“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே?! – Dr Kalaignar Karunanidhi தமிழ் வெல்லும் Tue, 06 Aug 2019 19:33:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.15 தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! /2019/08/04/ninaivugal-narumanam-ponrathu/ /2019/08/04/ninaivugal-narumanam-ponrathu/#respond Sun, 04 Aug 2019 16:55:57 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=2182 The post தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! – திரு மு.க.ஸ்டாலின்

தலைவர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென்ற உணர்வோடு,இந்த அவசரச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு தொடக்கத்திலேயே இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, அத்தனை பேரும் எழுந்து நின்று நம்முடைய அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறோம்.

பின்னர், தலைவர் அவர்களோடுநெருங்கிப்பழகிய சிலமூத்த மாவட்டக்கழகத்தினுடைய செயலாளர்கள், இயக்கத்தினுடைய முன்னோடிகள் நேரத்தின்அருமையைக் கருதி குறிப்பிட்ட ஒரு சிலரைஅழைத்து அவர்களும் இங்கே உரையாற்றி,அதைத்தொடர்ந்து நம்முடைய துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்அவர்கள், அதற்குப் பின்னால் நான் உரையாற்றக்கூடிய நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.நிறைவாக, நம்முடைய பொதுச் செயலாளர் உரையாற்ற வேண்டும் என்ற நிலையிலே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர் அவர்கள், நான் பேச முடியாது, அந்தச் சூழ்நிலையில் நான் இல்லை. எனவே, யாரும் என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று என்னி டத்திலே ஏற்கனவே சொல்லியிருக் கிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியவர் கள் எல்லாம் குறிப்பிட்டதைப்போல, தலைவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை, நீங்களெல்லாம் தலைவரை இழந்து இருக்கிறீர்கள், நான் தலைவரை மட்டும் அல்ல; தந்தையையும் இழந்து நான் நின்று கொண்டிருக்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக, உடல் நலிவுற்ற நிலையில் தொண்டையிலே ஓர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பேச முடியாத நிலையிலே இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அவருடைய அன்பைப் பெற்று, ஆதரவைப் பெற்று அவருடைய வாழ்த்துகளோடு, செயல் தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொண்டு உங்களின் ஒத்துழைப்போடு கழகப் பணிகளில் நான் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.

கட்சியின் வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட கள ஆய்வு!

அந்த அடிப்படையிலே ஒவ்வொரு மாவட்டமாக நான் ஆய்வு நடத்திட வேண்டுமென்று முடிவெடுத்து, கழக அமைப்புகளை அறிவாலயத்திற்கு இதே கலைஞர் அரங்கத்திற்கு அழைத்து, ஏறக்குறைய இரண்டு, மூன்று மாத காலம் நான் ஆய்வு நடத்தியிருக்கிறேன். கட்சியினுடைய வளர்ச்சிக்காக, கட்சியில் மேலும் புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற அந்த அடிப்படையில் அந்த ஆய்வு நிகழ்ச்சி நடந்தது.

 

அந்த ஆய்வின் ஒவ்வொரு கூட்டத்தி லும் ஒவ்வொரு மாவட்டக் கழக, நகரக் கழக, ஒன்றியக் கழக, பேரூர்க் கழக நிர்வாகிகளோடு நான் கலந்து பேசுகிறபொழுது நிறைவாக அவர்களுக்குச் சொல்லி அனுப்பியது, அனை-வரும் ஒற்றுமையாக இருந்து – ஒன்றுபட்டு உழைத்து – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரக்கூடிய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை உருவாக்கி, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை மலரச்செய்து அப்படி மலருகின்ற அந்தச் சாதனையைத் தலைவர் இடத்தில் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்.அவருடைய காலத்திலேயே அவருடைய காலடியில் கொண்டுசென்று நம்முடைய வெற்றியைக் குவிக்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு கூட்டத்திலும் எடுத்துச் சொன்னேன்.

தலைவருக்கு அளித்த உறுதியைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு!

அண்மையில் ஈரோட்டில் நடை பெற்ற நம்முடைய மண்டல மாநாட்டில்கூட, நான் உரையாற்றுகிறபோது நிறைவாக குறிப்பிட்டுச் சொன்னேன் விரைவில் கழக ஆட்சியை உருவாக்குவோம் – ஆட்சியை தலைவருடைய காலத்திலேயே உருவாக்கி அவரிடத்தில் கொண்டுசென்று ஒப்படைப்போம் என்று சொன்னேன். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாத நிலையிலே இன்று தவித்துக் கொண்டிருக்கிறோம் என்ற ஏக்கத்தோடு நான் நின்று கொண்டிருக்கிறேன்.

தலைவர் உடலை, அவரை உருவாக்கிய அண்ணன் கல்லறைக்குப் பக்கத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்திட வேண்டும் என்று நாமெல்லாம் முடிவெடுத்தோம். அது நம்முடைய முடிவல்ல – தலைவருடைய முடிவு! தலைவர் எண்ணிய எண்ணம்! அவருடைய ஆசை! அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம்.உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்கள் எல்லாம் எங்களிடத்திலே வந்துசொல்லுகிறார்கள்.‘இவ்வளவு நேரம் தான் அவர் உயிர் இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது’ என்ற அந்த நிலை வருகிற போது இனி காப்பாற்றவே வழியில்லை, முடிந்த வரையில் நாங்கள் போராடி வருகிறோம் என்று டாக்டர்கள் கூறிய அந்தச் சூழ்நிலையில் நாங்கள் எல்லாம் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.சோகத்திலே கண்ணீர் மல்க மருத்துவர்களோடுநாங்கள் பேசிக்கொண்டிருந்தாலும் நம்முடைய முன்னோடிகள் எல்லாம் தலைவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டுமே எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தபொழுது பல நண்பர்கள் மூலமாகத் தமிழக அரசுக்குச் செய்தியைச் சொல்லி அனுப்புகிறோம்.

ஆனால் அங்கிருந்து எங்களுக்கு வந்த செய்திகள் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையிலே தான் இருந்தது. அதற்குப் பிறகு நம்முடைய முன்னோடிகள் எல்லாம் என்னிடத்தில் சொன்னார்கள் நாம் நேரடியாக முதலமைச்சரைச் சந்திப்போம் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தால் நிச்சயமாக அவர்கள் நிறைவேற்ற முன்வருவார்கள் என்று சொன்னபோது நான் தயாரானேன்.

தலைவருக்காக எதையும் இழக்கத் துணிந்தேன்!

அப்பொழுது நம்முடைய முன்னோடிகள் எல்லாம் சொன்னார்கள். நீங்கள் வரவேண்டாம் நாங்கள் போகிறோம் – நீங்கள் செயல் தலைவர் – நீங்கள் தலைவருடைய மகன் – நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் வரக்கூடாது. அவர்களைச் சந்திக்க நீ வரக்கூடாது என்று சொன்ன நேரத்தில் இல்லை இல்லை என்னுடைய மானம் மரியாதை கௌரவம் எது போவதாக இருந்தாலும் தலைவருக்காக நான் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறேன் வந்தே தீருவேன் என்று சொல்லி நாங்களெல்லாம் முதலமைச்சரைச் சென்று சந்தித்தோம். சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துச் சொல்கிறோம்.

முதல்வரின் கரங்களைப் பற்றிக் கொண்டு வேண்டினேன்!

நம்முடைய கோரிக்கையை எடுத்துச் சொல்கிறபோது முதலமைச்சர் சொல்லுகிறார், விதிமுறைகளை முடக்க வாய்ப்பில்லை, நாங்கள் சட்ட ஆலோசனை கேட்டிருக்கிறோம். அவர்களும் மறுத்திருக்கிறார்கள் என்றார். நான் அப்போது சொன்னேன், அரசு போடக்கூடிய, அரசு எண்ணக் கூடிய அந்த எண்ணத்தைத்தான் சட்ட ஆலோசகர்கள் சொல்லுவார்கள். நாங்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். ஆகவே, நீங்கள் கட்டாயம் இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினோம்.

இன்னும் வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன், முதலமைச்சருடைய கைகளைப் பிடித்து நான் கெஞ்சிக் கேட்டேன், தலைவருடைய ஆசை – அந்த ஆசையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம், அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டேன்.

அப்பொழுதுகூட அவர்கள், சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக அங்கிருந்து எங்களை விரட்டிவிட வேண்டும் என்பதற்காக, பார்ப்போம் என்று ஒரு வார்த்தை சொன்னார்கள், அதை நம்பி நாங்கள் வெளியே வந்தோம்.

