admin – Dr Kalaignar Karunanidhi தமிழ் வெல்லும் Sun, 18 Aug 2019 14:41:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.15 கலைஞர் வன்னியர் பொது சொத்து வாரியம் /dt_gallery/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/ /dt_gallery/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/#respond Tue, 06 Aug 2019 13:59:26 +0000 /?post_type=dt_gallery&p=3082 The post கலைஞர் வன்னியர் பொது சொத்து வாரியம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
The post கலைஞர் வன்னியர் பொது சொத்து வாரியம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/dt_gallery/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
வான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர் /2019/08/05/kalainars-fame/ /2019/08/05/kalainars-fame/#respond Mon, 05 Aug 2019 10:59:51 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=2084 The post வான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

வான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர்!

தி.மு.க செயற்குழுத் தீர்மானம்

தலைவர் கலைஞர் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட, தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் 14.8.2018 – செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கூடியது. கூட்டத்தில் முதல் நிகழ்வாக – மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்குக் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், கழக முன்னோடிகளும் மலர் தூவி வணங்கினார்கள்.

அதனையடுத்து, அவசரச் செயற்குழுக் கூட்டத்துக்குக் கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தலைமையேற்குமாறு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. முன்மொழிந்தார். அதனை, கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. வழிமொழிந்தார்.

அதனையடுத்து , ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் இதய பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கும் தனிச் சிறப்புத் தீர்மானத்தை டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. படிப்பார்’ என, கழகச் செயல் தலைவர் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து. நீண்ட, உருக்கமான தீர்மானத்தை டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. படித்தார். அந்தத் தீர்மானம் படித்து முடிக்கப்பட்டதும் – அதனை நிறைவேற்றும் வகையில், அனைவரும் எழுந்து நின்று, சில மணித்துளிகள் அமைதி காத்தனர்.

இரங்கல் தீர்மானம்

தமிழினத்தின் தனிப் பெருந்தலைவர், முத்தமிழ் அறிஞர், பன்முக ஆற்றல் களஞ்சியம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் கண்ட புத்துலக நாயகர், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்கள் 19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 13 முறையும் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் ஆற்றிய அளப்பரிய பணிகளின் காரணமாக, தொண்டால் பொழுதளந்து பொது வாழ்வில் ஈடுபடுவோர் அனைவரும் பார்த்துப் படித்துப் பயிற்சி பெற்றுப் பின்பற்ற வேண்டிய அரசியல் பண்பாட்டுப் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறார்

     தமிழகத்திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் எண்ணிலா முற்போக்குச் சட்டங்களையும் முன்னோடித் திட்டங்களையும் நிறைவேற்றித் தந்து, அரசு நிர்வாக வரலாற்றில் நிலைத்த புகழைப் பெற்றிருக்கிறார்; அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் வளமும், நலமும் ஏற்படுத்தும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி யிருக்கிறார். பொதுப் போக்குவரத்து நாட்டுடைமை, இலவச நிலம் – குடியிருப்பு மனைப்பட்டா உள்ளிட்ட நிலச் சீர்திருத்தம், கல்வி – வேலைவாய்ப்பு – தொழில் வளர்ச்சி – அடிப்படைக் கட்டமைப்பு – விவசாயிகளின் நலனுக்காக முதன் முதலில் சட்டமன்றத்தில் நங்கவரம் பிரச்சினை பற்றிய கன்னிப் பேச்சு தொடங்கி முதலமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விவசாயிகள் – வேளாண்மை முன்னேற்றத் திற்குக் கையெழுத்திட்ட மகத்தான திட்டங்கள் வரையிலான தலைவர் கலைஞர் அவர்களின் பிரமிப்பூட்டும் சாதனைப் பட்டியலை எடுத்துரைப் பதற்கு ஏடுகள் போதாது.

      

கைரிக்சா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் அமைத்தது உள்ளிட்டவையும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், விவசாயிகளுக்குக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கடைக்கோடி கிராமம் வரை மின் இணைப்புகள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு தன்னிறைவுத் திட்டங்களும், ஊராட்சிகள் தோறும் நூலகங்கள், சென்னையில் உலகத் தலைவர்கள் பார்த்து வியந்த சர்வதேசத் தரத்திலான ஆசியாவின் மிகப்பெரிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் எனத் தலைவர் கலைஞர் அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் கிராமங்களின் நீடித்த – நிலைத்த வளர்ச்சிக்கும் (Sustainable Growth), நகரங்களின் முழுமையான கட்டமைப்பு வசதிகளுக்கும் (All-round Growth) பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்.

தமிழகத்தில் முதன்முதலில், சட்ட நாதன் கமிஷன் அமைத்துச் சமூகநீதிக்கு அசைக்க முடியாத அடித்தளம் ஏற்படுத்தி, தொடர்ந்து காலந்தோறும் உரிய பலன்கள் கிடைக்கச் செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். கல்வி – வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியின மக்களுக்கான இடஒதுக்கீடு களை அளித்து, அவர்தம் சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்காக இறுதிமூச்சு வரை அயராது பாடுபட்ட சமூகநீதிப் போராளி தலைவர் கலைஞர் அவர்கள்.

