியலில் புதிய பாதையைத் தோற்றுவித்தார்.

அவர் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் இவற்றை அமல்படுத்தினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவர் அளித்த முக்கியத்துவத்திற்காக அவர் என்றென்றும்  நினைவு கூரப்படுவார்.  எழுத்தாளராகவும் அரசியல்  தலைவராகவும் அறியப்படும் கலைஞர் அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே சாதிய ரீதியிலான  பாகுபாட்டிற்கு எதிராகப் போராடினார்.

அதோடு மட்டுமல்லாமல் பெண்  அதிகாரமயமாக்கலுக்காக அவர் ஆற்றிய பணிகளை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. 1989-ஆம் ஆண்டு, இந்தியாவிலேயே பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றினார். அவர் இதற்காகச் சட்டம் கொண்டு வந்து 16 ஆண்டுகள் கழித்தே மத்திய அரசு, அதுபோன்ற  சட்டத்தைக் கொண்டு வந்தது.

அவர் நடத்திய மற்றொரு போராட்டம்  திருநங்கை சமூகத்தினருக்காக. அனைத்து மாநில அரசுகளும் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் அவர்களுக்காகத் தனி நலவாரியத்தைக் கலைஞர் ஏற்படுத்திவிட்டார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்காகத் தனி அடையாள அட்டையை வழங்கி  அவர்கள் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றைப்  பெறமுடியும் என்ற நிலையை உருவாக்கியதற்காக இந்த விஷயத்தில் உலகில் தமிழகம் முதன்மையான இடத்தை அடையக் காரணமாக இருந்தார்.

திரைப்படத்துறையில் தமது பேனாவின்  மூலமாக மாறுபட்ட கருத்துகளை விதைத்து தமிழ்த் திரைப்பட உலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியவரும் அவரே.  அவரது திரைப்படங்களில் முற்போக்கான கதாபாத்திரங்கள், உலகில் உள்ள உண்மையான பிரச்சினைகளைப் பேசவைத்தது. ஆவேசமூட்டும் ஆவர் வசனங்களுக்கு நிகராக எழுதக்கூடியவர்கள் இதுவரை எவரும் இல்லை.

ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த அவர், நாட்டில் மிகச்சிறந்த நிர்வாகத்தை வழங்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். மாநில அரசுகளின் உரிமைக்காகவும், மத்திய மாநில உறவுகளை மாற்றியமைக்கவும் கலைஞர் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் மக்களுக்காக அவர் பாடுபட்டதால்தான், அவரது எதிரிகளிடத்திலும்  மரியாதைமிக்க தலைவராகத் திகழ்ந்தார்.

கலைஞர் சமூக நீதியின் காவலர் மட்டுமல்லர்; சோசலிசக் குறிக்கோள்களைக் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தார். தமிழகத்தை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தவேண்டும் என்பதே அவரது பெரும் கனவாக இருந்தது. தமது கனவை நனவாக்குவதற்காகத் தமிழ் மொழி,  தமிழ்மக்கள் ஆகியோரது வளர்ச்சிக்காக ஓய்வில்லாமல் பணியாற்றினார்.  மக்களுக்காக இந்தச் சாதனைகளைப் படைப்பதற்காக அவர் எந்த ஒரு நிலைமையையும் எதிர்கொள்ளக் கூடியவராகத் திகழ்ந்தார்.

நான் என்னுடைய உரையை முடிக்கும் முன்னர், கலைஞர் எப்போதும் விரும்பிய வாசகத்தைச் சொல்லிவிட்டு விடை பெறலாம் என்று நினைக்கிறேன். ‘ஓய்வில்லாமல் உழைத்தவன் இங்கே ஓய்வுகொண்டிருக்கிறான்’ என்பதே அந்த வாசகம்.  இப்படியாக அவர் இறுதியில்  அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

The post தாய் – தாய் நாடு – தாய் மொழி – கலைஞர் திரு. பினராயி விஜயன் முதலமைச்சர் – கேரளா appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/pinarayi-vijayan-cm-kerala/feed/ 0
கூட்டாட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் – ஆந்திரா /2019/08/02/chandrababu-naidu-cm-andhra-pradesh/ /2019/08/02/chandrababu-naidu-cm-andhra-pradesh/#respond Fri, 02 Aug 2019 11:51:14 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1087 The post கூட்டாட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் – ஆந்திரா appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

திரு. சந்திரபாபு நாயுடு

முதலமைச்சர் – ஆந்திரா

கூட்டாட்சியின் நம்பிக்கை நட்சத்திரம்

என் பாரதமே பெருமை கொள்ளும் நாள் இது. சென்னைக் கடலலைகள் மகிழ்ச்சி கொள்ளும் தருணம் இது. இந்திய நாட்டின் மூத்த அரசியல்வாதி கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைச் சென்னை மாநகரில் திறந்து வைத்துள்ளோம். இம்மாபெரும் விழாவில் நான் பங்கு கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

கலைஞர் அவர்கள் 13 முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.  தி.மு.க.வின்  தலைவராக 50 ஆண்டு கள் இருந்துள்ளார். இந்த நாட்டில் எந்த ஒரு தலைவரும் இந்த அளவிற்கு மிக நீண்ட காலம் ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருந்ததில்லை. அவர் எந்தவொரு தேர்தலிலும் தோற்றதில்லை.