மருத்துவமனையிலே வந்து அமர்ந்து இருக்கிறோம். சரியாக 06.10 மணி அளவிலே தலைவர் கலைஞர் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் எங்களிடத்திலே வந்து சொன்னார்கள். உடனடியாக, ஒரு கடிதத்தை எழுதி அண்ணன் துரைமுருகன் அவர்கள், மற்றும் நம் முன்னோடிகள் சிலரோடு அந்தக் கடிதத்தைக் கையில் கொடுத்து – முறையாகக் கேட்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் வீட்டுக்கு அனுப்பு கிறோம். எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். சென்றார்கள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து விட்டார்கள், என்ன? என்று கேட்கிறோம். மறுத்துவிட்டார்கள்! என்று அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொல்கிறார்கள். எங்களால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம், தொலைக்காட்சிகளில் செய்திகள் வருகிறது. தலைமைச் செயலாளர் அவர்களுடைய அறிவிப்பு வருகிறது.

மூத்த வழக்கறிஞர் வில்சன் வழங்கிய வாக்குறுதி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் கேட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதற்குப் பதில் வேறு இடம் ஒதுக்கப்படுகிறது, என்று தலைமைச் செயலாளரின் அறிவிப்பு வெளிவருகிறது. பார்த்ததும் நாங்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளானோம். பேசிக்கொண் டிருக்கிறபோது, மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் உள்ளே வருகிறார். அவரிடத்திலே விவாதித்தோம்; நான் நீதிமன்றத்திற்குச் செல்லட்டுமா? என்று கேட்கிறார். முடியுமா? என்று கேட்டோம். இல்லை,நாங்கள் இரவே நீதிபதியைச் சென்று சந்திக்கிறோம் என்று சொன்னார்கள். உடனே சென்றார்கள்.

பிளாஷ் நியுஸ் பார்த்து கழகத்தினர் ஆரவாரம்!

அதற்குப் பிறகு 10.30 மணிக்கு விசா ரணை நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.அதற்குப் பிறகு, மறுநாள் காலை 8.30மணி அளவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இங்கு இருக்கக்கூடிய நம்முடைய வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் அவர்கள், விடுதலை அவர்கள், என்.ஆர். இளங்கோ அவர்கள் இன்னும் நம்முடைய கழக வழக்கறிஞர்கள் சிலர் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்முடைய வில்சன் அவர்களுடைய தீவிர முயற்சியின் காரணமாக 10.30 மணிக்குத் தீர்ப்பு வருகிறது. அண்ணா அவர்களின் சமாதிக்கு அருகிலே தலைவர் கலைஞர் அவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்ற தீர்ப்பு வருகிறது. நாங்கள் தலைவரின் உடலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அழுது கொண்டிருக் கின்றோம். எங்களுக்குக் கூட இந்தச் செய்தி முதலில் வரவில்லை. ஆனால், எதிரிலே இலட்சக்கணக்கிலே திரண்டிருக்கக்கூடிய நம்முடைய தோழர்களிடத்தில் இருந்த செல்போனில் ஃபிளாஸ் நியூஸ் என்கிற அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு அவர்கள் முழங்குகிறார்கள்!

கழக வழக்கறிஞர் அணிக்கே பெருமைகள் அனைத்தும்!

பின்னர், செய்தி கிடைத்தது. அந்தச் செய்தியைக் கேட்டு இவ்வளவு பெரிய சோகச் சூழலிலும் அன்றைக்கு நம் எல்லோருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. உள்ளபடியே, எனக்கு நன்றி சொன்னீர்கள், என்னைப் பாராட்டினீர்கள். என்னைப் பொறுத்தவரையிலே, நான் நம்முடைய வழக்கறிஞர் குழுவிற்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும். மீண்டும் சொல்லுகிறேன். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வழக்கறிஞர் அணிக்குத்தான் இந்தப் பெருமை சேரும் – சேரும் – சேரும் என்று நான் இந்த நேரத்திலே சொல்லுகின்றேன்.

அன்று தலைவர் கூறியது!

நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால் என்ன நிலைமை, இந்த இயக்கத்திற்கு எத்தனையோ சோதனைகள் வந்ததுண்டு, அதிலும் குறிப்பாக, ஒருமுறை நம்முடைய கொடிக்கு நம்முடைய உதயசூரியன் சின்னத்திற்கு மிகப்பெரிய சோதனை வந்தது. அது நமக்கு உரிமை உண்டா? எனும் வழக்கு. கொடியும் பயன்படுத்தக்கூடாது, கட்சியினுடைய பெயரைப் பயன்படுத்தக்கூடாது, சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு சூழ்நிலை வரக்கூடிய நிலையிலே, தேர்தல் கமிஷனில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணையின் தீர்ப்பு நமக்குச் சாதகமாக வந்தது.

அந்தத் தீர்ப்பு வந்தவுடன் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களிடத்தில் சொல்லுகிறார். ஒருவேளை தீர்ப்பு மாறாக வந்திருந்தால், நான் அண்ணாவினுடைய சமாதிக்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டிருப்பேன், நீங்கள் எல்லாம் வந்து எனக்கு மலர்வளையம் வைத்திருப்பீர்கள் என்று கூறினார். அதைத்தான் நான் எண்ணிப் பார்த்தேன்.

ஒருவேளை நமக்குத் தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்று சொன்னால், அந்தத் தலைவர் கலைஞருக்குப் பக்கத்திலே என்னைப் புதைக்கக்கூடிய சூழ்நிலைதான் நிச்சயமாக உருவாகியிருக்கும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த நிலை வரவில்லை.

தலைவர் வழிநின்று கடமையை ஆற்றுவோம்!

தலைவர் கலைஞருடைய எண்ணம், அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் மறைந்தும் இந்தப் போராட்டத்திலே வெற்றி பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையிலே அவருக்கு, இன்றைக்கு நாமெல்லாம் வணக்கத்தை, நம்முடைய அஞ்சலியை – திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மூலமாக நாம் தெரிவித்துக் கொண்டிருந்தாலும், இந்தச் செயற்குழுக் கூட்டத்திற்கு வந்திருக்கக்கூடிய உங்களை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை உறுப்பினர்களையும் நான் தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புவது, தலைமைக் கழகத்தின் சார்பில் என்று சொல்வதைவிட நம்முடைய இதயத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய, நம்மை இன்றைக்கும் இயக்கிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்த இயக்கத்தைக் காப்போம், தலைவர் கலைஞர் வழி நின்று நம்முடைய கடமையை ஆற்றுவோம் என்பதுதான்.

தலைவர் கலைஞர் அவர்களை உங்களுடைய உருவிலே நாங்கள் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட தலைவர் கலைஞருடைய எண்ணங்களை அவருடைய செயல்பாடுகளை, அவருடைய நினைவுகளை, அவர் உள்ளத்திலே கொண்டிருந்த அந்த உணர்ச்சிகளை, அந்த உணர்வுகளைக் காப்பற்ற உறுதி எடுப்போம்! உறுதி எடுப்போம்! உறுதி எடுப்போம்

The post தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/04/ninaivugal-narumanam-ponrathu/feed/ 0
ஜூன் 3 தமிழ்ச் செம்மொழி நாள் /2019/08/02/june-3-is-tamil-classic-language-day/ /2019/08/02/june-3-is-tamil-classic-language-day/#respond Fri, 02 Aug 2019 09:26:11 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=996 The post ஜூன் 3 தமிழ்ச் செம்மொழி நாள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

ஜூன் 3 தமிழ்ச் செம்மொழி நாள்

வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என முழங்கிய தலைவர் கலைஞர் அவர்கள், தமது 14வது வயதில் புலி, வில், கயல் சின்னங்கள் பொறித்த தமிழ்க் கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடத் தொடங்கி, தம் வாழ்வின் இறுதி வரை தமிழ் மொழியின் நலன் காக்க அரும்பாடுபட்டவர். மொழிப்போரில் தனிமைச் சிறை கண்டவர்; தமது ஆட்சிக் காலம் முழுவதும் தமிழ் மொழியை மேன்மை கண்டிடச் செய்தவர்

இளமை முதல் முதுமை வரை உறுதியாகப் போராடி தமிழ் மொழிக்கு; தம் படைப்புகளாலும் தமது ஆட்சிக் காலத் திட்டங்களாலும் சிறப்புச் சேர்த்த ‘தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3ம் நாளை, இனி, ஆண்டுதோறும் தமிழ்ச் செம்மொழி நாள் என்று கடைப்பிடிப்போம். அதையொட்டி நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் ஓர் அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது. 

தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால், அவர் காலத்தில் அவரது சொந்த நிதியில் உருவாக்கப்பட்ட ‘‘கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை’’யின் சார்பில் மாதந்தோறும் மருத்துவ உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்களுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த ‘முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை’ எனும் புதிய அறக்கட்டளை தொடங்கப்படவிருக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் ஏழை நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற ஆண்டுதோறும் உதவி செய்யப்படும். பள்ளி மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். 