The post வான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/05/kalainars-fame/feed/ 0
தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! /2019/08/04/ninaivugal-narumanam-ponrathu/ /2019/08/04/ninaivugal-narumanam-ponrathu/#respond Sun, 04 Aug 2019 16:55:57 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=2182 The post தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! – திரு மு.க.ஸ்டாலின்

தலைவர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென்ற உணர்வோடு,இந்த அவசரச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு தொடக்கத்திலேயே இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, அத்தனை பேரும் எழுந்து நின்று நம்முடைய அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறோம்.

பின்னர், தலைவர் அவர்களோடுநெருங்கிப்பழகிய சிலமூத்த மாவட்டக்கழகத்தினுடைய செயலாளர்கள், இயக்கத்தினுடைய முன்னோடிகள் நேரத்தின்அருமையைக் கருதி குறிப்பிட்ட ஒரு சிலரைஅழைத்து அவர்களும் இங்கே உரையாற்றி,அதைத்தொடர்ந்து நம்முடைய துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்அவர்கள், அதற்குப் பின்னால் நான் உரையாற்றக்கூடிய நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.நிறைவாக, நம்முடைய பொதுச் செயலாளர் உரையாற்ற வேண்டும் என்ற நிலையிலே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர் அவர்கள், நான் பேச முடியாது, அந்தச் சூழ்நிலையில் நான் இல்லை. எனவே, யாரும் என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று என்னி டத்திலே ஏற்கனவே சொல்லியிருக் கிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியவர் கள் எல்லாம் குறிப்பிட்டதைப்போல, தலைவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை, நீங்களெல்லாம் தலைவரை இழந்து இருக்கிறீர்கள், நான் தலைவரை மட்டும் அல்ல; தந்தையையும் இழந்து நான் நின்று கொண்டிருக்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக, உடல் நலிவுற்ற நிலையில் தொண்டையிலே ஓர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பேச முடியாத நிலையிலே இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அவருடைய அன்பைப் பெற்று, ஆதரவைப் பெற்று அவருடைய வாழ்த்துகளோடு, செயல் தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொண்டு உங்களின் ஒத்துழைப்போடு கழகப் பணிகளில் நான் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.

கட்சியின் வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட கள ஆய்வு!

அந்த அடிப்படையிலே ஒவ்வொரு மாவட்டமாக நான் ஆய்வு நடத்திட வேண்டுமென்று முடிவெடுத்து, கழக அமைப்புகளை அறிவாலயத்திற்கு இதே கலைஞர் அரங்கத்திற்கு அழைத்து, ஏறக்குறைய இரண்டு, மூன்று மாத காலம் நான் ஆய்வு நடத்தியிருக்கிறேன். கட்சியினுடைய வளர்ச்சிக்காக, கட்சியில் மேலும் புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற அந்த அடிப்படையில் அந்த ஆய்வு நிகழ்ச்சி நடந்தது.

 

அந்த ஆய்வின் ஒவ்வொரு கூட்டத்தி லும் ஒவ்வொரு மாவட்டக் கழக, நகரக் கழக, ஒன்றியக் கழக, பேரூர்க் கழக நிர்வாகிகளோடு நான் கலந்து பேசுகிறபொழுது நிறைவாக அவர்களுக்குச் சொல்லி அனுப்பியது, அனை-வரும் ஒற்றுமையாக இருந்து – ஒன்றுபட்டு உழைத்து – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரக்கூடிய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை உருவாக்கி, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை மலரச்செய்து அப்படி மலருகின்ற அந்தச் சாதனையைத் தலைவர் இடத்தில் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்.அவருடைய காலத்திலேயே அவருடைய காலடியில் கொண்டுசென்று நம்முடைய வெற்றியைக் குவிக்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு கூட்டத்திலும் எடுத்துச் சொன்னேன்.

தலைவருக்கு அளித்த உறுதியைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு!

அண்மையில் ஈரோட்டில் நடை பெற்ற நம்முடைய மண்டல மாநாட்டில்கூட, நான் உரையாற்றுகிறபோது நிறைவாக குறிப்பிட்டுச் சொன்னேன் விரைவில் கழக ஆட்சியை உருவாக்குவோம் – ஆட்சியை தலைவருடைய காலத்திலேயே உருவாக்கி அவரிடத்தில் கொண்டுசென்று ஒப்படைப்போம் என்று சொன்னேன். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாத நிலையிலே இன்று தவித்துக் கொண்டிருக்கிறோம் என்ற ஏக்கத்தோடு நான் நின்று கொண்டிருக்கிறேன்.