இந்த அளவிற்கு மகத்துவம் பெற்ற கலைஞர் அவர்களோடு நான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து பணியாற்றியது ஓர் அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.

அந்த நேரத்தில் தி.மு.க.வும், தமிழ் மாநில காங்கிரசும் 40 இடங்களில் வெற்றி பெற்றன. 2004-ஆம் ஆண்டிலும் அவ்வாறு ஒருங்கிணைந்து பணியாற்றி 40 இடங்களிலும் வெற்றி பெற்றோம்.

அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், மற்றவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கியவர். அது மட்டுமின்றித் தமிழ் நாட்டின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை உருவாக்கி,  அவைகளைச் செயல்படுத்துவதில் ஆர்வம்  கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் அவர் ஆற்றிய அயராத பணிகள், எதிர்கால மக்கள் நினைவுகூரத்தக்க வகையில் இருக்கின்றன.  கூட்டாட்சி யில் அவர் மிகவும் நம்பிக்கை கொண்ட வராகத் திகழ்ந்தார்.  அவர் எப்போதும் கூறுவார்; வலிமையான மாநிலங்கள்தான் வலிமையான நாட்டை உருவாக்கும் என்று.  இதைத்தான் ஆரம்பம் முதல் அவர் வலியுறுத்திக் கொண்டே வந்தார்.

ஜனநாயக மாண்புகள், அரசியல் சட்டப் பாதுகாப்பு, முக்கிய அமைப்புகளைப் பாதுகாத்தல் இவைகளுக்கு இன்றைய தினம் கலைஞர் அவர்கள் கொண்டிருந்த மாண்புகள் தேவைப்படுகின்றன.

நான் எப்போது கலைஞர் அவர்களைச் சந்தித்தாலும், அவர் தமிழர்களின் நலன்கள் குறித்தும், பிரச்சினைகள் குறித்தும் பேசுவார். தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான என்.டி.ஆர். அவர்கள் சென்னைக்குக் குடிநீர் வழங்கினார்.   அதையே நானும் தொடர்ந்து தமிழகத்திற்கு – குறிப்பாகச் சென்னைக்குக் குடிநீர் வழங்குவதைத் தொடர்கிறேன்.

மீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். மூத்த தலைவர் கலைஞர்அவர்கள், என்மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். என் வாழ்வில் இந்த நாள் உணர்வுபூர்வமான  நாளாகும்.  இத்துடன் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post கூட்டாட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் – ஆந்திரா appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/chandrababu-naidu-cm-andhra-pradesh/feed/ 0
செம்மொழியாக்கிய கலைஞர் திரு. வி.நாராயணசாமி முதலமைச்சர் – புதுச்சேரி மாநிலம் /2019/08/02/narayansamy-cm-puducherry/ /2019/08/02/narayansamy-cm-puducherry/#respond Fri, 02 Aug 2019 11:46:26 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1085 The post செம்மொழியாக்கிய கலைஞர் திரு. வி.நாராயணசாமி முதலமைச்சர் – புதுச்சேரி மாநிலம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

திரு. வி.நாராயணசாமி

முதலமைச்சர் – புதுச்சேரி மாநிலம்

செம்மொழியாக்கிய கலைஞர்

தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றவன் நான். அவரது நீண்ட நாள் கனவு தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டும் என்பது தான். அதற்காக அவர் பட்டபாடு – அதற்கு உறுதுணையாக இருந்த அன்னை சோனியா காந்தி அவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடம் சொல்லி அன்னை சோனியா காந்தி அவர்கள் தமிழைச் செம்மொழியாக ஆக்குவதற்குக் கலைஞர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

கலைஞர் அவர்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு; அவர் பேச்சாளராக இருந்த காலத்தில் இருந்து, முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து புதுச்சேரி மாநில மக்களின் மீது பாசமும் பற்றும் வைத்திருந்தார்கள்.

அதனால் தான் நாங்கள் புதுச்சேரி மாநிலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்த அன்றே புதுச்சேரியில் கலைஞர் அவர்களின் வெண்கலச்சிலை அமைப்போம் என்று சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றினோம். அது மட்டு மல்ல! கலைஞர் அவர்களுக்குப் புதுச்சேரி பல்கலைக் கழகத்திலே ஓர் இருக்கையை அமைக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்து அதையும் நிறைவேற்றி இருக்கிறோம்.  மேலும், கலைஞர் அவர்களின் பெயராலே மேற்படிப்புப்பட்ட மையத்தைக் காரைக்காலில் நாங்கள் துவங்கவிருக்கிறோம்.