இளைய தமிழ்ச் சமுதாயம் ஏற்றம் பெறும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில், குடிமைப்பணித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் – ‘ஐ.ஏ.எஸ். அகாடமி’ ஒன்று தொடங்கப்படும். இதன்வாயிலாக மத்திய – மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகள் உள்நாட்டு, பன்னாட்டுப் பொது நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள்; இவற்றில் இளைய சமுதாயம் வெற்றிகரமாகப் பணியிடம் பெற முழுமையான பயிற்சி அளிக்கப்படும்.

பல்வேறு துறைகளில் ஆண், பெண் இரு பாலின இளைஞர்களின் திறன்மிக சாதனைகளைப் பாராட்டும் வகையில், ஆண்டு தோறும் ‘‘இளம் சாதனையாளர் விருது’’ வழங்கப்படும்.

பத்திரிகை, நாடகம் – திரைப்படம், புதினம், சிறுகதை, கவிதை, தொலைக்காட்சித் தொடர் என அனைத்துத் துறைகளிலுமே, தம் எழுத்தாற்றலை வெளிப்படுத்திய தலைவர் கலைஞர் அவர்கள், அத்தனையிலும் திராவிட இயக்கக் கொள்கைகளையே முழங்கியிருக் கிறார். இந்த முழக்கம் தொடர்ந்திடும் வகையில், ஆண்டுதோறும் திராவிட இயக்க மூத்த படைப்பாளிகளுக்கும், இளைய படைப்பாளிகளுக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் ‘திராவிடப் படைப்பாளி விருது’ வழங்கப்படும்.

இயக்கமே தம் இதயம், இதயம் இயங்குவதே, இயக்கத்திற்காகத்தான் என, 94 வயது நிறைவடையும் வரை கழகம் வளர்த்த தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கத்தைக் கட்டிக் காக்கின்ற பணியில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்ற ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர், ஊராட்சிச் செயலாளர்களுக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.

கழகத்தில் எந்தப் பதவியும் எதிர்பாராமல் சமூகப் பணிகளை மேற்கொண்டு அதன் வாயிலாகக் கழகத்திற்கு மக்களிடம் பெருமை சேர்க்கக்கூடிய உடன்பிறப்புகளுக்கு, அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு விருது வழங்கப்படும் என்பதைத் தலைமைக் கழகத்தின் சார்பில் மிகுந்த மகிழ்ச்சியோடு நான் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

The post ஜூன் 3 தமிழ்ச் செம்மொழி நாள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/june-3-is-tamil-classic-language-day/feed/ 0
நட்பிற்கு இலக்கணமான கலைஞர்! /2019/08/02/natpirku-ilakananamana-kalainar/ /2019/08/02/natpirku-ilakananamana-kalainar/#respond Fri, 02 Aug 2019 07:16:49 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=985 The post நட்பிற்கு இலக்கணமான கலைஞர்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

நட்பிற்கு இலக்கணமான கலைஞர்!

தீரர்களின் கோட்டமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய இந்தத் திருச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில் அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் அவர்களுக்குச் சிலை, கலைஞர் அவர்களை நமக்கு உருவாக்கித் தந்திருக்கக் கூடிய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுக்குச் சிலை, இரண்டு தலைவர்களுக்கும் தளகர்த்தராக விளங்கிய அன்பிலார் அவர்களுக்குச் சிலை ஆகிய மூன்று சிலைகளைத் திறந்து வைத்திருக்கின்றோம். வெறும் சிலை திறப்பு விழாக்களோடு நிறுத்திக் கொள்ளாமல், தலைவர் கலைஞர் அவர்களின் 96வது பிறந்த நாளையும் இணைத்து அத்தோடு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கூடிய நிகழ்ச்சியையும் இணைத்து, ஒரு மாபெரும் பொதுக்கூட்டமாக நம்முடைய நேரு அவர்கள் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

 

தி.மு.கழகத்தின் தீரர்கள் கோட்டம் திருச்சி. அதனால்தான் அண்ணா அவர்கள் அடிக்கடிச் சொல்வார்கள்; திருச்சி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாடி வீடு என்று. கலைஞர் அவர்கள் சொல்லுவார் திருச்சி என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை என்று. எல்லோரும் சொல்லுவார்கள் இது தீரர்கள் கோட்டை என்று, தீரர்கள் கோட்டை மட்டுமல்ல அத்தோடு இன்னொரு வார்த்தையையும் சேர்த்துச் சொல்லுகின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் கோட்டம் இந்தத் திருச்சி என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன்.

நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலின்போது இதே தென்னூரில் பிரச்சாரத்திற்கு நான் வந்திருந்தேன். கொளுத்துகின்ற வெயில், அந்த வெயிலைக் கூடப் பொருட்படுத்தாமல் இங்கு மக்கள் திரண்டிருந்த காட்சி, அந்தக் கூட்டத்தில் நான் பேசுகின்றபொழுது குறிப்பிட்டுச் சொன்னேன். அதிலும் குறிப்பாக வேட்பாளராக நிற்கக்கூடிய மதிப்பிற்குரிய திருநாவுக்கரசர் அவர்களிடத்தில் தெளிவாகச் சொன்னேன். எப்பொழுது நீங்கள் இந்தத் திருச்சிக்கு நாடாளுமன்றத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டீர்களோ அப்பொழுதே, நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விட்டீர்கள் என்று நான் அப்பொழுதே எடுத்துச் சொன்னேன். 3 இலட்சத்திற்கு மேல் அதிக வாக்குகளைப் பெற்று, இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்று சொன்னால் அது நிரூபிக்கப்பட்டிருக்கின்றதா இல்லையா?

இதே திருச்சியை, தி.மு.க.வின் மலைக் கோட்டையாக மாற்றிக் காட்டிய பெருமை அன்பிலார் அவர்களுக்கு உண்டு. அன்பிலார் அவர்கள் கலைஞர் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய ஒருவராக வாழ்ந்து காட்டினார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்றிருந்தார். அறிஞர் அண்ணாவின் பாசத்தைப் பெற்றிருந்தார்.கலைஞருக்கும் அன்பிலாருக்கும் இடையே ஆழ்ந்த நட்பு! தலைவர் கலைஞர் அவர்கள் அதிகமான அளவிற்கு அன்பிலார் அவர்களிடத்தில் பாசம் கொண்டிருந்த காரணத்தினால், தலைவர் கலைஞர் அவர்களுக்கும், அன்பிலார் அவர்களுக்கும் உரிமையோடு சிறுசிறு சண்டைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. 

கலைஞர் அவர்களுக்கும்அன்பிலார் அவர்களுக்கும் இடையிலான நட்பைப் பார்த்து பேராசிரியர்அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுக்காட்டுவார், கணவன் – மனைவி நட்பைப் போன்றது கலைஞர் – அன்பிலார் ஆகியோரின் நட்பு என்று. அதில் யாரும் தலையிட முடியாது. கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை வந்தால் யாராவது தலையிடமுடியுமா? தலையிடவும் கூடாது. அதை அவர்களாகவே சரி செய்துகொள்வார்கள். அந்தப் பொருள்பட நம்முடைய பேராசிரியர் அவர்கள் பலநேரங்களில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்கள். மிக இளம் வயதில் அன்பிலார்அவர்கள் அண்ணாவின் அன்பைப் பெற்றிருந்தார்கள். 

ஒரு செய்தியைச்சொல்ல வேண்டும் என்று சொன்னால்; தந்தை பெரியார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் பிரிந்தார்கள். அப்படிப் பிரிந்த நேரத்தில் அன்பிலார் அவர்கள் யார் பக்கம் போவார்? யாரிடத்தில் சென்று அடைக்கலமாவார், என்ற ஒரு கேள்விக்குறி இருந்தது. ஆனால், அன்பிலார் அவர்கள் தைரியமாக – துணிச்சலாக தந்தை பெரியாரிடத்தில் சென்று, நான் உங்களிடத்தில் இருக்கமாட்டேன்; அண்ணாவிடத்தில்தான் இருப்பேன் என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு. அண்ணாவிடத்தில் வந்து சேர்ந்தவர் நம்முடைய அன்பிலார் அவர்கள். 

1962ஆம் ஆண்டு சட்டமன்றச் பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. அப்பொழுது லால்குடியில் வேட்பாளராக நம்முடைய அன்பிலார் அவர்கள் நிறுத்தப்பட்டார்கள். அவரை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது. அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் நம்மை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றார். நம்முடைய அன்பில் அவர்கள் நிற்கின்ற லால்குடி தொகுதிக்குப் பெரியார் வருகின்றார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருக்கக்கூடிய மேடையில் வந்து உட்கார்ந்து இருக்கின்றார்.அப்படி உட்கார்ந்திருக்கின்ற பொழுது, திடீரென்று அன்பிலார் அவர்கள் மேடையேறி வருகின்றார்.