தலைவர் உடலை, அவரை உருவாக்கிய அண்ணன் கல்லறைக்குப் பக்கத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்திட வேண்டும் என்று நாமெல்லாம் முடிவெடுத்தோம். அது நம்முடைய முடிவல்ல – தலைவருடைய முடிவு! தலைவர் எண்ணிய எண்ணம்! அவருடைய ஆசை! அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம்.உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்கள் எல்லாம் எங்களிடத்திலே வந்துசொல்லுகிறார்கள்.‘இவ்வளவு நேரம் தான் அவர் உயிர் இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது’ என்ற அந்த நிலை வருகிற போது இனி காப்பாற்றவே வழியில்லை, முடிந்த வரையில் நாங்கள் போராடி வருகிறோம் என்று டாக்டர்கள் கூறிய அந்தச் சூழ்நிலையில் நாங்கள் எல்லாம் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.சோகத்திலே கண்ணீர் மல்க மருத்துவர்களோடுநாங்கள் பேசிக்கொண்டிருந்தாலும் நம்முடைய முன்னோடிகள் எல்லாம் தலைவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டுமே எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தபொழுது பல நண்பர்கள் மூலமாகத் தமிழக அரசுக்குச் செய்தியைச் சொல்லி அனுப்புகிறோம்.

ஆனால் அங்கிருந்து எங்களுக்கு வந்த செய்திகள் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையிலே தான் இருந்தது. அதற்குப் பிறகு நம்முடைய முன்னோடிகள் எல்லாம் என்னிடத்தில் சொன்னார்கள் நாம் நேரடியாக முதலமைச்சரைச் சந்திப்போம் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தால் நிச்சயமாக அவர்கள் நிறைவேற்ற முன்வருவார்கள் என்று சொன்னபோது நான் தயாரானேன்.

தலைவருக்காக எதையும் இழக்கத் துணிந்தேன்!

அப்பொழுது நம்முடைய முன்னோடிகள் எல்லாம் சொன்னார்கள். நீங்கள் வரவேண்டாம் நாங்கள் போகிறோம் – நீங்கள் செயல் தலைவர் – நீங்கள் தலைவருடைய மகன் – நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் வரக்கூடாது. அவர்களைச் சந்திக்க நீ வரக்கூடாது என்று சொன்ன நேரத்தில் இல்லை இல்லை என்னுடைய மானம் மரியாதை கௌரவம் எது போவதாக இருந்தாலும் தலைவருக்காக நான் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறேன் வந்தே தீருவேன் என்று சொல்லி நாங்களெல்லாம் முதலமைச்சரைச் சென்று சந்தித்தோம். சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துச் சொல்கிறோம்.

முதல்வரின் கரங்களைப் பற்றிக் கொண்டு வேண்டினேன்!

நம்முடைய கோரிக்கையை எடுத்துச் சொல்கிறபோது முதலமைச்சர் சொல்லுகிறார், விதிமுறைகளை முடக்க வாய்ப்பில்லை, நாங்கள் சட்ட ஆலோசனை கேட்டிருக்கிறோம். அவர்களும் மறுத்திருக்கிறார்கள் என்றார். நான் அப்போது சொன்னேன், அரசு போடக்கூடிய, அரசு எண்ணக் கூடிய அந்த எண்ணத்தைத்தான் சட்ட ஆலோசகர்கள் சொல்லுவார்கள். நாங்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். ஆகவே, நீங்கள் கட்டாயம் இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினோம்.

இன்னும் வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன், முதலமைச்சருடைய கைகளைப் பிடித்து நான் கெஞ்சிக் கேட்டேன், தலைவருடைய ஆசை – அந்த ஆசையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம், அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டேன்.

அப்பொழுதுகூட அவர்கள், சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக அங்கிருந்து எங்களை விரட்டிவிட வேண்டும் என்பதற்காக, பார்ப்போம் என்று ஒரு வார்த்தை சொன்னார்கள், அதை நம்பி நாங்கள் வெளியே வந்தோம்.

மருத்துவமனையிலே வந்து அமர்ந்து இருக்கிறோம். சரியாக 06.10 மணி அளவிலே தலைவர் கலைஞர் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் எங்களிடத்திலே வந்து சொன்னார்கள். உடனடியாக, ஒரு கடிதத்தை எழுதி அண்ணன் துரைமுருகன் அவர்கள், மற்றும் நம் முன்னோடிகள் சிலரோடு அந்தக் கடிதத்தைக் கையில் கொடுத்து – முறையாகக் கேட்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் வீட்டுக்கு அனுப்பு கிறோம். எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். சென்றார்கள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து விட்டார்கள், என்ன? என்று கேட்கிறோம். மறுத்துவிட்டார்கள்! என்று அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொல்கிறார்கள். எங்களால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம், தொலைக்காட்சிகளில் செய்திகள் வருகிறது. தலைமைச் செயலாளர் அவர்களுடைய அறிவிப்பு வருகிறது.

மூத்த வழக்கறிஞர் வில்சன் வழங்கிய வாக்குறுதி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் கேட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதற்குப் பதில் வேறு இடம் ஒதுக்கப்படுகிறது, என்று தலைமைச் செயலாளரின் அறிவிப்பு வெளிவருகிறது. பார்த்ததும் நாங்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளானோம். பேசிக்கொண் டிருக்கிறபோது, மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் உள்ளே வருகிறார். அவரிடத்திலே விவாதித்தோம்; நான் நீதிமன்றத்திற்குச் செல்லட்டுமா? என்று கேட்கிறார். முடியுமா? என்று கேட்டோம். இல்லை,நாங்கள் இரவே நீதிபதியைச் சென்று சந்திக்கிறோம் என்று சொன்னார்கள். உடனே சென்றார்கள்.