நான்காவதாக, புதுச்சேரி காரைக்காலில் ஒரு சாலைக்கு டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரைச் சூட்டிப் புகழ் சேர்த்திருக்கிறோம். எங்களைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். டாக்டர் கலைஞர் அவர்களை எப்படிக் கௌரவிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

The post செம்மொழியாக்கிய கலைஞர் திரு. வி.நாராயணசாமி முதலமைச்சர் – புதுச்சேரி மாநிலம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/narayansamy-cm-puducherry/feed/ 0
வாழும் காலம் வழங்கிய மாலைகள் குடியரசுத் தலைவர்கள் /2019/08/02/presidents/ /2019/08/02/presidents/#respond Fri, 02 Aug 2019 11:43:33 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1079 The post வாழும் காலம் வழங்கிய மாலைகள் குடியரசுத் தலைவர்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

சஞ்சீவ ரெட்டி

கலைஞர் கருணாநிதி துணிச்சலானவர்

கியானி ஜெயில் சிங்

திறமைக்கும், வேகத்திற்கும், அன்புக்கும், அருளுக்கும், நல்ல நிர்வாகத் திறமைக்கும், பிரச்சனைகளை அணுகுவதற்கும் உரிய ஒரு மகத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர் கலைஞர் கருணாநிதி.

வி.வி.கிரி

கருணாநிதியின் திறமையான நிர்வாகத்தின் கீழ் தமிழ்நாட்டு அரசாங்கம் மக்களுக்கு முன்னேற்றத்தையும், செழுமையையும்தரும்.

சங்கர் தயாள் சர்மா

டாக்டர் கருணாநிதி அவர்கள் தமிழ் இலக்கியத்தின் சிரஞ்சீவி. அவரை முத்தமிழ் அறிஞர் என்று பட்டம் சூட்டி அழைக்கலாம். ஆர்.வெங்கட்ராமன்

அரசியலில் இலக்கியத்தை இணைத்து இரண்டிலும் புகழ் பெற்றவர். அரசியல்வாதிகளும், கலைஞர்களும் மதிக்கத்தக்க அளவுக்கு உள்ளவர். நல்ல சேவை மனப்பான்மை கொண்டவர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நண்பர்களோடு பழகுவதில் இனிய சுபாவமுடையவர்.

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

ஓர் அறிஞர். ஒரு கவிஞர். இரண்டும் இணைந்தவர் கலைஞர்.

கே.ஆர்.நாராயணன்

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை கைதூக்கி விட இடஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை என்பனபோன்ற எண்ணிறந்த சட்டங்களை நிறைவேற்றி தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரது கொள்கைகளுக்கு வலிவு சேர்க்கும் விதமாய் கலைஞர் அவர்கள் ஆற்றி வரும் பணிகள் மிகுந்த சிறப்புக்குரியவவை.

திருமதி. பிரதிபா பாட்டில்

கலைஞர் கருணாநிதி சிறந்த கவிஞர். பன்முகத்திறன் படைத்த எழுத்தாளர். ஆட்சி வல்லுநர்.

The post வாழும் காலம் வழங்கிய மாலைகள் குடியரசுத் தலைவர்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/presidents/feed/ 0
பிரதமர்கள் /2019/08/02/prime-ministers/ /2019/08/02/prime-ministers/#respond Fri, 02 Aug 2019 11:41:08 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1077 The post பிரதமர்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

இந்திராகாந்தி

தி.மு.கழகத்தின் தலைவர் கருணாநிதி அவர்கள், நண்பராக இருந்தாலும், விரோதியாக இருந்தாலும் இரண்டிலும் உறுதியாக இருப்பவர்.

சரண்சிங்

திரு.அண்ணாதுரை உருவாக்கிய உயர்ந்த மரபுகளைப் புகழத்தக்க விதத்தில் திரு.கருணாநிதி கையாண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

வி.பி.சிங்

எனக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் என் பக்கத்தில் இருந்து கலைஞர் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். தனது ஆட்சியைப் பற்றிக்கூடப் பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக இலட்சியத்திற்காக என்னோடு ஒன்றுபட்டிருக்கிறார்.

தேவேகவுடா

தமிழகத்துக்கான நிதி, திட்டங்களைக் கூடுதலாகப் பெறுவதில் கலைஞர் அதிக அக்கறை காட்டுவார். வி.பி.சிங், குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங் எல்லோரிடமுமே தமிழகத்துக்கான திட்டங்களைப் பெறுவதில் அவர் அழுத்தம் கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும். இதனால்தான், ஒரு கட்டத்தில் வட இந்திய ஊடகங்கள் ‘இந்தியாவின் தலைநகரம் இப்போது டெல்லி அல்ல; சென்னை’ என்றெல்லாம் எழுதின.

ஏ.பி.வாஜ்பாய்

திரு.கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், மக்கள் தொண்டில் சமுதாயத்தின் நலிந்த பிரிவினரை முன்னேற்றுவதற்காகத் தம் வாழ்வைத் தந்துள்ளார். இந்த நலிந்த பிரிவு மக்கள் நலமும், பொருளாதார எழுச்சியும்  பெறுவதற்காகப் போராடும் ஒரு மாபெரும் வெற்றி வீரர்!

மன்மோகன்சிங்

இந்திய நாட்டின் மற்றும்  தமிழ்நாட்டின் வரலாற்றிலும் கலைஞர் அவர்களின் பெயர் பொன்னெழுத்துகளால் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.

The post பிரதமர்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/prime-ministers/feed/ 0