அது, காங்கிரஸ் கட்சிக்காக நடக்கின்ற பிரச்சார மேடை. தந்தை பெரியாரைப் பார்க்க வேகமாக வருகின்றார். ஒருசால்வையைக் கொண்டுவந்து பெரியாருக்குப் போர்த்திவிட்டு அவருடைய வாழ்த்தைப் பெற்றுவிட்டுப் போய் விடுகின்றார். பெரியார் அதிர்ச்சியடைந்தது மட்டுமல்ல, அவர் அந்தப் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகின்றபொழுது சொல்லுகின்றார். இப்பொழுது என்னிடம் வந்து வாழ்த்துப் பெற்றவர் யாரென்று கேட்டால், என்னுடைய செல்லப்பிள்ளை அன்பில் என்கிறார். சொல்லிவிட்டு அத்தோடு இன்னொன்றையும் சொல்லுகின்றார். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடியவன் அவன்தான். பணியாற்ற வேண்டும், தொண்டாற்ற வேண்டும் என்ற உணர்வோடு இருக்கக்கூடியவன் அவன்தான் சிறந்த செயல்வீரன். காங்கிரஸ் வேட்பாளர் செல்வச் சீமான்! காமராஜருக்கு மிகமிக வேண்டியவர்! யார் உங்களுக்கு உழைப்பார்களோ, யார் உங்களுக்குப் பாடுபடுவார்களோ அவர்களைச் சிந்தித்து, நீங்கள் தேர்ந்தெடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார், தந்தை பெரியார். அந்த அளவிற்கு அன்பிலார் அவர்கள் மீது தந்தை பெரியார் அவர்கள் பாசத்தை வைத்திருந்தார்கள். 

அதேபோல்தான் அறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா அவர்கள் அன்பில், அன்பில் என்று கூட அழைக்கமாட்டார். அம்பில், அம்பில் என்றுதான் செல்லமாக அழைப்பார். அந்த அளவிற்கு அண்ணாவிடத்திலும் அன்பைப் பெற்று இருந்தார்கள். 1957ல் முதன் முதலில், சட்டமன்றத் தேர்தல் களத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்றது. களத்தில் போட்டியிடலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய திருச்சியில் மிகப்பெரிய மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் முடிவெடுத்து அறிவித்தோம். அந்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர் அன்பிலார் அவர்கள். 

அப்பொழுதுதான் அண்ணா கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு என்ன தலைப்பு என்று தெரியுமா, ‘‘அன்பில் அழைக்கிறார்’’ என்று அண்ணாவின் கடிதம். அந்தக் கடிதம் இன்றைக்கும் பேசப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்பிற்குரிய இடத்தில் அந்தக் கடிதம் இடம் பெற்றிருக்கின்றது. 

அதுமட்டுமல்ல, 18 ஆண்டு காலம் தந்தை பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும் பிரிந்திருந்த நேரம்; 1967இல் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது. மிகப்பெரிய வெற்றியைப் பெறுகின்றோம். ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றோம். அண்ணா அவர் கள் முதல்அமைச்சராகப் பொறுப்பு ஏற்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா அவர்களின் உள்ளத்தில் ஓர் ஆசை ஏற்பட்டு, பக்கத்தில் இருந்த அன்பிலாரிடத்திலும், தலைவர் கலைஞரிடத்திலும் சொல்லுகின்றார். என்னவென்று தெரியுமா? தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளேன், எப்படியாவது தந்தை பெரியார் அவர்களைப் பார்க்க வேண்டும். 18 வருடமாக நாம் அவரோடு எந்தத் தொடர்பும் வைத்திருக்க வில்லை. எப்படியாவது சென்று ஒரு வாழ்த்தைப் பெறவேண்டும் என்று ஒரு வார்த்தை சொல்லுகின்றார். 

சொன்ன அடுத்த வினாடி அன்பிலார் அவர்கள் திருச்சியில்தான் தந்தை பெரியார் அவர்கள் இருக்கின்றார். நான் உடனே ஏற்பாடு செய்கின்றேன், என்று சொல்லி, சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு தந்தை பெரியார் அவர்களைப் பார்க்க அண்ணா அவர்களையும், தலைவர் கலைஞர் அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து தந்தை பெரியார் அவர்களைப் பார்க்கவைத்து ஒரு பெரிய திருப்பத்தை, திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல; தி.மு.கழகத் திற்குமட்டுமல்ல; இந்தத் தமிழ் உலகத்திற்கே ஒரு மிகப்பெரிய திருப்புமுனை வரலாற்றை உருவாக்கித் தந்த மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவர்; அதைச் செய்து முடித்துத் தந்தவர் அன்பிலார் அவர்கள்!.

எப்பொழுதும் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர் கலைஞர் அவர்களோடு உடன் செல்லக்கூடியவர்களில், முக்கியமாக அன்பிலார் அவர்கள் இருப்பார். தேர்தல் பிரச்சாரம் மட்டுமல்ல, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற எந்த மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் சென்றாலும் கலைஞர் அவர்கள் காரில்தான் பயணம் செய்வது வழக்கம். அப்பொழுது உடன் வரக்கூடியவர்களில் அன்பிலார் அவர்கள் நிச்சயம் இருப்பார்.

ஒரு முறை 1967ல் தேர்தல் நடந்த நேரத்தில் தலைவர் கலைஞரைக் கொலை செய்திட வேண்டும் என்று திட்டமிட்டு, சைதாப்பேட்டை தொகுதியில் சில ரௌடிகள், கொலைகாரக் கும்பல் ஒன்று சேர்ந்து அவரைக் கொலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட; ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவரைக் காப்பாற்றி, விடிந்ததற்குப் பிறகுதான் அவரைக் கொண்டு வந்து விட்டார்கள்.

அப்பொழுது அண்ணா அவர்கள் அன்பிலார் அவர்களை அழைத்துக் கண்டித்திருக் கிறார். எப்பொழுதும் அவரோடு நீதானே செல்வாய்; நீ ஏன் போகவில்லை என்று சத்தம் போட்டிருக்கிறார். அந்த அளவிற்கு ஒரு காவிய நட்போடு தலைவர் கலைஞர் அவர்களும், அன்பிலார் அவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்றபொழுது உள்ளபடியே நாமெல்லாம் பெருமைப்படுகின்றோம். அப்படிப்பட்ட அன்பிலார் அவர்கள் சிலை – கலைஞர் அவர்கள் சிலை – அண்ணா அவர்கள் சிலை, அனைத்தையும் ஒரே நாளில் அதுவும் திருச்சியில் இன்றைக்குத் திறந்து வைத்திருக்கின்றோம் என்று சொன்னால், நான் அதைத் தான் எண்ணிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

1971ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் மறைவிற்குப் பிறகு திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில்தான் தலைவர் கலைஞர் அவர்கள் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு உருவாக்கித் தந்தார்கள். ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். மாநில சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என்ற ஐம்பெரும் முழக்கங்கள். 

தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாமல் கொண்டாடக்கூடிய முதல் பிறந்தநாள், இந்த 96 ஆம் பிறந்த நாள். தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகின்ற பொழுது நான் குறிப்பிட்டுச் சொன்னேன்; அவர் மறையவில்லை, நம்முடைய மனதோடு இருக்கின்றார். அவர் மரணமடையவில்லை நம்முடைய ஊனோடு கலந்திருக்கின்றார். நம்முடைய உணர்வில் இருக்கின்றார். இன்றைக்கும் நம்மை அவர்தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்.அவர் தந்திருக்கக்கூடிய அந்த ஊக்கத்தின் – உற்சாகத்தின் – பயிற்சியின் காரணமாகத்தான் இன்றைக்கு இந்த மாபெரும் வெற்றியை நாம் பெற்றிருக்கின்றோம்; மறந்து விடக்கூடாது.

The post நட்பிற்கு இலக்கணமான கலைஞர்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/natpirku-ilakananamana-kalainar/feed/ 0
பேரறிஞர் பெருந்தகையும் முத்தமிழறிஞர் கலைஞரும்… /2019/08/02/the-great-lion-muthamizharinar-kalainar/ /2019/08/02/the-great-lion-muthamizharinar-kalainar/#respond Fri, 02 Aug 2019 06:47:12 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=976 The post பேரறிஞர் பெருந்தகையும் முத்தமிழறிஞர் கலைஞரும்… appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

பேரறிஞர் பெருந்தகையும் முத்தமிழறிஞர் கலைஞரும்…

கலைஞர் சிலை திறப்பு விழா-காஞ்சிபுரம் 14-2-2019

ன்று அண்ணன் பிறந்த காஞ்சியில் அண்ணன் அவர்களால் நமக்காக உருவாக்கித் தரப்பட்ட, அறிஞர் அண்ணா அவர்களுடைய அன்புத் தம்பியாக உண்மைத் தம்பியாக விளங்கி மறைந்தும், மறையாமலும் நம்முடைய உள்ளத்தில் இன்றைக்கும் குடிகொண்டிருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச்சிலை திறப்பு விழா. 