பிளாஷ் நியுஸ் பார்த்து கழகத்தினர் ஆரவாரம்!

அதற்குப் பிறகு 10.30 மணிக்கு விசா ரணை நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.அதற்குப் பிறகு, மறுநாள் காலை 8.30மணி அளவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இங்கு இருக்கக்கூடிய நம்முடைய வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் அவர்கள், விடுதலை அவர்கள், என்.ஆர். இளங்கோ அவர்கள் இன்னும் நம்முடைய கழக வழக்கறிஞர்கள் சிலர் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்முடைய வில்சன் அவர்களுடைய தீவிர முயற்சியின் காரணமாக 10.30 மணிக்குத் தீர்ப்பு வருகிறது. அண்ணா அவர்களின் சமாதிக்கு அருகிலே தலைவர் கலைஞர் அவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்ற தீர்ப்பு வருகிறது. நாங்கள் தலைவரின் உடலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அழுது கொண்டிருக் கின்றோம். எங்களுக்குக் கூட இந்தச் செய்தி முதலில் வரவில்லை. ஆனால், எதிரிலே இலட்சக்கணக்கிலே திரண்டிருக்கக்கூடிய நம்முடைய தோழர்களிடத்தில் இருந்த செல்போனில் ஃபிளாஸ் நியூஸ் என்கிற அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு அவர்கள் முழங்குகிறார்கள்!

கழக வழக்கறிஞர் அணிக்கே பெருமைகள் அனைத்தும்!

பின்னர், செய்தி கிடைத்தது. அந்தச் செய்தியைக் கேட்டு இவ்வளவு பெரிய சோகச் சூழலிலும் அன்றைக்கு நம் எல்லோருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. உள்ளபடியே, எனக்கு நன்றி சொன்னீர்கள், என்னைப் பாராட்டினீர்கள். என்னைப் பொறுத்தவரையிலே, நான் நம்முடைய வழக்கறிஞர் குழுவிற்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும். மீண்டும் சொல்லுகிறேன். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வழக்கறிஞர் அணிக்குத்தான் இந்தப் பெருமை சேரும் – சேரும் – சேரும் என்று நான் இந்த நேரத்திலே சொல்லுகின்றேன்.

அன்று தலைவர் கூறியது!

நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால் என்ன நிலைமை, இந்த இயக்கத்திற்கு எத்தனையோ சோதனைகள் வந்ததுண்டு, அதிலும் குறிப்பாக, ஒருமுறை நம்முடைய கொடிக்கு நம்முடைய உதயசூரியன் சின்னத்திற்கு மிகப்பெரிய சோதனை வந்தது. அது நமக்கு உரிமை உண்டா? எனும் வழக்கு. கொடியும் பயன்படுத்தக்கூடாது, கட்சியினுடைய பெயரைப் பயன்படுத்தக்கூடாது, சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு சூழ்நிலை வரக்கூடிய நிலையிலே, தேர்தல் கமிஷனில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணையின் தீர்ப்பு நமக்குச் சாதகமாக வந்தது.

அந்தத் தீர்ப்பு வந்தவுடன் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களிடத்தில் சொல்லுகிறார். ஒருவேளை தீர்ப்பு மாறாக வந்திருந்தால், நான் அண்ணாவினுடைய சமாதிக்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டிருப்பேன், நீங்கள் எல்லாம் வந்து எனக்கு மலர்வளையம் வைத்திருப்பீர்கள் என்று கூறினார். அதைத்தான் நான் எண்ணிப் பார்த்தேன்.

ஒருவேளை நமக்குத் தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்று சொன்னால், அந்தத் தலைவர் கலைஞருக்குப் பக்கத்திலே என்னைப் புதைக்கக்கூடிய சூழ்நிலைதான் நிச்சயமாக உருவாகியிருக்கும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த நிலை வரவில்லை.

தலைவர் வழிநின்று கடமையை ஆற்றுவோம்!

தலைவர் கலைஞருடைய எண்ணம், அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் மறைந்தும் இந்தப் போராட்டத்திலே வெற்றி பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையிலே அவருக்கு, இன்றைக்கு நாமெல்லாம் வணக்கத்தை, நம்முடைய அஞ்சலியை – திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மூலமாக நாம் தெரிவித்துக் கொண்டிருந்தாலும், இந்தச் செயற்குழுக் கூட்டத்திற்கு வந்திருக்கக்கூடிய உங்களை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை உறுப்பினர்களையும் நான் தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புவது, தலைமைக் கழகத்தின் சார்பில் என்று சொல்வதைவிட நம்முடைய இதயத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய, நம்மை இன்றைக்கும் இயக்கிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்த இயக்கத்தைக் காப்போம், தலைவர் கலைஞர் வழி நின்று நம்முடைய கடமையை ஆற்றுவோம் என்பதுதான்.

தலைவர் கலைஞர் அவர்களை உங்களுடைய உருவிலே நாங்கள் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட தலைவர் கலைஞருடைய எண்ணங்களை அவருடைய செயல்பாடுகளை, அவருடைய நினைவுகளை, அவர் உள்ளத்திலே கொண்டிருந்த அந்த உணர்ச்சிகளை, அந்த உணர்வுகளைக் காப்பற்ற உறுதி எடுப்போம்! உறுதி எடுப்போம்! உறுதி எடுப்போம்

The post தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/04/ninaivugal-narumanam-ponrathu/feed/ 0
வரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! /2019/08/04/parliament-adjourns-for-the-first-time-in-history/ /2019/08/04/parliament-adjourns-for-the-first-time-in-history/#respond Sun, 04 Aug 2019 16:34:58 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=910 The post வரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

வரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக எம்.பி.யாகவோ, அல்லது முன்னாள் எம்.பி.யாகவோ இல்லாத மறைந்த முதல்வர் கலைஞருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கலைஞர் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி ரத்த அழுத்தக் குறைபாடு காரணமாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கலைஞர் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் முதுமை காரணமாக அவரின் உடல்உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், நேற்று மாலை 6.10மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது.

கலைஞரின் மறைவுக்குப் பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் கலைஞரைப் போற்றினர்.

இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும், எம்.பி.யாக இருந்தவருக்கும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது இல்லை. ஆனால், நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாகக் கலைஞர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவை கூடியதும் கலைஞர் மறைவு குறித்த செய்தியை வாசித்து, இரங்கல் தெரிவித்தார். மேலும், அவையை ஒத்திவைப்பது குறித்துப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி, அவை ஒத்திவைப்பது குறித்து முடிவு செய்து அறிவித்தார்.

கலைஞர் நாட்டின் தலைசிறந்த தலைவர், உயர்ந்த தலைவர் அவருக்காக நாடாளுமன்றத்தை ஒருநாள் ஒத்திவைப்பதை ஏற்கிறோம் எனப் பல்வேறு கட்சித் தலைவர் களும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.

முன்னதாக, திமுக தலைவர் கலைஞர் குறித்து புகழாரம் சூட்டி வெங்கையா நாயுடு பேசினார். இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்,

5 முறை முதல்வராகவும் கலைஞர் செயல்பட்டவர். அதுமட்டுமல்லாமல், கலை, இலக்கியம், நாடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனிமுத்திரை பதித்தவர் கலைஞர்.

தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழக மக்கள் முன்னேற்றத்துக்காகவும் கடுமையாக உழைத்தவர். அவரின் மறைவு, நாட்டுக்குப் பேரிழப்பு, மிகச்சிறந்த நிர்வாகியை, சமூகத்தொண்டரை, எழுத்தாளரை நாடு இழந்துவிட்டது என்று புகழாரம் சூட்டினார்.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது குறித்தும், கலைஞர் மறைவு குறித்தும் அறிவிக்கப்பட்டது. மக்களவையிலும் கலைஞர் மறைவு குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அதன்பின் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார், திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பதை அரசு ஏற்கிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மக்களவையையும் ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

The post வரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/04/parliament-adjourns-for-the-first-time-in-history/feed/ 0
முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் /2019/08/03/anti-hindi-protest-at-age-14/ /2019/08/03/anti-hindi-protest-at-age-14/#respond Sat, 03 Aug 2019 15:47:17 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=877 The post முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம்

சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி, 1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள், பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கி ஆணை வெளியிட்டார். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடிக்க இதுவே காரணமாக அமைந்தது. இந்தித் திணிப்பை எதிர்த்து நீதிக்கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்துகொண்டிருந்த கலைஞருக்கு, 14 வயது. தன்னுடைய கையில் தமிழ்க் கொடியை பிடித்துக்கொண்டு, இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டார். “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே” என்று முழக்கமிட்டபடி சென்ற கலைஞர், மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது, இந்தி ஆசிரியரிடம் அடி வாங்கும் நிலை ஏற்பட்டது. அடி வாங்கினாலும் தமிழ் ஆர்வம் குறையாத கலைஞர், தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

The post முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/03/anti-hindi-protest-at-age-14/feed/ 0
மூத்த பிள்ளை “முரசொலி’ தொகுத்தளிக்கும் மலர் /2019/08/03/murasoli-tribute-to-kalaignar/ /2019/08/03/murasoli-tribute-to-kalaignar/#respond Sat, 03 Aug 2019 15:30:38 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=861 The post மூத்த பிள்ளை “முரசொலி’ தொகுத்தளிக்கும் மலர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

மூத்த பிள்ளை “முரசொலி’ தொகுத்தளிக்கும் மலர் – முரசொலி செல்வம்

நிறைந்து வாழும் கலைஞர் – இது தனது தந்தைக்கு மூத்த பிள்ளை “முரசொலி” தொகுத்தளிக்கும் மலர்! தலைவர் கலைஞரின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “முரசொலி”யின் இந்த முயற்சி, இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துவதைப் போன்றதுதான்! காலம் பலரது பயணத்தை ஏனோ முடிக்கிறது! அப்படித்தான் ஓராண்டுக்கு முன் கலைஞரின் நெடிய பயணத்தை முடித்ததாகக் கருதி இருந்தது!