கலைஞருடைய சிலை திறப்பு விழா மட்டுமல்ல. ஏற்கனவே, மார்பளவுச் சிலையாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்களுக்கும் முழு உருவச்சிலை என்ற நிலையில் மாற்றப்பட்டு, அறிஞர் அண்ணாவினுடைய முழு உருவச்சிலையையும் திறந்து வைத்ருக்கின்றோம். 

அறிஞர் அண்ணா அவர்களுடைய சிலையும், தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையும் அமைந்திருக்கக்கூடிய இடம் திருக்கச்சி நம்பித் தெரு என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அந்தத் திருக்கச்சி நம்பித் தெருவில் உள்ள இந்தக் கட்டடத்தில் இருந்து தான், அறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய ‘திராவிட நாடு’ இதழ் வெளிவந்திருக்கின்றது. 1998-ல் தலைவர் கலைஞர் பவளவிழா மாளிகை என்ற நிலையில் இந்தக் கட்டடத்தின் முகப்பில் அறிஞர் அண்ணா அவர்களின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பெருமை சேர்த்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அப்படி நடைபெற்ற அந்த விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தினுடைய முதல்வராக வந்து பங்கேற்றார். நான் அன்றைக்குச் சென்னை மாநகரத்தின் மேயர் என்ற அந்த நிலையில் தலைவரோடு வருகை தந்து அதில் பங்கேற்றேன். 

வாழ்வு மூன்று எழுத்து, வாழ்வுக்குத் தேவையான பண்பு மூன்றெழுத்து, பண்பிலே பிறக்கும் அன்புக்கு மூன்றெழுத்து, அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து, காதல் விளை விக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரர் செல்லும் களம் மூன்றெழுத்து, களத்திலே பெறும் வெற்றி மூன்றெழுத்து, அந்த வெற்றிக்கு – நம்மை அழைத்துச் செல்லும் அண்ணா மூன்றெழுத்து, என்று பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி; தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதலாவது மாநாட்டில் வரவேற்றுப் பேசுகின்ற நேரத்தில் குறிப்பிட்டுச் சொன்னார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய அண்ணா பிறந்த இந்த மண்ணில் இன்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்குச் சிலை எழுப்பப்பட்டிருக்கின்றது. 

என்னுடைய அரசியல் பயணத்திற்கு எத்தனையோ உந்து சக்திகள் இருக்கலாம். ஆனால், அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் இருந்த உந்து சக்தி எது என்று கேட்டால், இந்தக் காஞ்சி நகரம்தான். முதன்முதலாக 12 அல்லது 13 வயதில் என்னைப் பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்ட நேரத்தில் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக நான் பல நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தேன். 

அதையொட்டி 1971 ம் ஆண்டு அறிஞர் அண்ணா துயில் கொண்டிருக்கக்கூடிய அவருடைய கல்லறையில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்து, வணங்கி அங்கிருந்து கையில் ஒரு தீப்பந்தத்தை அண்ணா ஜோதியை கையில் ஏந்தி, தொடர் ஓட்டமாக நான் புறப்பட்டு நேராக அண்ணா சாலையில் இருக்கக்கூடிய அண்ணா சிலைக்குச் சென்று மாலை அணிவித்து, அதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து தொடர் ஓட்டமாக இந்தக் காஞ்சி நகரத்துக்கு வந்து அன்று காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கரத்தில் தொடர் ஓட்டமாகக் கொண்டு வந்த அண்ணா ஜோதியை நான் ஒப்படைத்தேன். 

அதை ஒப்படைத்த நேரத்தில், கலைஞருக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் யார் யார் என்று கேட்டால்; அன்றைக்குப் பொதுச்செயலாளராக இருந்த நாவலர் அவர்கள், பொருளாளராக இருந்த மரியாதைக்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள். 

அறிஞர் அண்ணா அவர்களுடைய தீபத்தைப் பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்குச் சிலையாக நிற்கின்றார். அண்ணாவின் தீபத்தை ஒப்படைத்த நான் இன்றைக்கு இந்த மேடையில் இயக்கத்தினுடைய தலைவராக நின்று கொண்டிருக்கின்றேன். இதுதான் திராவிட இயக்கம். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட இயக்கத்தினுடைய பயணம் என்பது, முடிகின்ற ஓட்டம் அல்ல, அது தொடர்கின்ற ஓட்டம். தொடர்ந்து கொண்டே இருக்கக் கூடிய ஓட்டம். அந்தக் கொள்கை என்பது ஒரு அணையா தீபமாகும். 

இன்று தேதி பிப்ரவரி-14. உலகமே இன்று காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. காதல் என்றால் அன்பு என்று பொருள். அன்பினுடைய இலக்கணமாக இருந்தவர்கள்தான் அறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞர் அவர்களும். அண்ணா என்ற காதலனை கலைஞர் என்ற காதலி எப்போது பார்த்தாரோ அன்றிலிருந்து அவர்களுக்குள்ளே அந்தக் காதல் வந்துவிட்டது. அன்பு வந்துவிட்டது. இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால் அண்ணாவின் மரணம் வரையில் அது மாறாமல் இருந்தது. ஏன் அவருடைய மரணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது. 

இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ இருக்குமிடம் தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தை தந்திடு அண்ணா – நான் வரும்போது மறவாமல் கையோடு கொணர்ந்து உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா’ என்று 1969ல் அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த நேரத்தில் கண்ணீர் மல்கக் கவிதை அஞ்சலி செலுத்தினாரே தலைவர் கலைஞர் அவர்கள். நான் அதை எண்ணிப் பார்க்கின்றேன்.

50 ஆண்டுகள் கழித்து, கலைஞர் இறந்த போது அவருடைய அரை நூற்றாண்டு காலக் கனவை அண்ணாவின் மீது அவர் வைத்திருந்த அழியாக் காதலை நிறவேற்றுவதற்கு நாம் நடத்திய போராட்டம் சாதாரண போராட்டம் அல்ல, ஒரு மிகப் பெரிய சட்டப்போராட்டம் நடத்தினோம். இது நமக்குக் கிடைத்த பெருமைகளில் ஒன்று. இது எனக்குத் தனிப்பட்ட பெருமை அல்ல. ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கக் கூடிய பெருமை. 

திருவாரூர் என்பது தலைவர் கலைஞர் பிறந்த ஊர். காஞ்சிபுரம் என்பது அவர் புகுந்த ஊர். அறிஞர் அண்ணா அவர்கள் கலைஞரைத் தவிர வேறு யார் மீதும் இவ்வளவு பாசம் வைத்திருக்கமாட்டார். அதேபோல், கலைஞர் அவர்களும் அண்ணாவைத் தவிர வேறு யார் மீதும் இவ்வளவு மரியாதை வைத்திருக்க மாட்டார். இந்த இரண்டு தலைவர்களைப் பற்றி அறியும் போதும், அவர்களைப் பற்றிப் படிக்கின்ற நேரத்தில் ஒரு காவிய நட்பு – காவிய பாசம் கொண்டவர்களாக இருவரும் இருந்திருக்கின்றார்கள் என்பது புரியும். தலைவர் கலைஞர் அவர்களுடைய எழுத்து முதன்முதலாக எந்த ஏட்டில் வந்ததென்று சொன்னால், அறிஞர் அண்ணா அவர்களால் நடத்தப்பட்ட திராவிட நாடு இதழில் தான்.

1963ம் ஆண்டு கைது செய்யப்பட்டு தலைவர் கலைஞர் அவர்கள் நீண்ட காலம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். அப்போது அறிஞர் அண்ணா அவர்கள் வேலூரில் இருக்கக்கூடிய மத்திய சிறையில் அடைபட்டிருக்கின்றார். தலைவர் கலைஞர் அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிஞர் அண்ணா விடுதலை செய்யப்படுகின்றார். அறிஞர் அண்ணா. திருச்சியில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு விடுதலையாகக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களை வரவேற்க திருச்சிக்கே செல்லுகின்றார். 

அதற்குப் பிறகு விடுதலையான தலைவர் கலைஞர் அவர்கள் நேராக சென்னைக்கு வரவில்லை. தாம் பிறந்த திருவாரூக்குச் செல்லுகின்றார். காரணம், அங்கே வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அங்கிருந்து சென்னை செல்லலாம் என்று தலைவர் கலைஞர் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான், அண்ணா அவர்கள் கலைஞர் அவர்களுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘நீ நேராக காஞ்சிபுரத்திற்கு வா. நீ வந்ததற்குப் பிறகு நாம் இருவரும் சேர்ந்து சென்னைக்குச் செல்லலாம்’ என்று நம்முடைய தலைவர் கலைஞருக்கு அண்ணா உத்தர விடுகின்றார். 