காலம் நினைத்தது ஒன்று, நடந்ததோ வேறு! கடந்து சென்ற ஓராண்டு காலமும் தமிழகம் கலைஞரோடுதான் பயணித்துள்ளது! ஆம்; அதனைப் பயணிக்க வைத்தவர் நமது தளபதி! “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” – என எண்ணிப் பெருமிதம் கொள்ளும் வகையில், தனது, “அப்பா”வாக மட்டுமின்றி, தான், “தலைவர்” ஆகவும் ஏற்றுக்கொண்ட, தன் தந்தையின் புகழ், மங்காது காத்திட சிலைத் திறப்பு நிகழ்ச்சிகள், புகழஞ்சலிக் கூட்டங்கள் என நடத்தி வருகிறார் தளபதி. அந்த நிகழ்ச்சிகளில் இன்றைய சமுதாயம் பார்த்துப் பிரமித்துக் கொண்டிருக்கும் பலரை நெஞ்சு நெகிழப் பேச வைத்தார். அவர்களோ, அவர்கள் பார்த்துப் பிரமித்த ஒரு மாமனிதர் குறித்து உயர்வு நவிற்சியின்றி எடுத்துரைத்த உண்மைகளின் தொகுப்பை உள்ளடக்கி வருவதுதான் “நிறைந்து வாழும் கலைஞர்” மலர்.

தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்கள் பலவற்றின் தாளாக, அதில் பதிந்த எழுத்தாக, அதற்கான காரணமாக, காரணியாக, உந்துதலாக விளங்கிய மனிதாபிமானம் மாண்புடைத் தலைவனுக்கு, “முரசொலி” எடுத்திடும் இந்த மலர், காலக் கருவூலமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த நினைவு மலர் சிறப்பாக அமைய அட்டைப் படத்திலிருந்து பக்கத்துப் பக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்குத் தனது ஓயாத பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி, மலர்க் குழுவினரோடு அன்றாடம் அமர்ந்து தக்க ஆலோசனைகளைத் தந்தார் தளபதி. “அவாள் மலருக்கு சவால்” – என “முரசொலி” வெளியிட்ட முதல் பொங்கல் மலரிலிருந்து, மாநாட்டு மலர்கள், அண்ணா பிறந்த நாள் மலர்கள் என வெளிவந்த பல மலர்கள் கலைஞரின் மேற்பார்வையில் அவரது ஆலோசனைகளை ஏற்று வெளி வந்துள்ளன.

ஒவ்வொரு நாளும், தன் ஓய்வற்ற பணிகளுக்கிடையே சில மணிகளை ஒதுக்கி மலர் வேலைகளைக் கண்காணிப்பார் கலைஞர். இன்று மலர்ப் பணிகளில் தளபதி காட்டிடும் முனைப்புகளை, ஆர்வத்தைக் காணும்போது, அங்கேயும் “கலைஞர்” தான் தென்படுகிறார்! “காக்கைச் சிறகினிலே நந்த லாலா – நின்றன் கரியநிறந் தோன்றுதையே, நந்த லாலா!” – என்பது போல, “தளபதி” யின் கடின உழைப்பிலே தலைவர் “கலைஞர்” தெரிகிறார். அட்டைப் படம் எப்படி அமைய வேண்டும், பக்கங்களின் வடிவமைப்பு எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையெல்லாம் மலர்க் குழுவினருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கிறார்!

கழகத் தலைவர் தளபதியின் மேற்பார்வையில் மலர் சிறந்து விளங்க இரவு பகல் பாராது உழைத்திட்ட மலர்க் குழுவைச் சேர்ந்த முன்னாள் துணை வேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், கலைஞர் செய்திகள் ஆசிரியர் ப.திருமாவேலன், புலவர் முத்து.வாவாசி ஆகியோருக்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு மற்றும் தலைவர் கலைஞரின் செயலாளர்களாகச் செயல்பட்ட முனைவர் கே.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்., கே.சண்முகநாதன் முதலியோருக்கும், உடனிருந்து ஒத்துழைப்பு நல்கிய முரசொலி ஆசிரியர் குழுவினருக்கும், அலுவலர்களுக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் மலர் அழகுற அமைய அருந்துணையாக இருந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ, அவர்களுக்கும், அரசு ஆர்ட்ஸ் நிறுவனத்தினருக்கும் “முரசொலி” சார்பில் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முரசொலி செல்வம்
ஆசிரியர் – முரசொலி நாளிதழ்

The post மூத்த பிள்ளை “முரசொலி’ தொகுத்தளிக்கும் மலர் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/03/murasoli-tribute-to-kalaignar/feed/ 0
கலைஞரின் நாடகங்கள் /2019/08/03/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ /2019/08/03/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Sat, 03 Aug 2019 14:15:20 +0000 /?p=2979 The post கலைஞரின் நாடகங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

கலைஞரின் நாடகங்கள்

தமிழ் சொல்லுக்கு அளப்பரிய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு கலைஞரின் நாடகங்கள் ஒரு சாட்சி. நாடகங்களில் தான் சொல்ல விரும்பும் ஆழமான கருத்துக்களை எளிதில் பொது மக்களை கவரும் மேடையில் அமைப்பதில் அவர் வித்தகர்.  சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அரசியல் செய்திகள் போன்றவை அவரது நாடகங்களில் பின்னிப் பிணைந்திருக்கும். அடித்தள மக்களின் அவலக் குரல் அவரின் நாடகத்தில் எதிரொலித்தன இவையே பிற்காலத்தில் அவரது அரசியல் நோக்கங்களுக்கு துணை செய்தன.

நாடகத்தைப் பற்றி கலைஞர் கூறுகையில் “நாடக இலக்கியம் போல விரைந்து மனமாற்றம் உண்டாக்கக் கூடிய ஆற்றல் வேறு எதற்கும் இல்லை அதனால்தான் அரசியல் கருத்துக்களை பண்பாடு கெடாமல் தரம் தாழாமல் அள்ளி தெளிப்பதற்கு நாடக இலக்கியத்தை கருவியாக பயன்படுத்திக் கொண்டேன்” என்றார்.

“தூக்குமேடை, மகான் பெற்ற மகான்” போன்றவை அவரது சமூக சீர்திருத்த நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுகள். அதேபோல் நச்சுக்கோப்பை, சாக்கிரட்டீசு போன்ற நாடகங்கள் மூடநம்பிக்கை எதிர்த்து பிரச்சாரம் செய்தன.

“குடிசைதான் ஒருபுறத்தே கூரிய வேல் வாள் வரிசையாய் வைத்திருக்கும்” எனத் தொடங்கும் புகழ்மிக்க வசனம் இடம்பெற்ற நாடகம் “பரப்பிரம்மம்”. புறநானூற்றுப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாடகத்தின் மூலம் வசூலான தொகையை தஞ்சை புயலில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கலைஞர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், ராமாயணத்தை கிண்டல் செய்து எழுதிய பரதாயனம் போன்ற இலக்கிய நாடகங்கள் பலவற்றை கலைஞர் தனக்கே உரிய தனித்தன்மையுடன் எழுதினார்.

கலைஞரின் “திருவாளர் தேசியம்பிள்ளை” போன்ற நாடகம் தேர்தல் பிரச்சாரத்திற்காக, காங்கிரஸ் கட்சியை நையாண்டியுடன் விமர்சிப்பதாக அமைந்திருக்கும். திமுகவிற்கு உதயசூரியன் சின்னமாக கிடைத்த பிறகு அதனை பிரபலப்படுத்துவதற்காக “உதயசூரியன்” என்ற பெயரிலேயே நாடகம் ஒன்றை இயற்றினார் கருணாநிதி.  இப்படி நாடகத்தை சமூக மாற்றம், பகுத்தறிவு, போன்றவற்றுடன் தேர்தல் அரசியல் பிரச்சாரத்திற்கான கருவியாகவும் கலைஞர் திறமையுடன் கையாண்டார்.

கலைஞர், முதன்முதலில் எழுதி அரங்கேற்றிய நாடகம், ‘பழனியப்பன்’. இது, திருவாரூர் பேபி டாக்கீஸில், 1944-ம் ஆண்டு அரங்கற்றப்பட்டது. பின்னர் இந்த நாடகம் ‘நச்சுக்கோப்பை’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் அறங்கேற்றம் செய்யப்பட்டது.  ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’, ‘ஒரே ரத்தம்’, ‘காகிதப்பூ’, ‘நானே அறிவாளி’, ‘வெள்ளிக்கிழமை’, ‘உதயசூரியன்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’, ‘அனார்கலி’, ‘சாம்ராட் அசோகன்’, ‘சேரன் செங்குட்டுவன்’,‘நாடகக் காப்பியம்’, ‘பரதாயணம்’  உட்பட 21 நாடகங்களை எழுதியுள்ளார் கலைஞர்.

‘பராசக்தி’ திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஓர் இதழில், பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ‘பரப்பிரம்மம்’ என்ற பெயரில் நாடகம் எழுதிய கலைஞர், அதை மாநிலம் முழுவதும் அறங்கேற்றம் செய்தார்.  1957-ம் ஆண்டு, தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக, ‘உதயசூரியன்’ என்ற நாடகத்தை எழுதினார்.