தலைவர் கலைஞர் அவர்கள் காஞ்சிபுரம் வருகின்றார், அதற்குப்பிறகு அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் சேர்ந்து சென்னை வருகிறார்கள். மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்படுகின்றது. அதற்குப் பிறகு அண்ணாவும், தலைவரும் கோபாலபுரம் இல்லத்திற்குச் செல்கின்றார்கள். வாசலில் வழி மேல் விழிவைத்துக் கலைஞரை ஈன்றெடுத்த அவருடைய தாயார் அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

அப்போது அண்ணா அவர்களைப் பார்த்து, அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்கள் ஒரு வார்த்தை சொன்னார்கள். அது என்ன வென்று கேட்டால், ‘உங்களை உங்கள் அம்மா ஒரே ஒரு நாள் பிரசவ வேதனையில் பெற்றிருப்பார்கள். அதனால்தான் நீங்கள் வேலூர் சிறையிலிருந்து நேராகக் காஞ்சிபுரம் சென்றீர்கள். ஆனால், என் பிள்ளையைப் பல நாள் இடுப்பு வலி பிரசவ வேதனைக்குப் பிறகு நான் பெற்றெடுத்தேன். அதனால் தான் திருச்சியில் விடுதலையாகி திருவாரூருக்குச் சென்று மூன்று நாள் கழித்து என்னைப் பார்க்க என் பிள்ளை வந்திருக்கின்றது’ என்று அண்ணா அவர்களிடத்தில் உரிமையோடு அஞ்சுகம் அம்மையார் சொல்லுகின்றார். 

அப்போது அண்ணா அவர்கள், அன்னை அஞ்சுகம் அம்மையாரைப் பார்த்து, ’ஏன் நீங்கள் திருச்சிக்கே வந்திருக்கலாமே?’ என்று சொல்லுகிறபோது, ‘நான் போனால் என்ன? நீங்கள் போனால் என்ன? இரண்டு பேரும் ஒன்றுதானே’ என்றார் அஞ்சுகம் அம்மையார் அவர்கள்.

அதாவது, அண்ணா வேறு அஞ்சுகம் வேறு அல்ல. கலைஞரைப் பொருத்த வரையில் இரண்டு பேரும் ஒன்றுதான் என்று தலைவர் கலைஞர் அவர்கள் தம்முடைய பொதுவாழ்வில் இருந்திருக்கின்றார். தம்முடைய உயிரினும் மேலானவர்களுக்கு, தம்முடைய உயிரினும் மேலான உடன் பிறப்புகளாக இருக்கக் கூடிய உங்களைத்தான் நினைத்தார். அதேபோல், தலைவர் கலைஞர் அவர்கள் தம்முடைய தாயினும் மேலாக – தாயாக அண்ணாவைத்தான் நினைத்தார். அதனால்தான் இன்றைக்கு அண்ணா பிறந்த இந்த மண்ணில் தலைவர் கலைஞருக்குச் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.

தமக்குப் பின்னால் கலைஞர்தான் என்பதை மிக இளமைக் காலத்திலேயே அறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதற்குப் பல உதாரணங்கள் உண்டு. 

திருச்சி தி.மு.க. வில் தோழர்களிடத்தில் சில பிரச்சினை, அப்பொழுது திருச்சிக்கு நான் போகமாட்டேன் என்று அண்ணா திட்ட வட்டமாகச் சொல்லுகின்றார். திருச்சியைச் சேர்ந்த கழகத் தோழர்கள் அழைத்தார்கள். முடியாது -வரமுடியாது என்றார் அண்ணா. திருச்சியைச் சேர்ந்த மொத்த கழகத் தோழர்களும் வருகின்றார்கள் அண்ணாவை அழைக்க. ’இல்லை, இல்லை’ என்றார். வந்துதான் தீரவேண்டும் என்று சொல்லுகின்றபோது ‘‘நான் முதலில் வரமாட்டேன், வேண்டுமானால் என் தம்பி கருணாநிதியை முதலில் அனுப்பி வைக்கின்றேன். அனுப்பி வைக்கின்ற நேரத்தில் தி.மு.க. என்பது அங்கு உயிரோடிருந்தால் நான் வருகின்றேன் என்று அவர்களை அனுப்பிவைத்தார். அந்தளவுக்கு தமக்குப் பதிலாக, கலைஞரைத்தான் நினைத்தார் அண்ணா அவர்கள்.

கல்லக்குடி போராட்டமா? கலைஞரைத் தான் தலைமை தாங்க உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றிய காரணத்தால் அறிஞர் அண்ணா அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை உச்சி முகர்ந்து பாராட்டி, கைவிரலில் கணையாழி அணிவித்தாரே, அந்தக் கணையாழியைக் கூட அவரே கடைக்குச் சென்று அவரே போய் வாங்கி அந்தக் கணையாழியைத் தலைவர் கலைஞருக்கு அணிவிக்கின்ற நேரத்தில் சொன்னாரே, ‘என்னுடைய மனைவிக்குக் கூட நகை வாங்கக் கடைக்குச் சென்று நகை வாங்கியது கிடையாது. உனக்காக நான் வாங்கியிருக்கின்றேன்’ என்று சொல்லி அதை அணிவித்து மகிழ்ந்தாரே பேரறிஞர் அண்ணா அவர்கள்.

இந்தக் கழகத்தில் பலதரப்பட்ட உணர்வுள்ளவர்கள், பல எண்ணங்கள் கொண்டவர்கள் யாராக இருந்தாலும், சிறப்பாகப் பணியாற்றக் கூடியவர்கள் உண்டு. எதையும் நிதானமாகப் பணியாற்றக் கூடியவர்கள் உண்டு. அவர்களை எல்லாம் இன்னும் சிறப்பாக – திறம்படச் செயல்பட வைக்க திறமைசாலிகள் வேண்டும். அத்தகைய சிறப்புகளைப் பெற்றவர் என் தம்பி கருணாநிதிதான்’ என்று பலமுறை தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி, அண்ணா அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். 

ஒரு நாளைக்கு கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதை அவருக்குத் தெரியாமல் அதைக் கண்காணித்தால்தான் கண்டுபிடிக்க முடியும். இல்லை என்றால் கண்டுபிடிக்க முடியாது’ என்று அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டவர். ’என் தம்பிகள் நான் சொல்வதைச் செய்து முடிப்பார்கள். ஆனால், தம்பி கருணாநிதி மட்டும்தான் நான் சொல்லாமலேயே செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பவர்’ என்று அறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்களும் தம்முடைய இறுதி மூச்சு நிற்கின்ற வரையில், கடைசி மூச்சு நிற்கின்ற வரையில் அண்ணா – அண்ணா – அண்ணா என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார். 

நான் இன்னமும் சொல்லுகின்றேன், வயது மூப்பின் காரணமாக, பேசமுடியாத நிலையில் தொண்டையில் டியூப் போடப்பட்டு சைகை மூலமாக எங்களிடத்தில், வரக்கூடிய முன்னோடிகளிடத்தில் தம்முடைய உணர்வை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் மருத்துவர்கள் அவரைப் பேச வைப்பதற்காக, சில முயற்சிகள் சில பயிற்சிகள் நடந்தன. 

அவர் கையில் ஒரு பேனாவைத் தந்து கையில் ஒரு வெள்ளைக் காகிதத்தைக் கொடுத்து ‘எழுதுங்கள்’ என்று சொன்னால் அவர், எழுதிய முதல் எழுத்து எப்பொழுதும் அண்ணா – அண்ணா – அண்ணா என்று தான் தொடங்குவார். அதேபோல் பேச்சுப் பயிற்சி நடைபெறுகின்ற போது கூட நாங்கள் எல்லோரும் ‘ஏதாவது பேசுங்கள்’ என்று கேட்கின்ற போது அண்ணா – அண்ணா – அண்ணா என்றுதான் சொல்லுவார். கலைஞருக்கு எல்லாமே அண்ணாதான் – அண்ணாதான் – அண்ணாதான் என்ற நிலையிலே அவர் கடைசி நிமிடம் வரையில் வாழ்ந்திருக்கின்றார். 

அதனால்தான், அறிஞர் அண்ணா அடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற அந்த நினைவிடத்தின் பக்கத்திலேயே அவருக்கு இடம் கிடைத்திருக்கின்றது. அண்ணா அறிவாலயத்தில் கம்பீரமாக நிற்கக்கூடிய அறிஞர் அண்ணாவினுடைய திருவுருவச் சிலைக்கு அருகில்தான் கலைஞருடைய சிலை அமைந்திருக்கின்றது.. இதே, காஞ்சிபுரத்தில் இப்போது திறந்து வைத்திருக்கின்றோமே, இங்கேயும் இந்தச் சிலைக்கு அருகில்தானே அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இது ஒன்றே போதும், அவர்களது காதலைச் சொல்ல. காதலில் தெய்வீகக் காதல் என்பார்கள். அண்ணாவுக்கும் கலைஞருக்கும் இருந்த காதல் தெய்வீகக் காதல் அல்ல, கொள்கைக் காதல்.