The post கலைஞரின் நாடகங்கள் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/03/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு /2019/08/03/firstday-of-thai-month-is-tamil-new-year/ /2019/08/03/firstday-of-thai-month-is-tamil-new-year/#respond Sat, 03 Aug 2019 11:05:51 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=761 The post தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

பெரும் புலவரும் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவருமான மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியம் பிள்ளை, சைவ பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட கூட்டத்தில்,

“திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும், அதுமுதல் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாக பின்பற்றுவது என்றும், வழக்கத்திலுள்ள ஆங்கில ஆண்டுடன் 31 ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டுவரும் என்றும், அதனையே தமிழாண்டு என கொண்டாடுவது என்றும்” முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதற்குப் பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், சுரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.போ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி.ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக்கவிஞர் அகில இந்திய தமிழர் மாநாட்டில்,

“தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும்,

பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும்”அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தமிழ் அறிஞர் பெருமக்கள் எடுத்த முடிவுகளை முதலமைச்சர் பொறுப்பிலிருந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்கட்டமாக 1971-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நாட்குறிப்பிலும், 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசு அரசிதழிலும் வெளியிட்டு நடைமுறைப்படுத்தினார்கள்.

அடுத்த கட்டமாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள், “தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் “ என்பதற்கான மசோதா ஒன்றினை 1-2-2008 அன்று சட்டசபையில் தாக்கல் செய்து அனைத்து கட்சியினரும் ஏற்கும் வண்ணம் சட்டமாக்கி சரித்திர சாதனை ஒன்றை நிகழ்த்தினார். இதனை அனைத்து தமிழ் அறிஞர்களும், தமிழக மக்களும் வரவேற்று மகிழ்ந்தனர்.

The post தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/03/firstday-of-thai-month-is-tamil-new-year/feed/ 0
கை ரிக்சா ஒழிப்பு /2019/08/03/abolition-of-hand-rickshaws/ /2019/08/03/abolition-of-hand-rickshaws/#respond Sat, 03 Aug 2019 10:33:23 +0000 http://kalaignar.dmk.in/wp/dmk/website/?p=748 The post கை ரிக்சா ஒழிப்பு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

கை ரிக்சா ஒழிப்பு

ஒரு காலத்தில் சென்னையிலும், கடலூரிலும் 2000க்கும் மேற்பட்ட கைரிக் ஷாக்கள் ஓடிக்கொண்டு இருந்தன. சென்னை நகர தார்ச்சாலைகளில் உச்சி வெயிலில் கொழுத்த உருவம் கொண்ட ஒரு மனிதனை உட்கார வைத்து ஒட்டிய உடல் கொண்ட இன்னொரு வலுவிழந்த மனிதன் அந்த ரிக்சாவை இழுத்துச் செல்லும் கொடிய கட்சி நெஞ்சை உலுக்கக் கூடியதாக இருந்தது. இப்படி தினம் தினம் இந்த தொழிலில் அல்லல்படும் அந்த தொழிலாளி தமக்கு சைக்கிள் ரிக் ஷாவோ ஆட்டோ ரிக்சாவோ வழங்கிட வேண்டுமென கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.

இந்நிலையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 3.6.1973 முதல் அந்த கைரிக் ஷாக்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டி கைரிக் ஷா உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கியதுடன் அவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக் ஷாக்களையும் வழங்கினார்கள்.
சமூகத்தின் அடித்தளத்தில் கிடந்து உழலும் சாதாரண சாமான்ய நடுத்தர மக்களின் நல்வாழ்வைக் குறித்தே எந்நேரமும் சிந்தித்து செயலாற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனையில் பூத்த புரட்சிகரமான திட்டம் இது. மனிதாபிமானத்துடன் கலைஞர் எடுத்த நடவடிக்கை இது. மனிதனை அமர்த்தி மனிதனே இழுக்கும் அவலத்துக்கு கலைஞர் முற்றுப்புள்ளி வைத்த நாள் இது.

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் அப்போதைய ராஜாஜி மண்டபத்தின் முன்பாக நடைபெற்ற அந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் சைக்கிள் கைரிக் ஷாக்களை தலைவர் கலைஞர் கரங்களிலிருந்து இலவசமாக பெறுவதற்கு வந்த பாட்டாளி தோழர்கள் அதற்கு முன்பாக தாங்கள் இழுத்து வந்த கைரிக் ஷாக்களை அரசிடம் ஒப்படைத்தது கண்கொள்ளாக் காட்சியாகும்.

சைக்கிள் ரிக் ஷாக்களை கழக அரசு ஒழித்ததின் நினைவாக அந்த கைரிக் ஷாவினை கலைஞர் அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைத்ததையும் இவ்வேளையில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
தொழிலாளர்களின் உரிமைக்காக எந்நாளும் முழக்கமிடும் பொதுவுடமை இயக்கங்கள் ஆண்ட மேற்குவங்கத்தின் கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் கூட பல்லாயிரக்கணக்கானோர் இன்னமும் கைரிக் ஷாக்கள் இழுத்து பிழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

The post கை ரிக்சா ஒழிப்பு appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/08/03/abolition-of-hand-rickshaws/feed/ 0
கலைஞர் கருணாநிதி /dt_gallery/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf/ Sat, 03 Aug 2019 08:35:15 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?post_type=dt_gallery&p=2049 The post கலைஞர் கருணாநிதி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
The post கலைஞர் கருணாநிதி appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>