The post பேரறிஞர் பெருந்தகையும் முத்தமிழறிஞர் கலைஞரும்… appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/the-great-lion-muthamizharinar-kalainar/feed/ 0
பெரியாரின் சிம்மாசனத்தில் கலைஞர்! /2019/08/02/kalainar-on-the-throne-of-periyar/ /2019/08/02/kalainar-on-the-throne-of-periyar/#respond Fri, 02 Aug 2019 05:41:49 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=951 The post பெரியாரின் சிம்மாசனத்தில் கலைஞர்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

பெரியாரின் சிம்மாசனத்தில் கலைஞர்!

கலைஞர் சிலை திறப்பு விழா – ஈரோடு 30.1.2019

லைவர் கலைஞர் அவர்களுடைய சிலை ஈரோட்டில் அமைந்திருக்கக்கூடிய வீதி யின் பெயர் திரு.வி.க வீதி. என்று பெயர் பெற்று இருக்கின்றது. எனவே, பொருத்தமாக மிகவும் சிறப்பானதொரு நிலையில் அமைந்திருக்கின்றது. ‘சுயமரியாதை இயக்கத்தினுடைய தந்தை – நம்முடைய தந்தை பெரியார் அவர்கள். அந்த இயக்கத்துக்குத் தாய் நான்தான்’ என்று திரு.வி.க அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்கள். 1948 ஆம் ஆண்டு இதே ஈரோட்டில் திராவிடர் கழகத்தினுடைய மாநாடு நடைபெற்றிருக்கின்றது. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட திரு.வி.க அவர்கள், ‘திராவிட நாடு’ போன்ற அமைப்புக் கொண்ட அந்தப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றியிருக்கின்றார்கள்.

அதே மாநாட்டில்தான், தலைவர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற, ‘தூக்கு மேடை’ நாடகம் நடந்திருக்கின்றது. அத்தகைய ஈரோட்டில் 70 ஆண்டு காலத்திற்குப் பிறகு தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. தலைவர் கலைஞர் அவர்களுடைய குருகுலமான ஈரோட்டில் இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. 

கலைஞரின் மகனாக நான் இந்தச் சிலையைத் திறந்து வைக்கிறேன். கழகத்தின் பொதுக்குழுவில் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த நேரத்தில் அப்பொழுது நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன். 

 

 

நீங்கள் எல்லோரும் தலைவரை மட்டும் இழந்திருக்கின்றீர்கள். நானோ தலைவரை மட்டும் இழந்துவிடவில்லை என்னுடைய தந்தையையும் சேர்த்து நான் இழந்திருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுச் சொன்னேன். அந்தத் தந்தையினுடைய சிலையை இன்னொரு தலைவரோ, தொண்டரோ திறப்பதில் வியப்படைய வேண்டிய அவசியமில்லை. அது புதியதுமில்லை. ஆனால், தந்தையின் சிலையை மகன் திறந்து வைக்கிறார் என்று சொன்னால் உண்மையில் வரலாற்றில் பதிவாகியிருக்கக் கூடிய ஒரு செய்தியாக அமைந்திருக்கின்றது. இந்தத் தகுதியை எனக்கு உருவாக்கித் தந்தவரே நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான். அவர் என்னைப் பெற்றெடுத்தவர் மட்டுமல்ல.

என்னையும் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவராக உயிர்ப்பித்தவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான். இந்த இடத்தில் நான் நிற்கின்ற நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையைத் திறந்து வைக்கின்ற நேரத்தில் அந்தச் சிலைக்கு மலர்கள் தூவப் படுகின்ற நேரத்தில் என்னுடைய எண்ணங்கள் எல்லாம் என்னுடைய சிந்தனைகள் எல்லாம் எங்கோ பறந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு உணர்ச்சி மயமாக நான் எப்போதும் இருந்தது இல்லை. அவ்வளவு உணர்ச்சியோடுநான் நின்று கொண்டிருக்கின்றேன்.

இந்தச் சிலையைப் பார்க்கின்ற நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களே உயிர் பெற்று மீண்டும் வந்து விட்டாரோ என்று நினைக்கத்தான் நமக்கெல்லாம் தோன்றுகிறது.

 

’பாராட்டிப் போற்றிவந்த பழமை லோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்’

 

என்று தந்தை பெரியார் அவர்களைப் பற்றி நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் கவிதை பாடியிருக்கின்றார்கள். அத்தகைய தந்தை பெரியார் பிறந்த ஊர்மட்டுமல்ல, கலைஞர் என்ற சமூகப் போராளி உருவான ஊரும் இந்த ஈரோடுதான். ‘என்னுடைய பெற்றோர்கள் படி படி என்று பள்ளிக் கூடங்களைக் காட்டி கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், நான் ஈரோட்டில் தந்தை பெரியார் பள்ளியில் படித்தவன்’ என்று தர்மபுரியில் தந்தை பெரியாரின் சிலையைத் திறந்து வைத்துவிட்டு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். 

தந்தை பெரியார் அவர்கள், கலைஞர் மீது அதிகளவு பாசம் கொண்டவர். அதே அளவிற்கு நம்பிக்கை கொண்டிருந்தவர். தந்தை பெரியார் அவர்களைப் பொருத்தவரையில் தம்னுடைய உணர்ச்சிகளை எப்பொழுதும் யாரிடத்திலும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். ஆனால், தலைவர் கலைஞரிடத்தில் அந்த உணர்வை, அந்தப் பாசத்தைப் பல நேரங்களில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றார். அதற்குப் பலசான்றுகள் உண்டு. 

1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு வெள்ளிச் சிம்மாசனம் வழங்கும் விழா நடைபெறுகின்றது. அந்த விழாவில் தந்தை பெரியார் அவர்கள், அந்த மேடையில் முதல்வராக உட்கார்ந்திருக்கக் கூடிய தலைவர் கலைஞர் அவர்களை, இங்கே வா இங்கே வா, என்று கையைப் பிடித்து தாம் உட்கார வேண்டிய அந்த வெள்ளிச் சிம்மாசனத்தில் தலைவர் கலைஞர் அவர்களை உட்காரவைத்து அழகு பார்த்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதைப் பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிடுகின்றபோது, ‘என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பொன்னாள் இந்நாள்’ என்று பெருமையோடு சொல்லியிருக்கின்றார். 

சாந்தா அல்லது பழனியப்பன்’ என்ற நாடகத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ‘சிவகுரு வேடம்’ ஏற்று நடிக்கின்றார். அந்த நாடகத்தின் அரங்கேற்ற நிகழ்ச்சி புதுச்சேரியில் நடக்கின்றது. அந்த விழாவிற்குத் தந்தை பெரியார் வந்திருக்கின்றார். அறிஞர் அண்ணா வந்திருக்கின்றார். பட்டுக்கோட்டை அழகிரிசாமி வந்திருக்கின்றார். அந்த நாடக அரங்கேற்ற விழா பாதியில் நிறுத்தப்படுகின்றது. 

காரணம் ஒரு கலகக்காரக் கும்பல் உள்ளே நுழைந்து ஒரு மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்துகின்றார்கள். தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை, பட்டுக்கோட்டை அழகிரி சாமி ஆகியோரைப் பாதுகாத்து, ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து விட்டார்கள். அதன்பிறகு தலைவர் கலைஞர் அவர்களும், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்களும் புதுவை நகர வீதி யில் நடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். 

நடந்துசென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கலகக்காரர்கள் அந்த மூன்று பேரையும் கண் மூடித்தனமாகத் தாக்குகிறார்கள். அப்படிப் பட்ட நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களைப் பலமாகத் தாக்கி விட்டு, அவரைத் தூக்கி, அப்படியே சாக்கடையில் வீசிவிட்டுப் போகின்றார்கள். அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் எல்லோரும் தலைவர் கலைஞர் அவர்கள் இறந்து விட்டாரோ என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு அந்தக் காட்சி அமைந்திருந்தது. 

மறுநாள் காலையில் தந்தை பெரியார் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, வேக வேகமாக ஓடிவந்து பார்க்கிறார். படுக்கையில் படுத்து இருக்கக் கூடிய தலைவர் கலைஞர் அவர்களைத் தம் மடிமீது படுக்க வைத்து, அவர் பட்டிருக்கக் கூடிய காயங்களுக்கு எல்லாம் மருந்துபோட்டு, அதற்குப் பிறகு ‘நீ இங்கு இருக்க வேண்டாம்; நீ நான் இருக்கக் கூடிய ஈரோட்டிற்கு வா’ என்று உடனடியாகத் தலைவர் கலைஞர் அவர்களை ஈரோட்டிற்கு அழைத்து வந்து தம்முடைய ‘குடியரசு’ வார இதழில் துணை ஆசிரியராக இருந்து பணியாற்று என்று உத்தரவிட்டார். 

அதற்குப் பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் அந்த வார இதழில் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றியிருக்கின்றார். அந்தச் சமயத்தில்தான் திராவிடர் கழகம் உருவாகிறது. அப்படி உருவாகக் கூடிய திராவிடர் கழகத்திற்குத் கொடியை அமைத்தாக வேண்டும்; ஆலோசனை நடக்கின்றது. அந்த ஆலோசனையில் என்ன முடிவு செய்யப்படுகின்றது என்று சொன்னால் கருப்பு நிறத்தில், அதற்கு நடுவில் சிவப்பு. எனவே முழுமையாகக் கருப்பு இருக்க வேண்டும். இடையில் சிவப்பு நிறம் வட்ட வடிவத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

அப்பொழுது உடனடியாகக் கருப்பு நிறத்தை ஓர் அட்டையில் தயார் செய்கின்றார்கள். சிவப்பு நிறத்திற்கு எந்த வர்ணமும் கிடைக்கவில்லை. கருப்பு மை இருந்தது, அதைச் சுலபமாகச் செய்துவிட்டார்கள். அப்பொழுது, சிவப்பு மை கிடைக்கவில்லை, உடனே தலைவர் கலைஞர் அவர்கள் என்ன செய்தார் என்று தெரியுமா?

அங்கு மேஜை மீது இருக்கக்கூடிய குண்டூசியை எடுத்து, தம்முடைய விரல் நுனியில் குத்தினார். அதிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை எடுத்து அந்தக் கருப்பு நிறத்திற்கு நடுவில் வட்ட வடிவமாகப் பூசினார். அதுதான் திராவிடர் கழகத்தினுடைய கொடியாக இன்றைக்கு அமைந்திருக்கின்றது. 

அன்று திராவிடர் கழகத்தினுடைய கொடிக்காக ரத்தம் சிந்திய தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலை இன்றைக்கு ஈரோட்டில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பது மிக மிகப் பொருத்தமானது.

The post பெரியாரின் சிம்மாசனத்தில் கலைஞர்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/kalainar-on-the-throne-of-periyar/feed/ 0
தலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்? /2019/08/02/head-where-do-you-go/ /2019/08/02/head-where-do-you-go/#respond Fri, 02 Aug 2019 05:34:13 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=947 The post தலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்? appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டிர்கள்?

ண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை அன்னை சோனியா காந்தி அவர்கள் திறந்து வைத்தபோது, எனது நினைவிற்குச் சில நிகழ்ச்சிகள் வந்தன.

1961ல் சென்னை மாநகராட்சியை , தி.மு.க. வென்ற நேரத்தில் தி.மு.க. சார்பில் சென்னை ஜிம்கானா கிளப் முன்பு பெருந் தலைவர் காமராசர் சிலையை, பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் திறந்து வைத்தார்கள்.

2018ல் இன்று, அதே நேரு குடும்பத்தைச் சார்ந்த அன்னை சோனியா அவர்கள், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும். 

நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இது ஒரு முக்கியமான நாள். எனது வாழ்விலும் மறக்க முடியாத நாள்.

நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணாவினுடைய பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய தினம், நம்முடைய தலைவர் கலைஞர் பிறந்தநாள்,அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட நாள் ஆகியவை நாம் மறக்க முடியாத நாட்கள். அந்தப் புகழ்மிக்க வரிசையில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்ட இந்த நாளும் இணைந்திருப்பதை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்

இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள் மட்டுமல்ல, எனது வாழ்விலும் முக்கியமான நாள் என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால், தந்தை பெரியாரின் கனவை நாம் நிறைவேற்றி இருக்கிறோம்!

1968 ஆம் ஆண்டு தலைவர் கலைஞருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்தான். சிலையைத் திறந்து வைக்க அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களும் ஒப்புக்கொண்டார். ஆனால் தமக்குச் சிலை அமைக்க வேண்டாம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

அதற்குப்பிறகு கலைஞருக்குச் சிலை வைத்தே ஆகவேண்டும் என்று ‘விடுதலை’ நாளிதழில் 1968-ஆம் ஆண்டு பெரியார் அவர்களே தலையங்கம் எழுதினார். ‘சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்கிறேன்’ என்றும் பெரியார் அவர்கள் சொன்னார்கள். அண்ணா அவர்களின் உடல்நலக்குறைவு, மறைவு ஆகியவற்றால் அந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

1971ஆம் ஆண்டு, பெரியார் அவர்கள் தலைவர் கலைஞருக்கான சிலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினார்கள். சிலை அமைக்கும் குழுவின் புரவலராகப் பெரியார் இருந்தார். தலைவராகத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் இருந்தார். துணைத் தலைவராக இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இருந்தார்கள்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் முயற்சியால் கலைஞருக்கு எல்.ஐ.சி. அருகில் சிலை திறந்து வைக்கப்பட்டதும் – அதன் பிறகு நடந்த நிகழ்வுகளும் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அந்தப் பிரச்னைக்குள் நான் அதிகம் செல்ல விரும்பவில்லை. அது தேவையும் இல்லை.

இன்றைய தினம் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் அருகில் ஓய்வெடுத்துவரும் தலைவருக்கு, நாளெல்லாம் அண்ணா அண்ணா என்று உள்ளம் உருகிய தலைவருக்கு, அண்ணா சாலையில் – அண்ணா அறிவாலயத்தில் – அண்ணா சிலைக்கு அருகில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

‘‘வீடுவரை உறவு,
வீதிவரை மனைவி,
காடுவரை பிள்ளை, 
கடைசிவரை யாரோ!’’

என்று எழுதினார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

ஆனால், அண்ணாவுக்குக் கடைசிவரை கலைஞர்தான்! கலைஞர்தான்! கலைஞர் தான்!

தலைவர் கலைஞர் அவர்களை இழந்து இன்றுடன் 128 நாட்கள் ஆகின்றன. காலையிலே கோபாலபுரம் செல்லும்போதும், அங்கிருந்து முரசொலி அலுவலகம் செல்லும்போதும், அதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வரும்போதும், மீண்டும் மாலையில் அறிவாலயம் வரும்போதும் கலைஞர் நம்மோடு இருக்கிறார், இன்றைக்கும் நம்மை இயக்குகிறார், அவர் மறைய வில்லை, மறையவே இல்லை என்ற உணர்வு தான் என் உயிரில் ஓடிக்கொண்டு இருக்கிறது. எங்கோ மறைந்து நின்று இன்றைக்கும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்தான் எனக்கு எப்போதும் இருக்கிறது.

எனக்கு அக்காள்கள்தான் உண்டு, அண்ணன் இல்லை, ஆனால் அண்ணனாக நான் கருதுவது பேராசிரியரைத்தான்’ என்று மூச்சுக்கு முந்நூறு தடவை பேராசிரியர், பேராசிரியர் என்று அழைப்பீர்களே, தலைவர் அவர்களே! உங்கள் பேராசிரியர் அவர்கள் முன்னிலையில்தான் அண்ணா அறிவாலயத்தில் விழா நடைபெற்றது; நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்?

உங்களால் சொக்கத்தங்கம் என்று வர்ணிக்கப்பட்ட சோனியா காந்தி அம்மையார் அவர்கள் டெல்லியிலிருந்து இங்கே வந்து அமர்ந்து இருக்கிறார். தலைவர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?

என்னுடைய தந்தையைப் போன்றவர் தலைவர் கலைஞர் என்று உங்களைப் பாராட்டிச் சொன்ன சோனியா அவர்கள் இங்கே இருக்கிறார்; தலைவர் கலைஞர் அவர்களே எங்கே போய்விட்டீர்கள்?

போராட்டக் குணம் படைத்தவர் தலைவர் கலைஞர்’ என்று உங்களுக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறாரே இந்தியாவின் இளந்தலைவர் ராகுல் காந்தி தலைவர் கலைஞர் அவர்களே, எங்கே போய்விட்டீர்கள்?

1999ம் ஆண்டுகளில் டெல்லியில் கூட்டணி ஆட்சி நடந்தபோது பல்வேறு சிக்கலான நேரங்களில் எல்லாம் நல்லெண்ணத்துடன் உங்களுடன் இருந்து செயல்பட்ட ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் இங்கே இருக்கிறார்; தலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?

உங்களின் சமூகநீதிக் கனவுகளைக் கேரள மாநிலத்தில் அமல்படுத்திவரும் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் இங்கே இருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?

டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்து உங்களது ஆலோசனைகளை பெற்றுச் செயல்பட்ட புதுவை மாநில இன்றைய முதல்வர் நாராயணசாமி இங்கே இருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?

நீங்கள் எங்கும் போகவில்லை. போகவும் மாட்டீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு இங்குதான் இருக்கிறீர்கள்.

The post தலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்? appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/02/head-where-do-you-go/feed/ 0